Thursday, July 21, 2016

ஹமாஸ் (Harakat Al Muqawamah AlIslamiyah) இன் அறிமுகம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகதுஹு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.

ஹமாஸ் இயக்கம் பற்றிய ஆனந்த விகடன் மற்றும் சில இணையத்தளத்தில் வெளியானவற்றின் ஒரு தொகுப்பு இதன் மூலம் ஹமாஸ் பற்றிய உண்மையை அறிந்து கொள்ளவதற்கு உதவியாக இருக்கும் என் நம்புகின்றேன். இன்ஷா அல்லாஹ்.

ஹரக்கத் அல் முக்காவாமா அல் இஸ்லாமியா (Harakat Al Muqawamah AlIslamiyah) என்கிற நெடும்பெயரின் எளிய சுருக்கம்தான் ஹமாஸ் (Hamas). 

பொதுவாக டெல் அவிவில் குண்டு வெடித்தது என்கிற செய்தி வரும்போதெல்லாம் ஹமாஸின் பெயர் அடிபடுவதைப் பார்த்திருப்பீர்கள். மற்றபடி அந்த இயக்கத்தைப் பற்றி மேலதிக விவரங்கள் பெரும்பாலும் வெளியே வராது. அதிகம் படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லத்தக்க மிகப்பெரிய பண்டிதர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் அமைப்பு இது. இன்றல்ல; தொடக்கம் முதலே அப்படித்தான். ஆனால் அல் கொய்தா என்று சொன்னதுமே ஒசாமா பின்லேடனின் முகம் நினைவுக்கு வருவது மாதிரி, ஹமாஸ் என்றதும் யார் முகமும் பெயரும் அடையாளமும் நமது நினைவில் வருவதில்லை அல்லவா? அதுதான் ஹமாஸ். உண்மையில் அல் கொய்தாவைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது; அளவிலும் செயல்திறனிலும் பெரிய அமைப்பு இது.

ஆனால் அல் கொய்தா மாதிரி ஊரெல்லாம் குண்டு வைத்து, உலகெல்லாம் நாசம் செய்யும் அமைப்பு அல்ல இது. மாறாக, பாலஸ்தீனின் விடுதலைக்காக மட்டும், இஸ்ரேலுக்கு எதிராக மட்டும் செயல்படும் ஓர் அமைப்பு. பாலஸ்தீனுக்கு வெளியே ஹமாஸுக்குத் தீவிரவாத இயக்கம் என்று பெயர். ஆனால் பாலஸ்தீனுக்குள் அது ஒரு போராளி இயக்கம் மட்டும்தான். இன்றைக்கு பாலஸ்தீன் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்றாக விளங்கும் ஹமாஸ், ஏன் பி.எல்.ஓ.மாதிரி ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அரசியல் இயக்கமாக உருப்பெறவில்லை என்கிற கேள்விக்கு ஒரே பதில்தான்.

பி.எல்.ஓ.வுக்கு அரசியல் நோக்கம் மட்டுமே உண்டு. ஹமாஸின் அடிப்படை நோக்கம் மதம் சார்ந்தது. இஸ்ரேல், பாலஸ்தீன் பிரச்னையை இன்றுவரை யூத முஸ்லிம் பிரச்னையாக மட்டுமே பார்க்கிற அமைப்பு அது. அதனால்தான் பி.எல்.ஓ.வில் இணையாமல் தனியாகத் தனக்கென ஒரு பாதை வகுத்துக்கொண்டு பி.எல்.ஓ.வுக்கு இணை அமைப்பு போலச் செயல்படத் தொடங்கியது ஹமாஸ்.

யூதர்களின் அராஜகங்கள் அனைத்துக்கும் ஒரு தடுப்புச் சக்தியாக விளங்கக்கூடியவர்கள் என்கிற அறைகூவலுடன் (ஹமாஸின் முழுப்பெயரின் நேரடியான அர்த்தமே இதுதான்) பாலஸ்தீன் விடுதலைப் போரில் ஹமாஸ் குதித்தபோது, ஏற்கெனவே அங்கே சுமார் இருபது போராளி இயக்கங்கள் இயங்கிக்கொண்டிருந்தன. ஆனால் எந்த இயக்கத்திலும் படித்தவர்கள் கிடையாது. அல்லது அரைகுறைப் படிப்பு. எந்த ஒரு விஷயத்தையும் உள்ளார்ந்து யோசித்து, அலசி ஆராய்ந்து செயல்படக் கூடியவர்களாக அப்போது யாரும் இல்லை.

ஹமாஸின் பலமே, படித்தவர்களால் வழிநடத்தப்படும் இயக்கம் என்பதுதான். இஸ்லாமிய மார்க்கக் கல்வியில் கரைகண்ட பலபேர் அதில் இருந்தார்கள். லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டக்கூடிய பல மிகப்பெரிய கட்டுமான வல்லுநர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், தத்துவ ஆசிரியர்கள், முன்னாள் ராணுவத் தளபதிகள், மதகுருக்கள், ஆராய்ச்சியாளர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஹமாஸை வழி நடத்தத் தொடங்கினார்கள்.

இத்தனை பெரிய ஆட்களுக்கெல்லாம் துப்பாக்கி தூக்குவதைத் தவிர, வேறு யோசனையே வராதா என்று ஒரு கணம் தோன்றலாம். இந்தியா போன்ற பிரச்னைகள் அதிகமில்லாத தேசத்தில், அதிலும் குறிப்பாக ஜனநாயக தேசத்தில் அமர்ந்துகொண்டு, பாலஸ்தீன் பிரச்னையைப் பார்க்கும்போது, சில விஷயங்கள் இப்படித்தான் அந்நியமாகத் தோன்றும். ஆயுதப்போராட்டம் தவிர வேறு எதுவுமே உபயோகப்படாது என்று, அத்தனை பேருமே அங்கே முடிவு செய்து களத்தில் இறங்கியவர்கள் என்பதை நினைவில் கொள்ளுவது, ஒவ்வொரு கட்டத்திலும் இங்கே அவசியமாகிறது. ஏனெனில் பாலஸ்தீனிய அரேபியர்களின் எந்த ஒரு நியாயமான கோரிக்கைக்கும் இஸ்ரேல் அரசோ, மற்ற தேசங்களின் அரசுகளோ, செவி சாய்க்கவே இல்லை என்பதுதான் சரித்திரம் சுட்டிக்காட்டும் உண்மை. என்றைக்கு பிரிட்டன், பாலஸ்தீன் மண்ணில் இஸ்ரேல் என்றொரு தேசத்தை உருவாக்குவது என்று முடிவு செய்ததோ, அன்றைக்கு ஆரம்பித்த சிக்கல் இது. பாலஸ்தீனியர்களுக்கென்று பிரித்துக்கொடுக்கப்பட்ட மேற்குக்கரையையும் காஸாவையும் கூட இஸ்ரேல் அபகரித்தபோது, அதன் தீவிரம் அதிகமானது. அந்தத் தீவிரக் கணத்தில் உதித்த இயக்கம்தான் ஹமாஸ்.

ஹமாஸ் தொடங்கப்பட்டபோது, அதன் நோக்கமாகச் சொல்லப்பட்டவை இவைதான்:

1. மேற்குக் கரை, காஸா உள்பட இஸ்ரேலின் வசம் இருக்கும் பாலஸ்தீனிய நிலப்பரப்பு முழுவதையும் வென்றெடுப்பது. இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிப்பது. (அதாவது இங்கே யூதர்களை என்று பொருள்.)

2. தப்பித்தவறி பாலஸ்தீன் என்றாவது ஒரு நாள் மதச்சார்பற்ற தனியொரு தேசமாக அறியப்படவேண்டி வருமானால், அதை எதிர்த்தும் போராடுவது; பாலஸ்தீனை ஒரு முழுமையான இஸ்லாமிய தேசமாக ஆக்குவது.

இந்த இரண்டு நோக்கங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று மிக வெளிப்படையாகச் சொல்லிவிட்டுத்தான், ஹமாஸ் இயக்கத்தினர் துப்பாக்கிகளை வாங்க ஆரம்பித்தார்கள்.

ஹமாஸ் தோன்றியபோது, பி.எல்.ஓ.வின் தனிப்பெரும் தலைவராக யாசர் அராஃபத் அடையாளம் காணப்பட்டு, மேற்குக் கரைப் பகுதி கிட்டத்தட்ட அவரது கோட்டை போலவே இருந்தது. யாசர் அராஃபத் அங்கே தலைவர் மட்டுமல்ல. ஒரு ரட்சகர். அவரைவிட்டால் பாலஸ்தீனிய முஸ்லிம்களுக்கு வேறு நாதி கிடையாது என்கிற நிலைமை. 

ஆகவே, ஹமாஸின் வளர்ச்சியும் வேகமும் மேற்குக்கரை வாசிகளுக்கு முதலில் ஒருவிதமான பயத்தைத்தான் விளைவித்தது. ஹமாஸ் என்கிற இயக்கம், பி.எல்.ஓ.வுக்கு எதிராகத் திசை திரும்பிவிடுமோ என்கிற பயம். ஏன் ஹமாஸும் பி.எல்.ஓ.வில் இணையக்கூடாது என்று மக்கள் ஆற்றாமையுடன் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். ஆனால் ஹமாஸின் நிறுவனர்கள், அந்த விஷயத்தில் மிகவும் தெளிவாக இருந்தார்கள். இரு அமைப்புகளின் அடிப்படை நோக்கமும் ஒன்றுதான் என்றாலும் ஹமாஸுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்கள் இருந்ததால், வீணாகத் தன்னால் பி.எல்.ஓ.வும் யாசர் அராஃபத்தும் தர்மசங்கடத்துக்கு உள்ளாகக் கூடாது என்று நினைத்தார்கள். அதனாலேயே தனித்து இயங்கத் தீர்மானித்தார்கள். 

இதனால் மேற்குக்கரைப் பகுதியில், தொடக்ககாலத்தில் ஹமாஸுக்கு செல்வாக்கு என்று ஏதும் உண்டாகவில்லை. மாறாக, காஸாவில் ஹமாஸ் அபரிமிதமான வளர்ச்சி கண்டது. காஸா பகுதியில் வசித்துவந்த ஒவ்வொரு தாயும் தன் மகன் எந்த விதத்திலாவது ஹமாஸுக்கு சேவையாற்றவேண்டும் என்று விரும்பியதாகக் கூடச் சொல்லுவார்கள். அங்கே உள்ள ஆண்கள் அத்தனை பேரும் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஹமாஸுக்கு நன்கொடையாக அனுப்பிவைப்பார்கள். இன்றைக்குப் பல தீவிரவாத இயக்கங்கள் கட்டாய வரிவசூல் செய்வது உலகறிந்த விஷயம். (நமது நாட்டில் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் உல்ஃபா போன்ற பல இயக்கங்கள், இப்பணியைக் கர்மசிரத்தையாக இன்றும் தொடர்ந்து வருகின்றன. அப்படியொரு சாத்தியம் இருக்கிறது என்கிற யோசனை அவர்களுக்கு வந்ததே, ஹமாஸுக்கு காஸா பகுதி மக்கள் மனமுவந்து நிதியளித்ததைப் பார்த்த பிறகுதான்! மனமுவந்து மக்கள் அளிக்காத இடங்களிலெல்லாம் கட்டாய வசூல் என்கிற கலாசாரம் தோன்றிவிட்டது!)

ஒரு தீவிரவாத இயக்கமாக இருந்தால், இந்தளவு மக்கள் செல்வாக்கு இருக்குமா? உண்மையில் ஹமாஸின் பணிகள் பிரமிப்பூட்டக்கூடியவை. ஹமாஸின் தற்கொலைப்படைகளும், கார் குண்டுத் தாக்குதல்களும் பிரபலமான அளவுக்கு அந்த அமைப்பின் சமூகப்பணிகள் வெளி உலகுக்குத் தெரியாமலேயே போய்விட்டன.

மேற்குக் கரையும் சரி, காஸாவும் சரி, பாலஸ்தீனிய அரேபியர்கள் வாழும் இஸ்ரேலின் எந்த மூலை முடுக்காயினும் சரி. பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்காக ஹமாஸ் தனியொரு அரசமைப்பையே வைத்திருந்தது. சாலைகள் போடுதல், குடிநீர் வசதி செய்துதருதல், வீதிகளில் விளக்குகள் போட்டுத்தருதல், குப்பை லாரிகளை அனுப்பி, நகரசுத்திகரிப்புப் பணிகள் ஆற்றுதல் என்று ஹமாஸின் 'அரசாங்கம்' செய்த மக்கள் நலப்பணிகள் ஏராளம். (இன்று இதெல்லாம் இல்லை. சுத்தமாக இல்லை என்பதையும் சொல்லிவிட வேண்டும்.)

இந்தக் காரியங்களெல்லாம் ஒழுங்காக நடப்பதற்காகத் தனியொரு 'நாடாளுமன்றமே' ஹமாஸில் நடத்தப்பட்டது. முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குத் தொகுதி தொகுதியாகப் பிரித்துத் தந்துவிடுவார்கள். மக்கள் பணிகளுக்கான செலவுக்குப் பணம்?

தயங்கவே மாட்டார்கள். இஸ்ரேலிய இலக்குகள் எது கண்ணில் பட்டாலும் உடனடியாகத் தாக்கப்படும். வங்கிகள், கருவூலங்கள், மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் என்று எதையும் எப்போதும் தாக்குவார்கள். சாக்குமூட்டையில் பணத்தைக் கட்டிக்கொண்டுபோய் ஹமாஸுக்கென்று தனியே இயங்கிய வங்கியொன்றில் சேகரித்து, கணக்கெழுதிவிடுவார்கள். 

அதன்பின் தொகுதி வாரியாக 'நிதி' பிரித்தளிக்கப்படும். இஸ்ரேலிய அரசு எதையெல்லாம் செய்யத் தவறுகிறதோ, அதையெல்லாம் அங்கே ஹமாஸ் செய்யும். இடிக்கப்பட்ட மசூதிகளைச் செப்பனிட்டு, புதுப்பொலிவுடன் மீண்டும் கட்டித்தருவது, மதப் பள்ளிக்கூடங்கள் நடத்துவது, மருத்துவமனைகள் கட்டுவது, மூலிகை மருந்துகளுக்காக மூலிகைத் தோட்டங்கள் அமைப்பது என்று எத்தனையோ பணிகளை ஹமாஸ் செய்திருக்கிறது.

இதற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல இன்னொரு பக்கம் சற்றும் இரக்கமில்லாமல், யூதர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றும் போடுவார்கள். பைக் வெடிகுண்டு, கார் வெடிகுண்டு, சூட்கேஸ் வெடிகுண்டு ஆகிய மூன்றையும் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகப்படுத்தியது ஹமாஸ்தான். இவற்றுள் கார்குண்டு வெடிப்பில் ஹமாஸ் இயக்கத்தினர் நிபுணர்கள். உலகின் எந்த மூலையிலும் எந்த யூத இலக்கின்மீது கார் வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு ஹமாஸ்தான் என்று கைகாட்டிவிட முடியும்.

இந்தக் காரணத்தால்தான், பாலஸ்தீனிய அரேபியர்கள் ஹமாஸை எந்தளவுக்குக் கொண்டாடுகிறார்களோ, அதே அளவுக்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஹமாஸை அச்சமூட்டும் பயங்கரவாத இயக்கமாகத் தொடர்ந்து கண்டனம் செய்துவருகின்றன.

ஹமாஸின் தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் அடிக்கடி பரபரப்பூட்டுபவை. என்ன செய்தும் தடுத்துநிறுத்தப்பட முடியாதவை. இஸ்ரேல் அரசே எத்தனையோ முறை ஹமாஸுடன் சமரசப் பேச்சுக்கு முயற்சி மேற்கொண்டிருக்கிறது. ஆனால், ஹமாஸ் சம்மதித்ததில்லை.

'எங்களுக்கு இஸ்ரேலியப் பொதுமக்கள், இஸ்ரேலிய ராணுவம் என்கிற பாகுபாடு கிடையாது. ஒவ்வொரு இஸ்ரேலியக் குடிமகனும் கட்டாயமாக ஒரு வருடமாவது ராணுவச் சேவையாற்றவேண்டும் என்று அவர்கள் விதி வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நாங்கள் சிவிலியன்களைத் தாக்குவதாகச் சொல்லுவது தவறு. அனைத்து யூதர்களுமே குறைந்தபட்சம் ஒரு வருடமாவது ராணுவத்தில் இருந்திருக்கிறார்கள் அல்லவா? அதனால், யாரை வேண்டுமானாலும் தாக்குவோம். அபகரிக்கப்பட்ட எங்கள் நிலம் மீண்டும் எங்கள் வசம் வந்து சேரும்வரை தாக்கிக்கொண்டேதான் இருப்போம்' என்பது ஹமாஸின் பிரசித்தி பெற்ற கோஷம்.

சந்தேகத்துக்கு இடமில்லாமல் இஸ்ரேலுக்கு ஹமாஸ் ஒரு நிரந்தரத் தலைவலி என்பது 1970 - களின் மத்தியில் மிகவும் வெட்டவெளிச்சமாகத் தெரிய ஆரம்பித்தது. இஸ்ரேலுக்கு உதவி செய்யக்கூடிய அத்தனை நாடுகளுக்குமே என்றாவது ஒரு நாள் ஹமாஸால் பிரச்னை வரத்தான் செய்யும் என்று அமெரிக்கா எச்சரித்தது.

ஆகவே ஹமாஸின் செயல்பாட்டைக் குறைத்தாலொழிய, நமக்குத் தலைவலி குறையாது; என்ன செய்யலாம் என்று இஸ்ரேலிய அரசு தனது உளவு அமைப்பான மொஸாட்டிடம் யோசனை கேட்டது. ஹமாஸுக்கு நிதியளிப்பவர்கள் பாலஸ்தீனிய அரேபியர்கள். அவர்களின் ஆள்பலம் என்பதும் பாலஸ்தீனுக்குள் இருக்கும் அரபு இளைஞர்கள்தான். ஆகவே ஹமாஸின் மக்கள் செல்வாக்கைக் குறைத்தால்தான் எதுவுமே சாத்தியம். அந்த இடத்தில் அடித்தால் இந்த இடத்தில் வந்து சேரும் உதவிகள் நிறுத்தப்படும் என்று மொஸாட், இஸ்ரேல் அரசுக்கு யோசனை சொன்னது.

இஸ்ரேல் அரசு இதனை ஏற்றுக்கொண்டது. விளைவு? காஸா மற்றும் மேற்குக் கரை மக்களின் மீது திடீர் திடீரென்று வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஒவ்வொரு இரவிலும் ஏதாவது ஒரு குடிசைப் பகுதி பற்றிக்கொண்டு எரியும். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐம்பது அரேபியர்களாவது 'காணாமல்'போவார்கள். ஒவ்வொரு தினமும் எந்த அரபுக் குடியிருப்புப் பகுதியிலாவது இனக்கலவரம் மூளும். அடிதடிகள் நடந்து, கண்ணீர்ப்புகைகுண்டு வீச ராணுவம் வரும். கண்ணீர்ப்புகை குண்டுகளுக்கு பதில் அவர்கள் கையெறி குண்டுகளை வீசிச் சிலரைக் கொன்றுவிட்டுத் திருப்தியுடன் திரும்பிப் போவார்கள்.

இந்தச் சம்பவங்கள் ஒரு கட்டத்தில் தறிகெட்டுப் போகவே, கோபம் கொண்ட ஹமாஸ் ஒரு பகிரங்க அறிக்கை வெளியிட்டது. இஸ்ரேல் அரசுக்கு எதிராக, மிகத் துணிச்சலுடன், மிகக் கோபமாக, மிகக் கடுமையாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, இஸ்ரேலை மட்டுமல்லாமல் உலகம் முழுவதையுமே அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்கச் செய்தது.

ஹமாஸின் ஊழல் ஒழிப்புப் பிரிவு

இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் தொடக்கம் மதம் சார்ந்ததாக இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அது முற்றிலும் அரசியல் சார்ந்ததொரு விவகாரமாகிவிட்டது. இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டபடியால்தான் யாசர் அராஃபத் பி.எல்.ஓ.வின் தலைமைப் பொறுப்புக்கு வந்தபோது, தொடக்கத்திலிருந்தே அரசியல் தீர்வுக்கும் ஒரு கதவைத் திறந்து வைத்தார். பேச்சுவார்த்தைகள், அமைதி ஒப்பந்தங்கள், போர் நிறுத்தம் உள்ளிட்ட சாத்வீக வழிகளுக்கும் சம்மதம் சொன்னார்.

ஆனால் பிரச்னையின் அடிப்படை அரசியல் அல்ல என்று திட்டவட்டமாகக் கருதிய ஹமாஸ், இஸ்ரேலுக்கு எதிராக வெளியிட்ட அந்த முதல் அறிக்கையில் அழுத்தந்திருத்தமாக 'அல்லாவின் பெயரால்' தமது நிலைப்பாட்டை விளக்கியிருந்தது. 

'மதத்தின்மீது ஒருவன் நம்பிக்கை இழப்பானானால் அவனது பாதுகாப்பும் அவனது நல்வாழ்வும் அந்தக் கணத்துடன் போய்விடுகிறது' என்கிற பிரசித்தி பெற்ற இஸ்லாமியக் கவிஞர் முஹம்மது இக்பாலின் வரிகளை மேற்கோள் காட்டி யூத மக்களுக்கும் இஸ்ரேலிய அரசுக்கும் எச்சரிக்கை செய்யும் விதமாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கைதான் இஸ்லாத்தின் பெயரால் புனிதப்போருக்கு அறைகூவல் விடுத்த முதல் அறிக்கை.

புனிதப்போர்கள் அதற்கு முன்பும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் ஹமாஸின் அந்த அறிக்கை பாலஸ்தீனிய அரேபியர்களிடையே அன்றைக்கு ஏற்படுத்திய தாக்கமும் பாதிப்பும் முன்னெப்போதும் நிகழாதது. உருக்கமும் உணர்ச்சி வேகமும் கோபமும் ஆதங்கமும் கலந்த கவித்துவமான வரிகளில் ஒரு போராளி இயக்கம் அதற்கு முன் அறிக்கை வெளியிட்டதில்லை. பாலஸ்தீனியர்களின் வலியை அப்பட்டமாகப் படம் பிடிக்கும் அந்த அறிக்கையிலிருந்துதான் பாலஸ்தீனுக்கான ஜிகாத் வேகமெடுக்கத் தொடங்கியது என்று தயங்காமல் கூறலாம்.

திடீரென்று பாலஸ்தீனில் இந்த அறிக்கை உண்டாக்கிய எழுச்சியைக் கண்டு, முதலில் அஞ்சியது இஸ்ரேல் அல்ல. அமெரிக்காதான். உடனடியாக ஹமாஸை ஒரு தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்கச் சொல்லி, இஸ்ரேல் அரசுக்கு உத்தரவிட்டுவிட்டு, உலகெங்கும் ஹமாஸுக்கு உதவக்கூடிய யாராக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு கைது செய்யவும் தனது உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் கேட்டுக்கொண்டது.

அன்றைய காலகட்டத்தில் இது மிகவும் நகைப்புக்குரிய ஒரு விஷயம். ஏனென்றால், ஹமாஸ் என்றொரு இயக்கம் இருப்பது தெரியுமே தவிர, அது யாரால் தலைமை தாங்கப்படுகிறது, வழி நடத்துவோர் யார் யார் என்கிற விவரங்களெல்லாம் அப்போது பாலஸ்தீனிலேயே கூட யாருக்கும் தெரியாது. ஹமாஸின் எந்த ஒரு தலைவரும் தன் பெயரோ, புகைப்படமோ வெளியே வர அனுமதித்ததில்லை. ஹமாஸ் இயக்கத்தில் இருந்த எந்த ஒரு போராளியும் பிற போராளி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்போல இருபத்து நாலு மணி நேரமும் கையில் துப்பாக்கியுடன் முகத்தைத் துணியால் கட்டி மறைத்துக்கொண்டு அலைந்து திரிந்ததில்லை. காடுகளிலும் மலைப் பகுதிகளிலும் மட்டுமே புழங்கி, திரைப்படத் தீவிரவாதிகள்போல படபடபடவென்று இயந்திரத் துப்பாக்கி புல்லட்டுகளை வீணாக்கிக் கொண்டிருக்கவில்லை.

ஹமாஸின் முழுநேரப் போராளிகள்கூட தொடக்ககாலத்தில் எங்கெங்கோ உத்தியோகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். சிலர் ஆசிரியர்களாக இருந்தார்கள். சிலர் மருத்துவர்களாக இருந்தார்கள். பெரும்பாலான இளைஞர்கள் ஹமாஸின் 'தனி பார்லிமெண்ட்'டின் தன்னார்வச் சேவகர்களாக கிராமம் கிராமமாகப் போய் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு, சாலை போடுவதிலும் நகர சுத்திகரிப்புப் பணிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். இது மிகையே இல்லாத உண்மை. ஓர் அவசியம், தேவை என்று வரும்போது அப்படி அப்படியே வேலையைப் போட்டுவிட்டு ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். அந்தச் சமயங்களில் மட்டும் அடையாளம் மறைப்பதன் பொருட்டு ஹமாஸ் போராளிகள் தங்கள் முகங்களைத் துணியால் சுற்றி மறைத்துக்கொள்வார்கள். ஏனெனில், பொழுது விடிந்தால் மீண்டும் வீதிகளுக்கு வந்து கூட்டிப் பெருக்க வேண்டுமே?

ஹாலிவுட் காட்ஃபாதரிலிருந்து கோலிவுட் ஜென்டில்மேன் வரை திரைப்படங்கள் காட்டிய நெகடிவ் ஹீரோயிஸத்தின் ரிஷிமூலத்தைத் தேடிப்போனால் ஹமாஸில்தான் வந்து நிற்கவேண்டியிருக்கும்.

ஹமாஸின் வளர்ச்சி இஸ்ரேலை மிகவும் கவலை கொள்ளச் செய்தது. ஏற்கெனவே பதினெட்டுப் போராளி இயக்கங்களை உள்ளடக்கிய பி.எல்.ஓ.வையும் அதன் தலைவர் யாசர் அராஃபத்தின் எதிர்பார்க்கமுடியாத கெரில்லா யுத்தங்களையும் சமாளிக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தார்கள் அவர்கள். குறிப்பாக, பி.எல்.ஓ.வின் மிக முக்கிய சக்தியாக விளங்கிய அராஃபத்தின் 'ஃபத்தா' இயக்கத்தினர் தாம் கற்ற போர்க்கலையின் அத்தனை சிறப்பு நடவடிக்கைகளையும் மொத்தமாக டெல் அவிவ் நகரில் காட்டியே தீருவது என்று தீர்மானம் செய்துகொண்டு, தினசரி குறைந்தது இரண்டு அல்லது மூன்று தாக்குதல்களைத் தயங்காமல் மேற்கொண்டு வந்தார்கள்.

ஃபத்தா விஷயத்தில் இன்னொரு பிரச்னை என்னவென்றால், தொடக்கம் முதலே (அதாவது பி.எல்.ஓ.வில் இணைவதற்கு முன்பிலிருந்தே) அராஃபத் அதனை ஒரு மதச்சார்பற்ற இயக்கமாகத்தான் முன்னிறுத்தி வந்தார். இயக்கத்திலிருந்த அத்தனை பேருமே இஸ்லாமியர்கள்தான் என்றபோதும் இஸ்லாத்தை முன்வைத்து அவர்கள் ஒருபோதும் யுத்தம் மேற்கொண்டதில்லை. ஹமாஸ் அல்லது இன்றைய அல் கொய்தாவைப்போல் 'அல்லாவின் பெயரால்' அறிக்கை விடுத்ததில்லை. மாறாக, 'இஸ்ரேலிடமிருந்து இழந்த நிலத்தை மீட்பது' மட்டுமே ஃபத்தாவின் நோக்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனாலேயே சர்வதேச மீடியா ஃபத்தாவைக் குறித்து செய்தி சொல்லும்போதெல்லாம் அதனை ஓர் அரசியல் இயக்கமாகவே குறிப்பிட்டு வந்தது. பாலஸ்தீன் விவகாரம் அதிகம் எட்டியிராத தூரக்கிழக்கு தேசங்களிலெல்லாம் எழுபதுகளின் தொடக்கத்திலேயே ஃபத்தாவை ஓர் அரசியல் கட்சி போலவே சித்திரித்துச் செய்தி வெளிவரும்! சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துத் திண்டாடி நிற்கும் இஸ்ரேல் அரசு. 'ஃபத்தா ஓர் அரசியல் கட்சியல்ல, அது ஒரு தீவிரவாத இயக்கம்தான்' என்று லவுட் ஸ்பீக்கர் வைத்து அலறுவார்கள். அமெரிக்க ஊடகங்களின் துணையுடன் புகைப்படங்கள், வீடியோத் துணுக்குகளை வெளியிடக் கடும் முயற்சிகள் மேற்கொள்வார்கள். அப்போதுகூட எடுபடாமல் போய்விடும்.

இஸ்ரேலுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. ஏனெனில், இஸ்லாமியத் தீவிரவாதிகளால் தங்களுக்கு ஆபத்து என்றுதான் இஸ்ரேல் அரசு எப்போதும் ஐ.நா.வில் புலம்புவது வழக்கம். அராஃபத்தும் ஃபத்தாவும் பி.எல்.ஓ.வின் தலைமை நிலைக்கு வந்துவிட்டபோது, அவர்களால் அப்படி அழுது புலம்ப முடியாமல் போய்விட்டது. ஏனெனில் அராஃபத் எப்போதும் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருந்தார். எப்போதும் போர் நிறுத்தத்துக்கான சாத்தியத்தை முதலில் வைத்துவிட்டுத்தான் யுத்தத்தையே தொடங்குவார். இது ஒரு ராஜதந்திரம். மாபெரும் அரசியல் தெளிவுள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமான யோசனை.

ஆகவே ஃபத்தாவின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்த வழி தேடிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு, ஹமாஸின் திடீர் எழுச்சியும் அவர்களுக்கு இருந்த மக்கள் ஆதரவும் மேலும் கலவரமூட்டியது. ஒருகட்டத்தில் இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாட், வேறு வழியே இல்லை என்று ஹமாஸை எப்படியாவது வளைத்து, இஸ்ரேல் அரசின் ரகசியத் தோழன் ஆக்கிக்கொண்டு, அவர்களைக் கொண்டே பி.எல்.ஓ.வை ஒழித்துக்கட்ட ஒரு திட்டம் தீட்டியது.

தேவையான பண உதவி, வேண்டிய அளவுக்கு ஆயுத உதவி. ஹமாஸ் இயக்கத்தினருக்கு அளவற்ற பாஸ்போர்ட்கள், ஒருவருக்கே நான்கைந்து பாஸ்போர்ட்கள் வேண்டுமென்றாலும் கிடைக்கும். எந்த நாட்டு பாஸ்போர்ட் வேண்டுமென்றாலும் கிடைக்கும்; இயக்கத்திலிருக்கும் அத்தனை பேருக்கும் வீடு, நிலங்கள் என்று நம்ப முடியாத அளவுக்குக் கொட்டிக்கொடுத்தாவது ஹமாஸை வளைக்க இஸ்ரேல் அரசு ஒரு திட்ட வரைவையே தயாரித்தது.

ஹமாஸின் மத உணர்வுகளைத் தாங்கள் மிகவும் மதிப்பதாகவும், நிதானமாகப் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்புக்கும் திருப்தியளிக்கும் விதத்தில் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணமுடியும் என்று தாம் நம்புவதாகவும், ஃபத்தாவும் அராஃபத்தும்தான் பிரச்னை என்றும் 'எடுத்துச் சொல்லி' ஹமாஸ் தலைவர்களை வளைக்க ஒரு செயல்திட்டம் தீட்டியது இஸ்ரேல் அரசு.

இதன் மறைமுக அர்த்தம் என்னவென்றால், ஹமாஸுக்கு இஸ்ரேல் அரசு உதவி செய்யும். பதிலுக்கு பி.எல்.ஓ.வை ஒழித்துக்கட்ட ஹமாஸ் உதவவேண்டும் என்பதுதான்.

இத்தகைய கேவலமான யோசனைகள் அமெரிக்காவுக்கும் அமெரிக்க அடிவருடிகளுக்கும் மட்டும்தான் சாத்தியம் என்று ஒற்றைவரியில் நிராகரித்துத் திருப்பிவிட்டார்கள், ஹமாஸின் உயர்மட்ட அரசியல் குழுவினர். அதோடு நிறுத்தாமல் மிகத் தீவிரமாக ஓர் ஊழல் ஒழிப்புப் போராட்டத்தையும் அவர்கள் உடனே தொடங்கினார்கள். பாலஸ்தீன் முழுவதும் யூத அதிகாரிகள் அப்போது கிடைத்த வழிகளிலெல்லாம் பணம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஊழலில் உலகிலேயே முதல் இடத்தை இஸ்ரேல் பிடித்துவிடக்கூடிய சாத்தியம் இருக்குமளவுக்கு ஊழல் நாற்றம் இஸ்ரேல் முழுவதும் நாறடித்துக்கொண்டிருந்தது. ஏராளமான அறக்கட்டளைகள் அப்போது அங்கே இருந்தன. யாராவது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தால், உடனே ஏதாவதொரு பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து நிதி வசூலிக்க ஆரம்பித்துவிடுவார்கள். குறிப்பிடத்தக்க அளவில் பணம் சேர்ந்ததும் அறக்கட்டளை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். அறங்காவலர்கள் வெளிநாடுகளுக்குப் போய்விடுவார்கள். எதற்காக அவர்கள் நிதி திரட்டினார்கள், திரட்டிய நிதி எங்கே போனது என்றெல்லாம் யாரும் கேட்கக்கூடாது.

உல்லாசமாக வெளிநாடுகளில் சுற்றித் திரிந்துவிட்டு, பணம் தீர்ந்ததும் மீண்டும் இஸ்ரேலுக்கு வந்து வேறொரு அறக்கட்டளை ஆரம்பிப்பார்கள். மீண்டும் வசூல் நடக்கும். மீண்டும் காணாமல் போய்விடுவார்கள்.

ஒருவர் இருவர் அல்ல. அநேகமாக அன்றைய இஸ்ரேலின் மிக முக்கியமானதொரு 'தொழிலாகவே' இது இருந்தது. எழுபதுகளில் இஸ்ரேலில் இம்மாதிரி திடீர் அறக்கட்டளைகள், டிரஸ்டுகள் மட்டும் லட்சக்கணக்கில் தோன்றி, காணாமல் போயிருக்கின்றன. இத்தகைய நூதன மோசடியில் அரசின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் கூட நிறைய தொடர்புகள் இருந்திருக்கின்றன.

கோடிக்கணக்கில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணம் திரட்டி, அறக்கட்டளைகளின் பெயரில் அவற்றைச் சில தனிநபர்கள் தின்று கொழுத்து வந்ததைக் கண்டு கோபம் கொண்ட ஹமாஸ், இத்தகைய அறக்கட்டளைகளையும் டிரஸ்டுகளையும் ஒழித்துக்கட்டுவதே தன் முதல் வேலை என்று தீர்மானம் செய்து பகிரங்கமாக அறிவித்துவிட்டு, கையோடு வேலையை ஆரம்பித்து விட்டது.

இதற்கு பயந்த ஊழல் முதலைகள், போர்டுகளைக் கழற்றிப் போட்டுவிட்டு, அறைக்கதவைச் சாத்திக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தன. ஆனால் ஹமாஸ் இயக்கத்தினர் இத்தகைய அறக்கட்டளைகளைக் கணக்கெடுத்து, பட்டியலிட்டு, ஒரு நாளைக்கு ஒன்று என்று முடிவு செய்து தேசம் முழுவதும் இவற்றின்மீது தினசரி யுத்தம் ஆரம்பித்துவிட்டார்கள்.

அறக்கட்டளைகளின் பெயரில் ஊழல் செய்வதைத் தடுக்கப் போன ஹமாஸுக்கு அரசுத்துறையிலும் ஊழல் மலிந்து கிடப்பது தெரியவர, பெரிய அளவில் ஒரு நாடு தழுவிய ஊழல் ஒழிப்புப் போராக நடத்தினாலொழிய இதற்கு விடிவு கிடையாது என்று தெரிந்தது.

ஆகவே, ஹமாஸில் உடனடியாகத் தனியொரு ஊழல் ஒழிப்புப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. எங்கெல்லாம் , யாரெல்லாம் ஊழலில் ஈடுபடுவதாகத் தெரிகிறதோ அங்கெல்லாம் இந்தப் படை போகும். ஒரு தோட்டா. ஒரே முயற்சி. ஆள் காலி அல்லது நிறுவனம் காலி. அங்கிருக்கும் பணம் முழுவதும் அடுத்த வினாடி ஹமாஸின் மக்கள் வங்கிக்கு வந்து சேர்ந்துவிடும். உடனே கணக்கு எழுதி பொதுமக்கள் பார்வையில் படும்படி எங்காவது மாட்டிவிடுவார்கள். இந்த இடத்தில் இத்தனை பணம் எடுத்துவரப்பட்டது. இந்தப் பணம் இந்த இந்த வகைகளில் செலவிடப்படவிருக்கிறது என்று எழுதியே போட்டுவிடுவார்கள்.

எழுதிப் போட்டபடி செயல்படுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்காகவே ஒரு குழு இருக்கும். அவர்கள் வருடத்துக்கு மூன்றுமுறை இன்ஸ்பெக்ஷன் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அது ஓர் அரசாங்கமேதான். தனியார் அரசாங்கம். 

ஆரம்பத்தில் ஹமாஸின் இத்தகைய சமூகப்பணிகள்தான் இஸ்ரேல் அரசின் கவனத்தைக் கவர்ந்தன. ஹமாஸைத் தீவிரவாதச் செயல்களிலிருந்து பிரித்து இழுப்பது சுலபம் என்று அவர்கள் நினைத்ததும் இதனால்தான்.

ஆனால் யுத்தத்தை நிறுத்தினாலும் நிறுத்துவார்களே தவிர, அவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள் என்பது ஏனோ அவர்களுக்கு உறைக்காமல் போய்விட்டது.

இதெல்லாம் எண்பதுகளின் தொடக்கம் வரைதான். அதுகாறும் அரசியல் சித்தாந்தவாதிகளால் வழிநடத்தப்பட்டுவந்த ஹமாஸுக்கு எண்பதாம் வருடம் ஒரு ராணுவத் தலைவர் வந்து பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பெயர் ஷேக் அகமது யாசின். (Sheikh Ahmed Yassin). அந்தக் கணமே ஹமாஸின் செயல்பாடுகள் முற்றிலும் வேறுமுகம் கொள்ளத் தொடங்கிவிட்டன.

ராணுவத்தலைவர் ஷேக் அகமது யாசின்

2004-ம் வருடம் மார்ச் மாதம் 22-ம் தேதி தொழுகைக்காக அவர் ஒரு மசூதிக்குச் சென்றுகொண்டிருந்தார். தொழுகை முடித்து மசூதியை விட்டு வெளியே வந்தபோது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு ராக்கெட் வெடிகுண்டு, அவர் அருகே சரியாக விழுந்து வெடித்து உயிரைக் குடித்தது. அடுத்த வினாடி பாலஸ்தீன் பற்றி எரியத் தொடங்கியது. இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் ஷரோனின் கதை அத்துடன் முடிந்தது என்று அத்தனை பேரும் பேசிக்கொண்டார்கள். திட்டமிட்ட அந்தத் தாக்குதலை "சற்றும் எதிர்பாராததொரு விபத்துதான் இது. நாங்கள் அவரைக் குறிவைத்து ராக்கெட்டை ஏவவில்லை" என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் பொய்தான் சொல்கிறார் என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும். வயதில் மிகவும் முதிர்ந்த, மார்க்கக் கல்வியில் கரை கண்டவரான அவர் பெயர் ஷேக் அகமது யாசின். இருபது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஹமாஸின் தலைவர்.

ஷேக் அகமது யாசின், ஹமாஸின் தலைமைப் பொறுப்புக்கு வந்த காலகட்டத்தில் தொடங்கவேண்டிய இந்த அத்தியாயத்தை, அவரது மரணத்தில் தொடங்க நேர்ந்தது தற்செயலானதல்ல. தன்னைப் பற்றிய எந்த விவரத்தையும் எந்தக் காலத்திலும் வெளியில் சொல்லாத போராளி அவர். யாசின் குறித்து இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய தகவல்கள் நான்கே நான்குதான். முதலாவது, அவர் அதிகம் பேசமாட்டார். சமயத்தில் பேசவே மாட்டார். இரண்டாவது, ஒரு நாளைக்கு ஒரே ஒரு ரொட்டியும் ஒரு தம்ளர் பாலும் மட்டும்தான் அவரது உணவாக இருந்தது என்பது. மூன்றாவது, இருட்டில் கூடக் குறிதவறாமல் சுடக்கூடியவர் என்கிற தகவல். நான்காவது தகவல், அவருக்குக் கடைசிக் காலத்தில் கண் பார்வை சரியில்லாமல் போய் மிகவும் அவஸ்தைப்பட்டார் என்பது. இதுதான். இவ்வளவுதான்.

யாசினுக்கு முன்பு ஹமாஸை வழி நடத்தியவர்கள் எல்லோரும் அரசியல் வல்லுநர்களாக மட்டும் இருந்தார்கள். இவர்தான் முதல் ராணுவத் தலைவர். ஹமாஸை ஒரு சக்திமிக்க தனியார் ராணுவம் போலவே வடிவமைத்ததில் பெரும்பங்கல்ல; முழுப் பங்கே இவருடையதுதான். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் யுத்தத்துக்கு ஒரு சரியான வடிவம் கொடுத்தவர் யாசின்தான்.

ஒரு மாதத்துக்கு இத்தனை இலக்குகள் என்று திட்டம் போட்டுக்கொண்டு, தாக்குதலை நடத்தக் கற்றுக்கொடுத்தவர் அவர். ஒரு குழு ஓரிடத்தில் தாக்குதல் நடத்தப் போனால், அடுத்த குழு அடுத்த இலக்கை நோக்கி அப்போதே பயிற்சியிலும் முயற்சியிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கும். இவ்வாறு ஹமாஸின் அத்தனை போராளிகளையும் சிறுசிறு குழுக்களாகப் பிரித்து, தேசமெங்கும் வேறு வேறு இடங்களில் பயிற்சி முகாம்கள் அமைத்து, தங்கவைத்துத் தயார் செய்ய ஆரம்பித்தார் யாசின்.

எந்தவிதமான சமரசங்களுக்கும் ஹமாஸ் தயாரானதல்ல என்பது முதன்முதலில் இஸ்ரேலிய அரசுக்குப் புரியவந்ததே ஷேக் அகமது யாசின் பொறுப்புக்கு வந்தபிறகுதான். ஹமாஸ், மிகத்தீவிரமாக இஸ்ரேலிய மக்களின்மீது தாக்குதல் ஆரம்பித்ததும் அவரது தலைமைக்குப் பிறகுதான். அதுவரை ராணுவ இலக்குகள், அரசாங்க இலக்குகள்தான் ஹமாஸின் பிரதான நோக்கமாக இருந்துவந்தது. அதனை மாற்றி, பொதுமக்களும் அரசின் கருத்தை ஏற்று நடந்துகொள்பவர்கள்தானே, ஆகவே இஸ்ரேலிய அரசின் அத்தனை குற்றங்களிலும் அவர்களுக்கும் பங்குண்டு என்று சொன்னவர் அவர். 

பொது இடங்களில் ஹமாஸ் வெடிகுண்டுகளைப் புழக்கத்தில் விடத் தொடங்கியது அப்போதுதான். பஸ்ஸில் வைப்பார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கார் பார்க்கிங்கில் வைப்பார்கள். ரயில்களில் வைப்பார்கள். ஹோட்டல்கள், யூத தேவாலயங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள், ரிசர்வேஷன் கவுண்ட்டர்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கங்கள், அரசு விழாக்கள் நடக்கும் இடங்கள், அணிவகுப்பு நிகழ்ச்சிகள் என்று எங்கெல்லாம் மக்கள் கூடுவார்களோ அங்கெல்லாம் குண்டுவைக்க ஆரம்பித்தார்கள்.

சித்தாந்தம் என்பது சௌகரியப்படி மாற்றி எழுதிக்கொள்ளத் தக்கது. அதுவரை பாலஸ்தீன் விடுதலைக்காகப் போராடியபடி, பாலஸ்தீனிய அரேபியர்களின் நலனுக்காகவும் பாடுபட்டுக்கொண்டிருந்த ஹமாஸ், எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து இஸ்ரேலிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துவதையே தனது பிரதான மான நோக்கமாகக் கொள்ளத் தொடங்கியது.

இதனால்தான் பி.எல்.ஓ. ஓர் அரசியல் முகம் பெற்றதைப் போல ஹமாஸால் இறுதிவரை பெற முடியாமல் போய்விட்டது. எண்பதுகளிலேயே ஹமாஸை ஒரு தீவிரவாத இயக்கமாக உலகம் பார்க்கத் தொடங்கிவிட்டதென்றபோதும், அது அல் கொய்தாவைக் காட்டிலும் பயங்கரமான இயக்கம் என்று கருதப்பட்டது, தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான்.

உலகிலேயே முதல் முறையாக தற்கொலைத் தாக்குதல் என்னும் உத்தியைப் புகுத்தியது ஹமாஸ்தான். இந்தத் திட்டம் ஷேக் அகமது யாசினின் எண்ணத்தில் உதித்தவற்றுள் ஒன்று.

கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்வது, மதத்துக்காக உயிர்த்தியாகம் செய்வது, விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்வது என்கிற புராதனமான சித்தாந்தத்துக்குப் புதுவடிவம் கொடுத்து, தானே ஓர் ஆயுதமாக மாறி எதிரியின் இலக்கைத் தாக்கி அழிப்பது என்கிற கருத்தாக்கத்தை முதன்முதலில் 1989-ல் முன்வைத்தது ஹமாஸ்.

ஹெப்ரான் (Hebron) என்கிற இடத்திலிருந்த இப்ராஹிம் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 29 பேர், ஈவிரக்கமின்றி பரூஷ் கோல்ட்ஸ்டெயின் (Baruch Goldstein) என்கிற வந்தேறி யூதரால் படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்க முடிவு செய்தது ஹமாஸ். திரும்ப அதேபோல துப்பாக்கி ஏந்தி கண்ணில் பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினரை மட்டும் சுட்டுக் கொல்வது எந்தப் பலனும் அளிக்காது என்று ஹமாஸின் உயர்மட்டக் குழுவினர் கருதினார்கள். அப்போது வடிவம் பெற்றதுதான் இந்தத் தற்கொலைத் தாக்குதல் என்கிற உத்தி.

ஒரு தாக்குதல் நடத்த வேண்டும். அது உலகத்தையே குலுக்க வேண்டும். இஸ்ரேலிய அரசு பதறிக்கொண்டு அலறியோட வேண்டும். இப்படியும் செய்வார்களா என்று அச்சம் மேலோங்கவேண்டும். அதுதான் சரியான பதிலடியாக இருக்க முடியும் என்று தீர்மானித்த ஹமாஸ், திட்டமிட்டு ஒரு போராளியைத் தயார் செய்து அனுப்பியது. உடலெங்கும் வெடிபொருட்களைக் கட்டிக்கொண்டு போய் நட்டநடு வீதியில் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு சுமார் ஐம்பது யூதர்களையும் கொன்றான் அவன்.

ஹமாஸ் எதிர்பார்த்தபடியே இந்தச் சம்பவம் சர்வதேச கவனத்தைக் கவர்ந்தது. அத்தனை நாட்டுத் தலைவர்களும் அலறினார்கள். இஸ்ரேல் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனது. இப்படியுமா கொலைவெறி கொள்வார்கள் என்று பக்கம்பக்கமாக எழுதி மாய்ந்தார்கள். உடனடியாகப் பல்வேறு நாடுகள் ஹமாஸை தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கமாக அறிவித்தன. இதில் மிகப்பெரிய நகைச்சுவை என்னவென்றால் அல்கொய்தா போன்ற அமைப்புகளுக்கு வெளிப்படையாகப் பல தேசங்களில் கிளைகளும் துணை அமைப்புகளும் பயிற்சி முகாம்களும் இருப்பதுபோல ஹமாஸுக்குக் கிடையவே கிடையாது. எங்கே யார் இருக்கிறார்கள் என்பது கூட யாருக்கும் தெரியாது.

1989-லிருந்து 1991- வரை ஹமாஸ் இயக்கத்தினரைப் பற்றித் தகவல் சேகரிக்கவென்றே அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ.வில் தனியொரு பிரிவு செயல்பட்டது. இஸ்ரேலிய உளவுத்துறை மொஸாட்டுடன் இணைந்து மூன்று ஆண்டுகள் படாதபாடுபட்டும் அவர்களால் மொத்தம் பதினான்கு பேரைத் தவிர வேறு பெயர்களைக் கூடக் கண்டுபிடிக்கமுடியவில்லை. எந்த ஒரு ஹமாஸ் தலைவரைப் பற்றிய தனி விவரங்களும் கிடைக்கவேயில்லை. "கஷ்டப்பட்டு" அவர்கள் சேகரித்து வெளி உலகுக்கு அறிவித்த அந்த ஹமாஸ் தலைவர்களின் பெயர்கள் இதோ:

ஷேக் அகமது யாசின் – மதத்தலைவர், ராணுவத்தலைவர். (இவர் மார்ச் 22, 2004-ல் இஸ்ரேலிய ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.)

டாக்டர் அப்துல் அஜிஸ் அல் ரண்டிஸி (Dr. Abdul aziz al rantissi யாசின் மறைவுக்குப் பிறகு ஹமாஸின் தலைவரானவர். இவரும் இஸ்ரேல் ராணுவத்தினரால் அதே ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.)

இப்ராஹிம் அல் மகத்மெ (Ibrahim al Makadmeh 2003-ம் ஆண்டு மொஸாட் உளவாளிகளால் கொலை செய்யப்பட்டவர்.)

மெஹ்மூத் அல் ஸாஹர் (Mahmoud al Zahar அரசியல் பிரிவுத் தலைவர்)

இஸ்மாயில் ஹனியா (Ismail Haniya பெரும்பண்டிதர். அரசியல் ஆலோசகர்.)

சயீது அ'சியாம் (Said a' Siyam - அரசியல் பிரிவின் மூத்த செயலாளர்.)

ஸலா ஸாஹேத் (Salah Sahed ஹமாஸின் ராணுவத் தளபதி. 2002-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.)

மொஹம்மத் டெயிஃப் (Mohammed Deif – ராணுவத் தளபதி.)

அட்னல் அல் கௌல் (Adnal al Ghoul வெடிபொருள் நிபுணர். ராக்கெட் லாஞ்ச்சர் பிரயோகத்தில் விற்பன்னர்.)

மொஹம்மத் தாஹா (Mohammed Taha ஹமாஸைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவர். மார்க்க அறிஞர். 2003-ம் ஆண்டு இஸ்ரேலிய ராணுவம் இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. இன்றுவரை சிறையில் இருக்கிறார்.)

யாஹியா அயாஷ் (Yahya Ayyash வெடிகுண்டுகள் தயாரிக்கும் விஞ்ஞானி.)

காலித் மஷால் (Khaled Mashal டெமஸ்கஸில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்.)

மூசா அபு மர்ஸுக் (Mousa Abu marzuk சிரியாவில் இருக்கிறார்.)

ஷேக் கலில் (Sheikh Khalil – 2004-ல் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்ட இவர், மிகவும் ஆபத்தான தீவிரவாதி என்று வருணிக்கப்பட்டவர்.)

எந்த விவரமும் கண்டுபிடிக்க முடியாத இவர்களில் சிலரை இஸ்ரேல் ராணுவம் எப்படிக் கொன்றது என்பது மிக முக்கியமான விஷயம். ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் அந்த இயக்கத்தின் தலைவராக அறிவிக்கப்படுகிறார் என்றால் கண்டிப்பாக அவர் மிகப்பெரிய மார்க்க அறிஞராகத்தான் இருப்பார். அவரது ராணுவத் தகுதிகளெல்லாம் கூட இரண்டாம்பட்சம்தான்.

அப்படி சமய ஈடுபாடு மிக்க ஒருவர் மசூதிக்குப் போய் தொழுகை நடத்துவதிலிருந்து ஒரு நாளும் தவற மாட்டார்.

இதை கவனத்தில் கொண்ட இஸ்ரேல், காஸா பகுதியில் உள்ள அத்தனை மசூதிகளைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஒற்றர்களை எப்போதும் நிறுத்திவைக்கும். இந்த ஒற்றர்கள், மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு முறை ஓரிடத்தில் பணியில் இருக்கும் ஒற்றர், அடுத்த ஒரு மாத காலத்துக்கு அந்த இடத்துக்கு வரமாட்டார். அத்தனை கவனம்!

இப்படிப் பணியில் நிறுத்தப்படும் ஒற்றருக்கு ஒரே ஒரு கட்டளைதான். ஹமாஸ் தலைவர் எப்போது எந்த மசூதிக்கு வருகிறார் என்று பார்த்துச் சொல்லவேண்டும். அவர் தினசரி வருகிறாரா, வாரம் ஒரு முறை வருகிறாரா, அல்லது ஏதாவது விசேஷ தினங்களில் மட்டும் வருகிறாரா என்று காத்திருந்து சரியாகப் பார்த்துச் சொல்லவேண்டும்.

தகவல் சரிதான் என்று உறுதிப்படுத்தப்பட்டதும் பாதுகாப்பான தூரத்தில் பதுங்கியிருந்து ராக்கெட் வெடிகுண்டு மூலம் கொன்றுவிடலாம் என்று யோசனை சொன்னது மொஸாட்.

இப்படித்தான் ஷேக் அகமது யாசின் படுகொலை செய்யப்பட்டார். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மசூதிக்கு வருபவர் அவர் என்பது, இஸ்ரேல் ராணுவத்துக்கு சௌகரியமாகப் போய்விட்டது. அவர் உள்ளே போகும் நேரம், வெளியே வந்து நாற்காலியிலிருந்து இறங்கி வண்டியில் ஏறுவதற்கு ஆகும் கால அவகாசம் ஆகியவற்றைத் துல்லியமாகக் கவனித்து, சரியாக அடித்தார்கள். யாசின் இறந்து போனார்.

யாசின் இறந்தபோது, கோபத்தில் ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் முழுவதும் ஏராளமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். எங்கு பார்த்தாலும் குண்டு வெடித்தது. பஸ்கள் எரிந்தன. மக்களின் அலறல் ஓசை பத்து நாட்கள் வரை ஓயவே இல்லை. புதிய தலைவரான டாக்டர் அப்துல் அஜிஸ் அல் ரண்டிஸியின் வழிகாட்டுதலில், இயக்கம் இன்னும் உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கியிருப்பதாக அறிவித்தார்கள்.

உடனே மொஸாட் விழித்துக்கொண்டது. ஓஹோ, உங்கள் புதிய தலைவர் இவர்தானா என்று அவருக்கு அடுத்தபடியாகக் கட்டம் கட்டினார்கள். அதேபோல ஒளிந்திருந்து தாக்கி அவரையும் கொன்றார்கள். ஒரே வருடத்தில் இரண்டு தலைவர்களைப் பறிகொடுத்த ஹமாஸ், செய்வதறியாமல் திகைத்தது.

ஹமாஸ் தனது அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தபோதுதான், விஷயத்தை மோப்பம் பிடித்த ஹமாஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் சிரியாவில் வசிப்பவருமான காலித் மஷால், அவசர அவசரமாக "தலைவரை ரகசியமாகத் தேர்ந்தெடுங்கள். எக்காரணம் கொண்டும் யார் தலைவர் என்பதை வெளியே சொல்லாதீர்கள்" என்று இயக்கத்தினருக்கு ரகசியச் சுற்றறிக்கை அனுப்பினார்.

சற்றே நிதானத்துக்கு வந்த ஹமாஸ், அவர் சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, தங்களது தலைவர் யாரென்பதை அறிவிப்பதை அத்துடன் நிறுத்திக்கொண்டது. ஆனாலும் சீனியாரிடி அடிப்படையில் மெஹ்மூத் அல் ஸாஹர்தான் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொன்னது மொஸாட். துணைத்தலைவராக இஸ்மாயில் ஹனியாவும் அவருக்கு அடுத்தபடியாக சயீது அ'சியாமும் இருப்பார்கள் என்றும் சொல்லி, வைத்த குறிக்காக இன்னும் வலைவிரித்திருக்கிறார்கள்.

பயங்கரவாத நாடான இஸ்ரேல், பாலஸ்தீனியர்களின் சுயாட்சி பகுதியான காஸாவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஹமாஸ் இராணுவத் தலைவரான அகமத் அல் ஜபாரியை கொலை செய்திருக்கிறது.

‘அடுத்தக் கட்ட தாக்குதல்களுக்காக தரைப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் ஏவுகணை தாக்குதல் விரிவான தாக்குதல்களுக்கான முன் தயாரிப்புதான்’ என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய கடற்படையின் போர்க்கப்பல்கள் காஸா பகுதி மீது குண்டு வீச்சு நடத்தியிருக்கின்றன.

இந்தத் தாக்குதல்களில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக இந்தத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக இஸ்ரேலின் முன்னணி நாளிதழ் ஹாரெட்ஸ் கூறுகிறது. ‘தேர்தலுக்கு முன்பு தன்னை உறுதியானவராகக் காட்டிக் கொள்ள நெதன்யாகு தாக்குதல்களுக்கு உத்தரவிடுவார்’ என்று அந்த நாளிதழ் திங்கள் கிழமை கணித்திருந்தது.

அமைதி பேச்சு வார்த்தைகளை வேண்டுமென்றே இழுத்தடிக்கும் இஸ்ரேலின் போக்கினால் வெறுப்படைந்த பாலஸ்தீனிய ஆணையம், நவம்பர் 29-ம் தேதி ஐநாவில் பார்வையாளர் அந்தஸ்துக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டிருக்கிறது. 1967 போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்த மேற்குக்கரை, காஸா, கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதற்கான முதல் நடவடிக்கையாக அது இருக்கும். அதைத் தடுப்பதற்காக இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

‘அமைதி’க்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். பிரதமர் நெதன்யாகுவிடம் நேரடியாக தொலைபேசியில் பேசி ‘இஸ்ரேலிய அரசின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்’ என்று உறுதியளித்திருக்கிறார்.

இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து எகிப்து இஸ்ரேலுக்கான தனது தூதரை திரும்ப அழைத்திருக்கிறது. ‘இந்த பயங்கரவாத தாக்குதலை ஐநா சபையில் விவாதிக்க வேண்டும்’ என்று கோரியிருக்கிறது. எகிப்து நாட்டில் இஸ்ரேலுடன் நட்பாக இருந்த அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் ஹோஸ்னி முபாரக் அரசு சென்ற ஆண்டு பிப்ரவரியில் வீழ்த்தப்பட்டது. இப்போது ஹமாஸ் அமைப்புடன் நெருக்கம் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஆட்சியில் உள்ளன.

ஈரானிய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் இந்த தாக்குதல்களை கண்டித்திருக்கிறார்.

பாலஸ்தீனர்களின் நிலத்தை ஆக்கிரமித்து தனது நாட்டை உருவாக்கிக் கொண்ட இஸ்ரேல், மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனியர்களின் உரிமைகளை மறுப்பதோடு, அவர்களின் போராட்டங்களை கொடூரமாக ஒடுக்கி வருகிறது. லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களை சொந்த நாட்டிலேயே கைதிகளாக சிறை வைத்து பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் கொடுமைப் படுத்தி வருகிறது.

பேச்சு வார்த்தை மூலம் சமாதானத்துக்கு முயற்சித்தவர்களையும் இசுரேலின் பயங்கரவாதத்திற்கு எதிர்வினையாக தோன்றிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களையும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய மக்களையும் கொலை செய்து வருகிறது இஸ்ரேல். 2008-ம் ஆண்டு இறுதியில் பாலஸ்தீன பகுதிகள் மீது நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் மூலம் 1,400 பாலஸ்தீனியர்களை கொன்று குவித்தது.பயங்கரவாத நாடான இஸ்ரேல், உலக தாதாவான அமெரிக்காவின் நிழலில் நின்று கொண்டு இப்போது இன்னும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

அஹ்மத் ஜஃபரி - ஹமாஸ் வீரத்தளபதியின் வரலாறு..!

ஹமாஸின் ஆயுதப்படைப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாமின் தலைவரான அஹ்மத் ஜஃபரி ஷஹீதாக்கப்பட்டார். இஸ்ரேலை பொறுத்தவரை , ஜஃபரி பல்லாண்டு காலமாக பெரும் தலையிடியாக இருந்தவர். இஸ்ரேலிய இராணுவத்தால் வேண்டப்பட்டவர்கள் பட்டியலில் முன்னணி ஹமாஸ் உறுப்பினராக இருந்தவர்.
இவரின் மரணம் பற்றி ஹமாஸின் அரசியல் துறைப் பொறுப்பாளர் காலித் மிஷ்அல் குறிப்பிடும் போது ‘இவரின் மரணம் ஹமாஸ் படைப்பிரிவைப் பொருத்தவரை பெரும் இழப்பாக இருந்தாலும் , ஹமாஸின் பாதை நீண்டது. தொடர்ந்தும் அது போராடும்’ என்றார்.

அஹ்மத் ஜஃபரியின் மரணத்தைத் தொடர்ந்து அவருடைய வாழ்க்கை பற்றி அவரது குடும்ப அங்கத்தவர்கள் பல ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக அவரின் மனைவி ஹமாஸின் கஸ்ஸாம் வெப்தளத்துக்கு அளித்த பேட்டி வருமாறு,

‘நான் எனது கணவரை விட ஷஹாதத்தையும் , ஜிஹாதையும் விரும்பும் ஒருவரைக் காண்டதில்லை. மிகச் சிறந்த நேரத்தில் அல்லாஹ் அவருக்கு அந்தப் பாக்கியத்தை கொடுத்திருக்கிறான். தனது மரணத்திற்கு முன் மூன்று ஆசைகளுக்காக வாழ்ந்தவர். அந்த மூன்று ஆசைகளை தொடர்ந்தும் பலமுறை பலரிடமும் ஞாபகப்படுத்துபவராக இருந்தார். அவை , அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சும் ஒரு ஜிஹாதியப் படையை தனது ஷஹாத்திற்கு பின்னால் விட்டுச் செல்ல வேண்டும். இஸ்ரேலிய சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான கைதிகளை விடுவிக்க வேண்டும் , இஸ்லாத்தின் இறுதிக் கடமையாக ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும். 
இம்மூன்றையும் சாதித்து விட்ட பின்னரே எனது கணவர் ஷஹீதாகியுள்ளார். குறிப்பாக ,பலஸ்தீனக் கைதிகள் விடுவிக்கப்பட்ட நாளில் அவர் அடைந்த மகிழ்ச்சியை வர்ணிக்க முடியாது. சுருக்கமாக சொன்னால், எமது திருமண தினத்தில் இருந்த மகிழ்ச்சியை விட மகிழ்சியானவராக காணப்பட்டார்.

காஸா மீதான இஸ்ரேலிய படையின் தாக்குதல்கள் கடுமையான போது , அவர் சில தேவைகளின் நிமித்தம் வெளியே செல்வதற்கு தயாரானார். நான் அப்பொழுது வெளியே செல்ல வேண்டாம் என்று குறிப்பிட்டேன். அதற்கவர் சிரித்தவராக ‘நான் அல்லாஹ்வின் பாதையில் இந்த இக்கட்டான நேரத்தில் ஷஹீதாகினால், அதுவே அல்லாஹ் எனக்கு தந்த மிகப் பெரும் அருள் .’ ஏன்றார். பின்னர் என்னை நோக்கி ‘ அல்லாஹ் உன்னை ஏற்றுக் கொள்வானாக ‘ என்றார். அது தான் அவர் என்னுடன் பேசிய கடைசி வார்த்தை. இந்த வார்த்தையை தினமும் நான் கேட்பதற்கு ஆசைப்படுகிறேன்.

 இன்னும் அவரின் தன்மைகள் வித்தியாசமானவை. அவர் மிகவும் துணிச்சலானவர். யாருக்கும் பயப்படமாட்டார். சில போது இஸ்ரேலிய யுத்த விமானங்கள் வானத்தை வட்டமிட்டுக் கொண்டிருக்கும் . அப்போது நான் அவரை வெளியே செல்ல வேண்டாம் என்று வலியுறுத்திச் சொல்லுவேன். ஏன்றாலும் , வானத்தில் விமானமே இல்லாதது போல் வெளியே சென்று பார்ப்பார். ஜிஹாதிய அழைப்புக்கு எனது கணவர் எப்போழுதும் மிக வேகமாக பதிலளிப்பவராக இருந்தவர். அவரிடம் பெருமை ஒரு சிறு துளியும் இருந்தது கிடையாது. மிகவும் பணிவானவர். காஸா மக்கள் மிகவும் நேசிக்கும் தலைவராக இருந்தவர். மீண்டும் சொல்கிறேன்! எனது கணவர் எவ்வளவு ஸாலிஹானவர் ! அவர் ஒரு சிறந்த தந்தையும் கூட!

இம்முறை ஹஜ்ஜூக்கு என்னையும் அழைத்துக் கொண்டு செல்லவே அவர் திட்டமிட்டார். என்றாலும் சில பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் மட்டுமே கடைசியில் சென்றார். கடைசியாக அவர் ஹஜ்ஜூக்கு செல்லும் போது என்னிடம் ‘ உயிருடன் இருந்தால் நிச்சியமாக உன்னையும் அடுத்த ஆண்டு ஹஜ்ஜூக்கு அழைத்துச் செல்லுவேன் ‘ என்று வாக்குறுதியளித்தார். ஹஜ்ஜின் போது ஜஃபரி கேட்ட அதிகமான துஆ ‘ தனக்கு உனது பாதையில் ஷஹீதாகக் கூடிய பாக்கியத்தை தரவேண்டும் ‘ என்பதாகத்தான் இருந்தது என்று அவருடன் பயணம் மேற்கொண்டவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

எனது கணவர் தொழுகை விடயத்தில் மிகவும் கண்டிப்பானவர். தொழுகை கவனமாக பேணுமாறு வீட்டிலிருக்கும் அனைவருக்கும் அவர் வஸிய்யதாக பல முறை குறிப்பிட்டார். தொழுகை நேரத்தில் எனது பிள்ளைகளில் யாரவது வேறு வேலைகள் செய்து கொண்டிருந்தால் , மிகக் கடுமையாக கோபமடைவார்.’

அஷ்ஷஹீத் அஹமத் ஜஃபரியின் மகள் ‘ மிர்வா ‘ தனது தந்தையைப் பற்றி குறிப்பிடும் போது ‘ எனது தந்தை நாங்கள் எல்லோரும் நேரத்துக்கு தொழுகையை நிறைவேற்றுவதனைக் காணும் போதும் , அல்குர்ஆனை கற்பதற்காக தயாராகும் போதும் மட்டில்லாத மகிழ்சியடைபவராக இருந்தார். தந்தையின் தூண்டுதல்களினாலேயே நாம் அல்குர்ஆனை சிறப்பாக மனனம் செய்தோம்’ என்றார்.

அஹ்மத் ஜஃபரியின் 19 வயது மகன் முஃமின் தந்தை பற்றி குறிப்பிடும் போது ‘ அவரின் இறுதி நாட்கள் அவர் கிட்டிய விரைவில் அல்லாஹ்வை சந்திக்கப் போகிறார் என்பதனை உணர்த்தியது. ஏனெனறால் ஹஜ் கடமையயை நிறைவேற்றிய பின்னர், அவர் குடும்பத்தில் இருந்த எல்லோருடனும் நெருக்கமாக பேசுவார் . பழகுவார். அவரின் ஷஹாதத்தின் பிறகு தான் விடயம் தெளிவாக எங்களுக்கு புரிந்தது ‘ என்றார். அவர் கடைசியாக என்னிடம் அவரது கடன்கள் தொடர்பாக சிலவற்றை குறிப்பிட்டு நிறைவேற்றுமாறு குறிப்பிட்டார்.

பின்னர் எனது சகோதரிகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு குறிப்பிட்டார். இன்னும் கடைசிவரை எந்நிலையிலும் தொழுகையை பள்ளிவாசலியே நிறைவேற்றுமாறும், ஜிஹாதை பற்றிப் பிடித்துக் கொள்ளுமாறும் ‘ குறிப்பிட்டார். பொதுவாக எனது தந்தை மிகவும் கவனமாக தனது நகர்வுகளை அமைத்துக் கொள்பவர். ஏன்றாலும், இம்முறை அல்லாஹ்வின் நாட்டம் அவர் எவ்வித பாதுகாப்புமின்றி வெளியே சென்றார். எனது தந்தை எந்தளவுக்கு ஹமாஸின் படைப்பிரிவில் தன்னை முழுமையாக தியாகம் செய்தாரோ , குடும்ப விடயத்தி;லும் மிகவும் கண்டிப்பானவர். ஏப்போதும் நாம் எவ்வாறு செயற்படுகிறோம் என்பதனை அவதானிப்பார். தேவைப்படும் போது தொடர்ந்து உபதேசங்களை தருவார் ‘ என்றார்.

அஷ்ஷஹீத் அஹ்மத் ஜஃபரியின் 15 வயது மகன் மாலிக் தனது தந்தையைப் பற்றி குறிப்பிடும் போது ‘எனது தந்தை வரலாற்று துறையிலும் , புவியியல் துறையிலும் சிறப்புப் பட்டம் பெற்றவர். அவர் என்னையும் புவியியல் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறுமாறு தூண்டிக் கொண்டிருந்தார். எனது தந்தையிடம் நான் கேட்ட ஒரு வார்த்தை இருக்கிறது. அதாவது எனது தந்தை ஹமாஸிற்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக தொடர்ந்தும் உழைத்தவர். ஆனால் ஒரு முறை என்னிடம் ‘ நாங்கள் சொந்தமாக அவற்றை செய்கின்றவர்களாக நாங்கள் மாறவேண்டும’ என குறிப்பிட்டார்.

ஜஃபரி தனது மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் அல்ஜஸீராவின் அரபுத் தொலைக்காட்சி சேவைக்கு பேட்டி ஒன்றை வழங்கினார். அதனை நாடாத்திய நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் ஜஃபரியிடம் ‘ உங்களுடைய உயிர் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளது. அது பற்றி என்ன குறிப்பிடுகிறீர்கள்? என கேட்ட போது ‘ எனக்கு அது நன்றாக தெரியும். ஆனால் எனது உயிரை விட எனது பிரச்சினை பெரியது. நான் சுவனத்தை விரும்புகிறேன் ‘ என்றார். அதேபோன்று , அண்மையில் அவர் அளித்த இன்னொரு பேட்டியில் ‘ அல்லாஹ்வை நான் பொருந்திக் கொண்டேன். நான் எனக்கு பின்னால் இஸ்ரேலியர்களை தூங்கவிடாமல் செய்யக் கூடிய ஒரு படையை தயார்படுத்தி இருக்கிறேன். அது எனக்கு நிம்மதியை தருகிறது ‘ என்றார். அல்லாஹ் அஹ்மத் ஜஃபரியின் ஷஹாதத்தை பொருந்திக் கொள்வானாக.

வீரத்தளபதி அஷ்ஷஹீத் யஹ்யா அய்யாஷ்

யஹ்யா அய்யாஷ் 1966 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி பலஸ் தீனின் மேற்குக் கரையில் பிறந்தார். அவரது ஏழாம் வயதிலே அல்குர்ஆன் முழுவதையும் மனனமிட்டார். உயர்தரத்தில் சிறந்த முறையில் சித்தியடைந்துபல்கலைக்கழகத்திற்கும் தேர்வு செய்யப்பட்டார்.1988 ஆம் ஆண்டு பொறியியல் பீடத்தின் மின் பொறியியல் துறையில் பட்டம்பெற்று வெளியேறினார். என்றாலும் அவருக்கு இரசாயண துறையிலே ஆர்வம் காணப்பட்டது. உயர்கல்விக்காக ஜேர்மன் செல்வதற்கு முயற்சித்த போதும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.யஹ்யா அய்யாஷ் தனது சிறியதாயின் மகளை திருமணம் முடித்தார். அல்லாஹ் அவர்களுக்கு பர்ராஃ, யஹ்யா, அப்துல் லதீப் ஆகிய மூன்று குழந்தைகளை அருளினான்.1987 ஆம் ஆண்டிலே பலஸ்தீன் விடுதலைக்காகப் போராடும் ஹமாஸ் இயக்கத்துடன் இணைந்துகொண்டார். அதன் இராணுவப் பிரிவான இஸ்ஸுத் தீன் கஸ்ஸாம் பிரிவின் ஆரம்ப அங்கத்தவராகவும் அய்யாஷ் காணப்பட்டார்.கதாஇப் (கதாஇப் இஸ்ஸுத்தீன் அல் கஸ்ஸாம் - அதாவது இஸ்ஸுத்தீன் அல் கஸ்ஸாம் படைப்பிரிவு. ஹமாஸ் இயக்கத்தின் இராணுவப் பிரிவு இதுதான்) இதில் அவர் ராணுவ தலைவராக இருந்தார் 

இஸ்ரேலிய இயல்பு வாழ்வில் ஒரு செயற்கைப் பூகம்பத்தை ஏற்படுத்திய, பலஸ்தீன போராட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் காட்டித்தந்த, 
பலஸ்தீனின் வரலாறு நெடுகிலும் அந்நாள் பேசப்பட்டுக் கொண்டு இருந்த மேலும் இஸ்ரேலிய யூதர்களை கதிகலங்க வைத்த பல தாக்குதல்களை இவர் அறிமுகப்படுத்தி வைத்தார் இதனால் இவரைக் கொல்வதற்காக இஸ்ரேலியர்கள் பல தடவைகள் முயற்சித்தனர். தமக்கு மத்தியில் மாறுவேடத்தில் வாழ்ந்துவந்த அவரைத் தேடிப் பிடிக்க இஸ்ரேலுக்கு நான்கு வருடங்கள் பிடித்தன. இதற்காக அது பெருந்தொகைப் பணத்தையும் செலவிட நேர்ந்தது.

1996 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி வெள்ளிக் கிழமை1 காலையில் தனது தந்தையுடன் தொலைபேசிமூலம் உரையாடிக் கொண்டிருந்த அவருக்கு தெரியாமல் யூத தீவிரவாதிகளால் அவருடைய உறவினர் (துரோகி )யின் மூலம்நயவஞ்சகமாக தொலைபேசியில் வெடிகுண்டு வைத்து தொலைபேசி வெடித்துச் சிதறி அவர் ஷஹீதானார்இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இஸ்ரேலுக்கு எதிரான யுத்தத்தில் ஹமாஸும் பலஸ்தீன மக்களும், எத்தனை டொன் குண்டுகளைப் பொழிந்தாலும் எமது சுதந்திரத்தில் ஒரு சாணளவையும் விட்டுத்தர மாட்டோம் என உறுதியாக சொல்லி விட்டனர்.
மறுபுறத்தில், 2006 ஆம் ஆண்டில் லெபனானின் ஹிஸ்புல்லாஹ்வுடன் நடைபெற்ற யுத்தத்தின் பின்னர், அதிக தொகையான இராணுவச் சிப்பாய்களை இந்த யுத்தத்தில் இழந்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.
நாங்கள் ஹமாஸைத் தாக்குவோம். இறுதி வரை போராடுவோம் என இஸ்ரேலியப் பிஷதமர் நெதன்யாகு கத்தித் திரிந்தாலும் எப்படியாவது சமாதான உடன்படிக்கை ஒன்றை நோக்கி எகிப்தையும் பலஸ்தீனப் போராளிகளையும் வற்புறுத்துமாறு ஜோன் கெரியை நெதன்யாகு நச்சரித்த வண்ணமே உள்ளார்.
ஆனால், பலஸ்தீன மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போர் நிறுத்தம் என்பது கிடையாது என ஹமாஸின் அரசியல் துறைப் பொறுப்பாளர் காலித் மிஷல் தெளிவாக அறிவித்து விட்டார்.
பலஸ்தீன் மக்களைப் பொறுத்தவரைக்கும், இந்த யுத்தம் பாரிய உயிரிழப்பை உண்டு பண்ணியது உண்மைதான். ஆனால், பலஸ்தீனப் போராளிகளின் தளத்திலிருந்து நோக்கும்போது, இஸ்ரேலும் மிகக் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது. ஈடு செய்ய முடியாத பல அரசியல் மற்றும் இராஜதந்திர இழப்புகளுக்கு இஸ்ரேல் முகங்கொடுத்துள்ளது.
இத்தோல்விகள் அனைத்தும் கிட்டிய எதிர்காலத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தேசத்தின் உளவியலில் பாரிய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என அரசியல் ஆய்வாளர்கள் ஆரூடம் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பின்புலத்தில், எத்தனை அப்பாவிகளை இஸ்ரேல் கொன்றொழித்தாலும்  இஸ்ரேல் இந்த யுத்தத்தில் தோல்வியடைந்து விட்டது என பல இஸ்ரலிய ஆய்வாளர்களே எழுதுகின்றனர். ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான யுத்தத்தில் இஸ்ரேலின் தோல்வியை அடையாளமிட்டுக் காட்டும் பல அம்சங்கள் காணப்படுகின்றன.
சென்ற வாரம் அமெரிக்காவின் பொரின் அப்யாஸ் என்ற சஞ்சிகையில்  How Hamas Strategic Failure என்ற தலைப்பிலான கட்டுரையில் Areil  Ilian Roth என்ற இஸ்ரேலிய இராஜதந்திரி ஒரு முக்கியமான அம்சத்தை சுட்டிக்காட்டுகிறார். அதாவது, இந்த யுத்தத்தில் ஹமாஸ் மூன்று கண்ணோட்டத்தில் வெற்றி பெற்று விட்டது.
முதலாவது, டெல்அவீவ் மத்திய கிழக்கின் லண்டன், பரஸ் மற்றும் நியுயோர்க் என்ற மாயையை ஹமாஸ் உடைத்து விட்டது. ஏனென்றால், நெதன்யாகுவின் லிகுய்ட் கட்சியின் மிக பிரபல்யமான விளம்பரம் பற்றியெரியும் மத்திய கிழக்கில் ஒரு லண்டனாக டெல்அவீவ் காட்சியளிக்கிறது என்ற வாசகம் பரப்பப்பட்டு வந்தது.
இந்த யுத்தத்தில் ஹமாஸ் இயக்கத்தினர்  ஜஃபரி 75 என்ற ஏவுகணையை டெல்அவீவின் இதயத்தினுள் செலுத்தியதுடன், தலைநகரில் பல்லாயிரக்கணக்கான இஸ்ஷரலியர்களை தொடர்ச்சியாக குண்டு பாதுகாப்பு அரணில் (Bomb Shelters) தூங்க வைத்து விட்டனர். இந்த யுத்ததுடன் டெல்அவீவ் மத்திய கிழக்கின் லண்டன் என்ற மாயை நீங்கி விட்டது.
இரண்டாவது, பலஸ்தீன் தேசத்தின் ரொக்கட்கள்  எங்களுக்கு ஆபத்தல்ல. அங்கு என்னதான் நடந்தாலும் நாங்கள் எங்களின் நாளாந்த வாழ்வை ஓட்டிச் செல்லலாம் என ஹய்பா நகர யூதர்கள் கருதி வந்தனர். ஆனால், இனிமேல் இஸ்ரேல்  ஹமாஸ் போரின்போது தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸின் ரொக்கட்கள் தாக்கியது என்ற வாசகத்துடன் மட்டுப்படுத்தப்படும் செய்திக் குறிப்பாக இருக்க முடியாது. ஹமாஸின் இராணுவ பலம் ஹய்பா மக்களையும் ஒரு கணம் ஆட்டி வைத்துள்ளது. இந்த வகையிலும் ஹமாஸ் இந்தப் போராட்டத்தில் வெற்றியீட்டி விட்டது.
மூன்றாவது, இஸ்ரேல் தேசம் நிம்மதியாக வாழ்வது வெறும் இலாபங்களை மாத்திரம் அள்ளித் தரும் வியாபாரமல்ல Cost Free Business என்ற இஸ்ரேலிய இராஜதந்திரிகள் வட்டாரம் கணிப்பீடு செய்து விட்டன. எமக்கு ஏதேனும் தேவைப்பட்டால், அதனை அடைவதற்கு இஸ்ரேலைத் தாக்கித்தான் பெற்றுக் கொள்வோம் என்ற சமன்பாட்டினை நோக்கி ஹமாஸ் பலஸ்தீனர்களை நகர்த்தி விட்டது.
இனி ஓரளவுக்கு மேல் பேச்சுவார்த்தை என்ற நஷ்டமற்ற வியாபாரம் செல்லுபடியாகது. இம்மூன்று பரிமாணங்களுக் ஊடாகவும் ஹமாஸ் இஸ்ரேலை வெற்றி கொண்டு விட்டது என்கிறார் Areil Ilian Roth எனவே, யுத்தத்தின் இறுதியில் இஸ்ரேல் சில நிலங்களை கைப்பற்றி விட்டு தங்களது வெற்றியை அறிவிக்கலாம். ஆனால், இராஜதந்திர ரீதியில் பாரிய உளவியல் தோல்விகளை டெல்வீவ் சந்தித்துள்ளது என்கிறார் இஸ்ரேலிய இராஜதந்திரி.
இஸ்ரேல்  ஹமாஸ் போராட்டத்தில் ஹமாஸின் வெற்றியை உறுதி செய்த விடயங்களில் மற்றொன்று, பென்கூறியன் விமான நிலையத்தின் மீதான ஹமாஸின் ரொக்கட் தாக்குதல்களினால், பல சர்வதேச விமான சேவை நிலையங்கள் இஸ்ரேலுக்கான சேவையை இரத்துச் செய்தன. அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, ஜெர்மனி மற்றும் துருக்கி போன்ற நாடுகள் நேரடியாகவே பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி விமான சேவையை நிறுத்தின.
இதனால், 65 000 இற்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ய முடியாமல் விமான நிலையத்தில் முடங்கிக் கிடந்தனர். உண்மையில், வேறொரு நாடாக இருக்கும் பட்சத்தில், விமான சேவையை நிறுத்துவது என்பது சாதாரண விடயம். ஆனால், இஸ்ரேலைப் பொறுத்தவரை, இவ்விமான சேவை நிறுத்தமானது,  அது அடைந்த பாரிய இராஜதந்திரத் தோல்வி என அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர். 1991 ஆம் ஆண்டு சதாம் ஹுசைன் இஸ்ரேலைத் தாக்கினார்.
இதன்போது பென்கூறியன் விமான நிலையம் மூடப்பட்டது. அதன் பிறகு முதல் முறையாக ஹமாஸின் ஏவுகணைகளே டெல்அவீவில் அமைந்துள்ள இஸ்ரேலின் பென்கூறியன் விமான நிலையத்தை தாக்கியுள்ளது.  இஸ்ரேலில் ஒரு சாணளவு நிலமும்  பாதுகாப்பானதாக இல்லை என்ற முடிவுக்கு மறைமுகமாக சர்வதேச நாடுகள் வந்துள்ளதையே இவ்விமானச் சேவை இரத்து சொல்லும் செய்தியாகும். ஹமாஸின் அரசியல் துறை பொறுப்பாளர் காலித் மிஷ்அல் காஸாவை யூதர்கள் முற்றுகையிடுகின்றனர்.
நாங்கள் இஸ்ரேலின் வான்பரப்பை முற்றுகையிடுகிறோம் என குறிப்பிட்டார். அதேவேளை, தங்களது விமான சேவைகளை நிறுத்துவதினூடாக ஹமாஸை சர்வதேசம் பலப்படுத்துகிறது  என தனது அரசின் திருப்தியை இஸ்ரேலிய ஜனாதிபதி ஷிமோன் பெரோஸ் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இன்னும் பென்கூறியன் விமான நிலையத்தின் மீதான தாக்குதல்களின் அரசியல் மற்றும் இராஜதந்திர பரிமாணம் பற்றிய ஆய்வாளர்களின் கருத்துக்கள் பல நாட்களாக சர்வதேச மீடியாக்களில் அலசப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த யுத்ததில் ஹமாஸ் தோல்வியடையச் செய்ய முடியாத ஓர் ஆயுத சக்தி என்ற விம்பம் இஸ்ரேலியர்களின் உள்ளத்தில் நிலையாகப் பதிந்து விட்டது. மேலே குறிப்பிட்டது போல, தெற்கு இஸ்ரேலியர்களே ஹமாஸ்  இஸ்ரேலியப் போரின் ஏற்ற  இறக்கங்களை அனுபவித்து வந்தவர்கள்.
இம்முறை முழு இஸ்ரேலியர்களையும் போருக்குள் தள்ளி விட்டது ஹமாஸ். இதனால், பலர் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, தங்களது பிரஜாவுரிமையை இரத்து செய்து விட்டு ஜரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அபாயம் நிலவுவதாக பலஸ்தீன்  இஸ்ரேல் அரசியல் விற்பன்னர் கலாநிதி ஸாலிஹ் நுஃமானி குறிப்பிடுகிறார். டெல்அவீவில் பலர், எங்களது குழந்தைகளை ரொக்கட் அபாய சமிக்ஞை சத்தத்திற்கு மத்தியில் வளர்க்க இனியும் முடியாது என பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இனிவரும் ஹமாஸுடனான போர்கள் வடக்கு  தெற்கு என்ற பாகுபாடின்றி, அனைத்து இஸ்ரேலையும் மையப்படுத்தியதாகவே அமையப் போகிறது. இதனை இஸ்ரேலிய இராணுவமும் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளன.
இதனால்தான், நாட்டின் எல்லா பக்கங்களையும் ரொக்கட் தடுப்பு சாதனங்களை பொருத்தும் வேலைத் திட்டமொன்றை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு செயற்படுத்தி வருகின்றது. மொத்தத்தில் ஹமாஸின் ஆளில்லா விமானங்கள், கடற்படை மற்றும் நீண்ட தூர ரொக்கட்கள் உட்பட, களத்தில் ஹமாஸின் வீரர்கள் காட்டும் சாதனைகள்  போன்றவை இஸ்ரேலியர்களுக்கு மத்தியில் ஹமாஸின் ஆயுதப் பலம் பற்றி இதுவரை இல்லாத ஒரு மனோநிலையை உருவாக்கியிருக்கின்றன.
இந்த யுத்தம் இஸ்ரேலுக்கு மாத்திரம் தோல்வியல்ல. இஸ்ரேலின் வால் பிடிக்கும்  அரபு ஸியோனிஸ்ட்டுகளுக்கும் தோல்விதான். நெதன்யாகுவின் யூத கடும்போக்கு லிக்குயிட் கட்சியின் பலஸ்தீனப் பிரதிநிதி என பட்டம் சூட்டி அழைக்கப்படும் மஃமூத் அப்பாஸும் கூட ஹமாஸின் சாதனைகளையும் தன் யுத்த வெற்றிகளையும் மாத்திரமன்றி, அதனால் சர்வதேச உம்மத்தின் பொது நிலைப்பாடு ஹமஸுக்கு சார்பாக திரும்புவதையும் பார்த்து விட்டு பலஸ்தீனர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை சமாதானம் இல்லை என போலிக் கோஷம் போடும் அளவுக்கு அரபு ஸியோனிஸ்ட்கள் தோல்வியடைந்துள்ளன.


ஏறக்குறைய ஒரு மாத காலம் காஸா மக்களை சொந்த மண்ணில் சிறைப்படுத்தி இஸ்ரேல் இராணும் ஆடிய கொலைவெறியாட்டம் 72 மணித்தியால மனிதாபிமான யுத்த நிறுத்தத்தினுடாக தற்கால நிறைவுக்கு வந்துள்ளது.

வெறியாட்டத்திற்குப் பயன்படுத்திய யூத வெறியர்களின் ஆயுதக் கலஞ்சியம் நிறைவடைந்தும் உலக பொலிஸ் காரணினதும் அவனது கூட்டாளியனதும் ஆயுத வழங்கல்களினூடாக தொடரப்பட்ட மனித வேட்டையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலையில், மரணத்தைக் கண்டு ஓடி ஒதுங்கிய யூத கொலைவெறியர்கள் ஹமாஸ் போராளிகளினால் கொண்டுகுவிக்கப்படுவதை தடுக்க முடியாத நிலையில், இஸ்ரேலுக்குள்ளேயே இஸ்ரேலிய வெறிகொண்ட அரசுக்கெதிரா மக்களின் ஆதரவு சரிந்து வரும் நிலையில் தாக்குதல்களிலிருந்து கடல், வான், தரைப்படைகளை இஸ்ரேல் விலக்கிக்கொண்டுள்ளது.


இஸ்ரேலின் உள்ளுர் தொலைக்காட்சி சேவையொன்று நடத்திய கருத்துக் கணிப்;பொன்றில் காஸாவிற்கான ஆக்கிரமிப்பு தொடங்கிய ஜுலை 8ஆம் திகதி காணப்பட்ட பிரமர் பென்ஜமின் நெட்டனியாகுவின் 82 வீதமான மக்கள் ஆதரவில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலின் சனத்தொகையில் 35 வீதமானோர் யுத்த நடவடிக்கைகளிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமெனவும் 73 சதவீதத்தினர் இந்த யுத்தத்தில் இஸ்ரேல் பின்னடைவைக் காணும் என நம்புவதாகவும் சனல்2 எனும் தொலைக்காட்சி மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மரணத்திற்கு அஞ்சாத ஹமாஸ் போராளிகளின் தாக்குதல்கள் இஸ்ரேலிய தரைப்படைகளை நிலைகுலையச் செய்து, நூறு;றுக்கணக்கில் காவுகொள்ளப்படச் செய்ததை சர்வதேச நடுநிலை ஊடகங்கள் காண்பிக்கத் தொடங்கியவுடன் இஸ்ரேலிய படைவீரர்களும் மக்களும் உளவியல் ரீதியில் தைரியமிழக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தமது தோல்வி வெளிப்படையாக வெளிப்பட்டுவிடுமோ என்று அஞ்சி இஸ்ரேலிய அராஜக அரசு, எகிப்தின் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டு 72 மணித்தியால யுத்த நிறுத்தத்திற்கு வந்துள்ளது.

ஹாமாஸ் ஈமானியப் படைவீரர்களினால் அழிந்து இஸ்ரேல் கொடுங்கோலர்களின் விபரங்களை இஸ்ரேலின் பிரபல பத்திரிகையான ‘ஹாட்டஸ்’ இன் நிருபர்களில் ஒருவரான ஆமூஸ் ஹாரீல் என்பவர் எழுதியுள்ளதாக குவைத்திலிருந்து வெளிவரும் அல்-முஜ்தமாஹ் சஞ்சிகை வெளியிட்டுள்ளதாக முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி 880 இஸ்ரேலியர்கள் இறந்துள்ளதுடன் 1861 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 497 நாசகார படைவீரர்களும் 113 அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர ஆயிரத்துக்குமதிகமான இஸ்ரேலிய படையினர் காயமடைந்துள்ளனர்.

இது தவிர, 166 படையினர் தற்கொலை செய்தார் செய்து கொண்டுள்ளதாகவும் இன்னும் 311 மரணத்திற்குப் பயந்த படையினர் யுத்தத்திற்குச் செல்லாமல் தப்பிக்கொள்வதற்காக தங்களைத் தாங்களே சுட்டிக்கொண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன் நிமித்தம், இஸ்ரேலிய படைகளின் தோல்வியை உறுதி செய்யுமுகமாக இஸ்ரேலிய சுற்றுலாத்துறை அமைச்சர் காஸாவில் நாம் தோல்வியடைந்து விட்டோம் என கடந்த 4ஆம் திகதி குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தை அங்கீகரித்து அதற்கு ஒத்தாசை வழங்கிய அமெரிக்கா இஸ்ரேலியர்களின் தோல்வியை மூடிமறைக்கும் வகையில், தற்போது வாய்திறந்துள்ள. அதுதான் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புக்களும் யுத்தநிறுத்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளமையாகும்..

விலங்கினங்கள் கொல்லப்படுவதற்கும் அவை சித்திரவதை செய்யப்படுவதற்கும் எதிராகவும் அவற்றின் விடுதலைக்கும், சுதந்திரத்திற்காகவும்; குரல் கொடுக்கின்ற, சட்டம் வகுகின்ற இந்த உலக நாடுகளின் அரசுகள,; இஸ்ரேலிய அரசினால் அப்பாவி பலஸ்தீன உயிர்கள் கடந்த ஒரு மாதமாக கொண்டழிக்கப்படும்போது அதைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வமான எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது மௌனம் காத்தது.

நாளாந்தம் கடல், தரை, வான் வழியாக இஸ்ரேலிய கல்நெஞ்சம் கொண்ட கொலைவெறியர்களினால் வளரும் பஞ்சிளம் பாலகர்கள் வகைதொகையின்றி; கொல்லப்படுதை தடுப்பதற்கு இந்த ஐ.நா.வோ, அதன் பாதுகாப்புச் சபையோ தங்களது அதிகாரங்களை இஸ்ரேல் அரசுக்கு எதிராக பிரயோகிக்க முடியாமல் இருந்தது.

அமெரிக்காவினதும் பிரித்தானியவினதும் வளர்ப்புப் பிள்ளையான இஸ்ரேல் பலஸ்தீன மக்களை வெறிகொண்டு பந்தாடியவேளை, உலகின்; ஜனநாயக அரசுகள் பார்வையாளர்களாக காஸா அழியும் வரை பார்த்துக்கொண்டிருக்கப்போகிறதா என மனிதாபிமானமுள்ள மக்கள் கேள்வி எழுப்பினார்;.
தேச விடுதலைக்காக போராடுகி;ன்றவர்களை அடியோடு அழித்த வரலாறு இந்ந பூமியில் இல்லை. விடுதலைக்காகப் போராடும் இனத்தின் ஒரு உயிர் வாழும் வரை இன அழிப்பாளர்களுக்கெதிரான போராட்டம் தொடரத்தான் செய்யும்.

அந்த வகையில், காஸாவின் எதிர்கால சந்ததிகளை, இளைஞர்களை அழித்துவிட்டு காஸாவை கபளிகரம் செய்ய நினைக்கும் இஸ்ரேலும் அதற்கு துனைநிற்கும் நாடுகளும் வரலாற்றுப் பாடங்களை கற்றுக்கொள்வதற்கான காலம் வெகுதுலைவில் இல்லை. சுல்தான் ஸலாகுதீன் ஐயூபின் வாரிசுகள் தோற்க மாட்டார்கள். அவர்கள் வல்ல அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்தவர்கள்.

அவர்கள் ஸஹிதாகும்போதும் அல்லாஹ் ஒருவன் என்று தங்களது வீரல்களை நீட்டியவாறு வீர மரணம் அடைந்துள்ளமையை நாம் இணையத்தளங்களில் கண்டோம்.

இதனை உறுதிப்படுத்துவம் வகையில், ஹமாஸ் இயக்கத் தலைவர் காலித் மிஸால் பி.பி.சி செய்திச் சேவைக்கு அண்மையில் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் காஸா மீதான முற்றுகையை இஸ்ரேல் தளர்த்த வேண்டும். தமது நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் பலஸ்தீனர்களுக்கு தமது அயலவருடன் ஒன்றிணைந்து வாழ முடியாது. நாங்கள் வெறியர்களோ அடிப்படைவாதிகளோ அல்ல. அவர்கள் யூதர்களாக இருப்பதனால் உண்மையில் நாம் அவர்களுடன் போராடவில்லை.

நாம் எந்த ஒரு இனத்துடனும் மோதவில்லை. ஆக்கிரமிப்பாளர்களுடனேயே போராடுகின்றோம். யூதர்களுடனும் கிறிஸ்தவர்களுடனும், அரபியல்லாதோருடனும் ஒன்றாக இணைந்து வாழ நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து வாழ தயாராக இல்லை. இஸ்ரேலை அங்கீகரிக்கப்போதில்லை. எதிர்கால பலஸ்தீன் தேசமே யூத தேசத்தை அங்கீகரிப்பமைத் தீர்மானிக்கும் என்றும் மிஸால் பதிலளித்துள்ளார்.


இந்நிலையில்,  வரலாறு கூறும் இஸ்ரேலின் வரலாற்று நெருக்கு வாரங்களினதும் அக்கிரமங்களினதும் வரலாற்றுப் பார்வையை சற்று உற்றுநோக்குவோம்.


வரலாற்று நெருக்குவராங்கள்
1948ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி அமெரிக்க மற்றும் பிரித்தானிய வல்லரசுகளின் அழுத்தங்களின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையினால் சட்ட விரோதமாக அரபு மண்ணில் ஸ்தாபிக்கப்பட்ட இ;ஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் நெருக்குவாரங்கள்;  அன்றிலிருந்து இன்று வரை பலஸ்தீன மண் மீதும் மக்களின் மீதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


பலஸ்தீன் மீதான ஆக்கிரப்பு மற்றும் இனச்சுத்திகரிப்பு தொடங்கிய 1948ம் ஆண்டு  முதல் இற்றை வரையான 66 வருட காலப்பகுதியில் பல்லாயிரக்காணக்கான இன்னுயிர்களையும் சொத்தழிவுகளையும் பலஸ்தீன் மண் எதிர்கொண்டுள்ளது.


1948 முதல் 1949 வரையான ஒரு வருட காலப் பகுதியில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட அடாவடி, அட்டூழிய தாக்குதல்;  நடவடிக்கைகளி;ன் காரணமாக பலஸ்தீனத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிர் இழந்தும், 15ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்; காயமும்;பட்டனர். இவ்வாறு உயிர் இழந்த, காயப்பட்டவர்களில் அதிகமானோர் சிறுவர்களே.


இந்நிலையில்தான், ஜேர்த்தானினாலும் எகிப்தினாலும் ஆளப்பட்ட பஸ்தீனத்தின் மேற்குக்கரையும் காஸாவும் இணைந்ததாக 1948ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி அரபு லீக்கினால் பலஸ்தீன் அரசாங்கம் பிரகடனப்படுத்தப்பட்டது.


அரபு தேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல,; 66 வருட காலப் பகுதியில் 265 தடவை ; பலஸ்தீன் மீது தாக்குதல்களையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்..


1948ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டிலும் அல்லது ஒரு ஆண்டு விட்டு ஒரு ஆண்டு இஸ்ரேல் பலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. 2004 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் இஸ்ரேல் மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின்போது 1000ம் பேர் கொல்லப்பட்டும் 6000க்கும் மேற்பட்டடோர் காயமுமடைந்தனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 200 பேர் சிறுவர்களாகவும் காயப்பட்டவர்களிலும் அதிகளவிலானோர் சிறுவர்களாகவுமே இருந்தனர்.

ஒவ்வொரு வருடத்திலும் இஸ்ரேலினால் பலஸ்தீன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போது உயிர் இழந்தவர்களின், காயப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பெரும் வீதத்தினர் சிறுவர்கள்தான். இவ்வாறு சிறுவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களின் பின்னணியில் ; பலஸ்தீன எதிர்கால சந்ததியினர்களான சிறுவர்களை அழிக்கும் இஸ்ரேலின் சதித்திட்டம் புலப்படுகிறது.

அரேபிய முஸ்லிம்களின் அமைதிப்பூங்காவாக விளங்கிய பலஸ்தீனத் தேசத்தில் பலாத்காரமாக ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல், பலஸ்தீன் மீது தொடர்சியாக அழுத்தங்களை பல்வேறு வழிகளிலும் மேற்கொண்டு வந்தது. இதனால் பலஸ்தீன மக்களின் தொழில், கல்வி, பொருளாதார, சுகாதார, வாழ்வாதார நடவடிக்கைகள் யாவும் பின்தள்ளப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் நிலப்பரப்பிலிருந்து காஸாவுக்குக் கிடைக்கின்ற மனிதாபிமான அடிப்படைத் தேவையாகிய நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் என்பவற்றின் விநியோகத்தை இஸ்ரேல் படிப்படியாகக் குறைத்து வந்துள்ளது. இதனால் பலஸ்தீன மக்களின் அண்றாட வாழ்நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

2007ஆம் ஆண்டில் காஸாவில் 95 வீதமான தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டன. 3,900 தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த 35ஆயிரம் பலஸ்தீனிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால்  2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் காஸாவில் 40க்கும் 80க்கும் இடைப்பட்ட வீதத்தினர் தொழிலற்றவர்களாகக் காணப்பட்டனர். இவர்களின் ஒரு நாள் வருமானம் 2 அமெரிக்க டொலர்களைவிடவும் குறைவாகவே இருந்தது,

இஸ்ரேலின் நெருக்குவாரங்களும், அட்டூழியங்களும்,; தாக்குதல்களும் தரை, கடல், வான் வழியாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1967முதல் 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களினால் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 1987ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில்  இஸ்ரேலியர்களினால் கொல்லப்பட்டவர்களின்; எண்ணிக்கை 7978 ஆகும். இதில் 1620 பேர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள்.

2007ஆம் ஆண்டில் பலஸ்தீன சனத்தொகையில 17 வீதத்தினர் 5 வயதுக்குக் குறைந்தவர்கள.; 46 வீதமானோர் 15 வயதிற்குட்பட்டவர்கள். காஸாவின்; 1.7 மில்லியன் சனத்தொகையில் 8 இலட்சம்பேர் சிறுவர்களாவர். எதிர்கால பலஸ்தீன சந்ததிகளின் வளர்ச்சி, அதிகரிப்பு இஸ்ரேலுக்கு பெரிய சவாலாகவே உள்ளது. அதனால் பாடசாலைகளையும் பாடசாலை செல்லும் மாணவர்களின் பஸ்களையும் விளையாட்டு மைதானத்தில் விளையாடும் சிறுவர்களையும் தமது கொடூர தாக்குதல்களின் ஊடாக கொண்டழித்து வருகிறது இஸ்ரேல்.

ஐ.நா.வின் சிறுவர்களுக்கான அமைப்பின் தகவல்களின் பிரகாரம். 2013ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஒரு தசாப்த காலப் பகுதிக்குள் 12 வயதுக்கு குறைவான 7000 பலஸ்தீனச் சிறுவர்கள் இஸ்ரேலினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சர்வதேச சட்டத்தை மலினப்படுத்தும் மற்றும் துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கை இது எனக் குறிப்பிடும் ஐ.நா.வின் சிறுவர்களுக்கான அமைப்பானது, ஒவ்வொரு வருடமும் 12 முதல் 17 வயதுக்குட்ட 7000 சிறுவர்கள் இஸ்ரேல் இராணுவத்தினால் கைது செய்யபபடுவதாக அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச சிறுவர் உரிமைகளுக்கான சட்டங்களையும் மீறி கைது செய்யப்பட்ட சிறுவர்களுக்கெதிரா போலிக் குற்றச்சாற்றுக்களைச் சுமத்தி நீதி மன்றங்களினால் தீர்ப்புகளையும் இஸ்ரேலிய இரும்பு இதயம் கொண்ட  இராணுவம் பலஸ்தீனச் சிறுவர்களுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளது.
iது செய்வதும் கொண்டழிப்பதும் என சிறுவர்களை இழக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பலஸ்தீன எதிர்கால சந்ததி அந்த மண்ணில் வாழக்கூடாது என்ற இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவாகப் புலப்படுத்துகின்றது.

சிறுவர்கள் உலகில் மிகவும் பாதுகாப்பாக வாழ்வதற்காக   ஐ,நா.வினால் உருவாக்கப்பட்டுள்ள சிறுவர் உரிமைகள் பட்டயத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களும் சிறுவர் உரிமைகளை மீறுவோறுக்கு வழங்கப்படும் தண்டனைகளும் எந்தளவு தூரத்தில் பலஸ்தீன சிறுவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்பிலும் கைது செய்யப்படுவது தொடர்பிலும் வகைதொகையின்றி கொல்லப்படுவது தொடர்பிலும் செயற்படுத்தப்படுகிறது?

இது தவிர, காஸாவிலும் மேற்குக் கரையிலும் யுத்தத்திற்குப் பின்னராக மனவடு உளநோயினால் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காஸாவில் 54 வீதமான சிறுவர்களும் மேற்குக் கரையில் 43 வீதமான சிறுவர்களும் இந்த உளப்பிரச்சினையினால் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கான உளவியல் சிகிச்சை இன்று தேவையாகவுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட சர்வதே புள்ளிவிபரங்களில்; ஏற்ற, இறக்கம் காணப்பட்டாலும் இஸ்ரேலின் அக்கிரமங்களினால் பலஸ்தீனத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சிறுவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சிறுவர்களை வாழ விடாது அவர்களை வளர விடாது அழிக்கப்படுவதன் பின்னணி என்ன?  என்பதற்கான விடையினை மிக வெளிப்படையாக தற்போது இஸ்ரேலிய ஆட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களும் இஸ்ரேலிய ஊடகங்களும் வெளிப்படுத்தி வருகின்றன.

இஸ்ரேலிய கொடூரத்தின் உச்சநிலை
இஸ்ரேலிய வருடாந்த ஆக்கிரமிப்பின் இவ்வாண்டுக்கான அழிப்பு நடவடிக்கையின் தொடக்கமும்  இஸ்ரேலிய சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு அதற்காக பலஸ்தீன சிறுவன் கடத்தப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டும் 3 பலஸ்தீன சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் கடந்த ஜுலை 8ஆம் திகதி ஆரம்பமானது.


60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகனைத் தாக்குதல்களினூடாகவும் யுத்த விமானங்களினூடாகவும் யுத்தக்கப்பல்கள் மூலமாகவுமென  தரை, கடல், வான் வழியாக கடந்த 28 தினங்களாக, இஸ்ரேலின் கொலை வெறியர்கள் மேற்கொண்ட கொலை வெறியாட்டத்தினால் கடந்த ஜுலை 8ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை 1829 அப்பாவி பலஸ்தீனர்கள் ஸஹிதாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 402பேர் சிறுவர்கள் 241பேர் பெண்கள் 74 பேர் முதியவர்கள். 9450 பேர் காயப்பட்டுள்ளனர் இவர்களில் 2805 பேர் சிறுவர்கள், 1823பேர் பெண்கள் 343பேர் முதியவர்கள்.

இதுதவிர 485,000 பலஸ்தீனர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இது பலஸ்தீனத்தின் மொத்த சனத்தொகையான 18 இலட்சத்தில் மூன்றில் ஒரு பகுதியாகும்.அத்துடன் பாடசாலைகள், பள்ளிவாசல்கள், வைத்திய சாலைகள் வெறிப்படைகளினால் அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன்,  5,510 பொதுக் கட்டடங்கள் முற்றாகவும் 4674 கட்டடங்கள் பகுதியாகவும் அழிக்கப்பட்டுள்ளன. 30,920 குடிமனைகளும், 141 பாடசாலைகளும், 17 வைத்திய சாலைகளும் 7 சுகாதார நிலையங்களும், 41 பள்ளிவாசல்கள் முற்றாகவும் 120 பள்ளிசால்கள் பகுதியாகவும்  10 மையவாடிகளும் அழிக்கப்பட்டுள்ளன. இதுதவிர 22 அம்புலன்ஸ்களும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 83 சுகாதார உதவியாளர்கள் காயப்பட்டும் அதில் 19 பேர் உயிர் இழந்தும் உள்ளனர்.

இவற்றுக்கு அப்பால் தொலைத் தொடர்புகள். மின்சார,  நீர் விநியோகக் கட்டமைப்புக்களும் அழிக்கப்படடு முழு காஸாவுமே முடமாக்கப்பட்டுள்ளது.

மருந்துகள் இன்றி, குடி நீர் இன்றி உண்ண சரியான உணவின்றி இன்னலுறும் பலஸ்தீன மக்கள் 400 கோடி அமெரிக்க டொலருக்கும் அதிகமான இழப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த இழப்புக்களிலிருந்து பலஸ்தீன மக்கள் மீண்டெழுவதற்கு பல தசாப்தங்கள் செல்லும் என சர்வதேச பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பலஸ்தீனத்தில் கொல்லப்படுபவர்களில் ஐந்தில் ஒருவராக சிறுவர்கள் உள்ளனர். சிறுவர்கள் தான் நாளைய தலைவர்களாவும் அறிஞர்களாவும் போராளிகளாவும் தேச விடுதலை வீரர்களாகவும் வளர இருப்பவர்கள். இவர்களைக் கொண்டழித்தால்  தலைமுறைகள் உருவாகுவதற்கு பல ஆண்டுகள் செல்லும். அத்துடன,; சிறுவர்களும் இளைஞர்களும் இல்லாத பலஸ்தீனத்தை மேலும் கபளிகரம் செய்ய முடியும். தமது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்த முடியும். இத்தகைய நாசகாரக  நிலைப்பாடுகளை முன்னெடுத்தே பாலகர்களும் சிறுவர்களும் இளைஞர்களும் இஸ்ரேலினால் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பலஸ்தீனத் தாய்மார்களைக் கொண்டழிக்குமாறு இஸ்ரேலிய பெண் பாராளுமன்ற உறுப்பினர் அண்மையில் தெரிவித்திருந்தார். அத்துடன், இஸ்ரேலிய ஊடகங்கள் சிறுவர்களைக் கொள்ளுமாறு இராணுவத்தை ஊக்கப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மனித நேயமற்ற யூத யுவதிகள் அரைநிர்வணத்துடன் காட்சிகொடுத்து இரும்பு இதயம் கொண்ட இராணுவத்தை அழிப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இதை உண்மைப்படுத்தும் வகையில,; இஸ்ரேல் இரும்பு இராணுவத்தினரால் பலஸ்தீனத்தில் சிறுவர்கள் கொல்லப்படுவதை வெறிபிடித்த யூத இளைஞர்கள் ஆடிப்படி கொண்டாடினர்;. அவர்களின் குதுகலங்களின் போது நாளை காஸாவில் பள்ளிக் கூடங்களில்லை. ஏனெனில் அங்கே குழந்தைகள் யாரும் இருக்கப்போவதில்லை என்ற பாடல் வரிகளைப் பாடியதாக இணையத்தள செய்திகள் குறிப்பிடுகின்றன.


பலஸ்தீனத்தை மீட்பதற்கு பலஸ்தீனத்தில் சந்ததிகள் உருவாகக் கூடாது. சந்ததிகள் வாழ்ந்தால்; அது இஸ்ரேலின் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். இஸ்ரேல் நிம்மதியாக இருக்கமுடியாது. அதனால் பலஸ்தீன எதிர்கால சந்திகளான பஞ்சிளம் பாலகர்களையும் சிறுவர்களையும் இலக்குவைத்து கொடூர இஸ்ரேலிய அரக்கர்கள்  ஒரு மாத காலமாக கொண்டழித்தனர்.
இந்த நிலையிலதான்; ஹமாஸ் ஈமானியப் படைகளின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இஸ்ரேல் யுத்த நிறுத்ததிற்கு தலைசாய்த்து தனது படைகளை காஸாவிலிருந்து விலக்கிக்கொண்டுள்ளது.


யுத்தமின்றி மனித அழிவுகள் இன்றி பலஸ்தீன் தேசத்தில் வெற்றிக்கொடி பறக்க வேண்டும் அல்லாஹ்வையும் ரஸுலையும் முன்னிலைப்படுத்தி போராடிய போர்வீரர்கள் என்றும் தோற்றதில்லை. வெற்றிகொண்ட இஸ்லாமிய வரலாறுகளை நம்முன் உள்ளது. அந்தவகையில் பலஸ்தீன வெற்றிக்காகவும் ஸஹிதாக்கப்பட்டவர்களின் மறு உலக வாழ்க்கைக்காவும் காயப்பட்டவர்களின் சுகத்திற்காகவும் இன்னல்படுவோரின் உள அமைதிக்காவும் ஒட்டுமொத்த பலஸ்தீனத்தின் எழுச்சிக்காகவும் ஒவ்வொரு தொழுகைகளிலும் நமது கரங்களை இறைவன்பால் ஏந்துவோமாக. அல்லாஹு அக்பர்.