Thursday, August 30, 2012

இஸ்லாமும் அறிவியலும்


ஆழ்கடலில் ஏற்படும் பல இருள்களை கூறும் அல்குர்ஆன்

(அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. அல்-குர்ஆன்-24:40

இவ்வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆழ் கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி நிற்கின்றன.

ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது ஆழம் செல்லச் செல்ல இருள்கள் அதிகரித்துக் கொண்டே சென்று முடிவில் தன் கையையே கண் முன்னால் கொண்டு வந்தால் அதை அவனால் காண முடியாத அளவுக்குக் கடுமையான இருள்கள் இருக்கும் என்று இவ்வசனம் கூறுகின்றது.

பட்டப் பகலில் கடல் மீது விழும் சூரிய ஒளி, சிறிது சிறிதாகக் குறைந்து காரிருள் ஏற்படுகின்றது என்று விஞ் ஞானிகள் இன்று கண்டறிந்துள்ளனர். சூரியனின் வெளிச்சத்தில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்கள் உள்ளன.

சூரிய ஒளியின் ஒவ்வொரு நிறத்தின் அலை வேகம் வேறுபடுவதால் கடலில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவில் ஒவ்வொரு நிறமாகத் தடுக்கப்படுகிறது. சிவப்புக் கதிர் கடலில் 15 மீட்டர் வரை தான் செல்லும். 15 மீட்டர் ஆழத்திற்கு மேல் சென்றால் சூரியனின் ஆறு வண்ணங்கள் தான் தெரியும். அங்கே சிவப்பான பொருட்களை மட்டும் காண முடியாத அளவுக்கு ஒரு இருள் ஏற்படுகின்றது.
இப்படி ஒவ்வொரு தொலைவிலும் ஒவ்வொரு வண்ணம் தடுக்கப்படும் போது அந்த ஒளியைப் பொறுத்த வரை ஒரு இருள் ஏற்படுகிறது. எந்த இடத்தில் அனைத்து வண்ணங்களும் முழுமை யாகத் தடுக்கப்படுகின்றதோ அந்த இடத்துக்கு நிகரான இருள் வேறு எதுவும் இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
'கடலுக்குள் ஆயிரம் மீட்டர் செல்லும் போது கண்கள் தடுமாறுகின்றன. இறுதியில் நிறங்கள் அடியோடு மறைந்து விடுகின்றன. பூமியின் மேற்பரப்பில் வரும் இரவுகளை என்னால் கருப்பு என்று கூற முடியாது. அந்த அளவுக்கு இருளைக் கடல் அடைந்து விடுகிறது' அமெரிக்க ஆய்வாளர் பீப் என்பவர் கூறுகிறார்.


இருள்களில் பல படித்தரங்கள் உள்ளன என்பதும், பூமியின் மேற் பரப்பில் இரவில் ஏற்படும் இருளை விட, பட்டப் பகலில் 1000 மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் சென்றால் கடுமையான இருள் ஏற்படும் என்றும் கண்டறியப் பட்டுள்ளது.

தமது வாழ்நாளில் கடல் பயணமே செய்யாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1000 மீட்டர் ஆழத்திற்குச் சென்று அந்த இருள்களை அனுபவித்து உணர்ந்தவர் போல் இந்த வசனத்தைக் கூறியிருப்பது, குர்ஆன் இறை வேதம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

மேலும் இவ்வசனத்தில் கடலின் ஆழத்திலும் அலைகள் இருப்பதாகக் கூறப்படுவதிலும் அறிவியல் உண்மை இருக்கின்றது. இந்த வசனம் அருளப் பட்ட காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை ஆழ்கடலுக்கு உள்ளே அலைகள் இருப்பதை மனிதன் கண்டறியவில்லை.

சுனாமியால் ஜப்பான் போன்ற நாடுகள் பாதிக்கப்பட்ட போது, ஒரு பனை மரத்தின் உயரத்திற்கு அலைகள் எழும்புவதைக் கண்டனர். பூமியின் மேற்பரப்பில் உள்ள அலைகள் அதிக தூரத்திற்குச் செல்ல முடியுமே தவிர பனை மர உயரத்திற்கு மேலே செல்ல முடியாது என்பதால் இது குறித்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இவை கடலுக்கு மேற்புறம் இருந்து பார்த்தால் தெரியாதவாறு கடலுக்கு அடியில் அலைகள் ஏற்படுகின்றன. மணிக்கு 500 மைல்கள் வேகத்தில் பயணிக்கும் சக்தி படைத்த இந்த அலைகள் கடற்கரைப் பகுதிகளை நெருங்கியதும் மோதி பயங்கரமாக ஆக்கிரமித்து அப்பகுதியில் உள்ள வற்றை அழிக்கின்றன.

சுனாமி அலைகள் சுமார் 50 அடி உயரம் வரை எழும்பி கடற்கரையைக் ஒட்டியுள்ள நிலப்பரப்பில் சுமார் ஒரு மைல் தொலைவு வரை கடல் நீரை வீசி அடிக்கும் சக்தி படைத்தவை. தற்போது நம் நாட்டுக் கடற்கரையைத் தாக்கிய சுனாமி அலைகள் சுமார் 25 அடி உயரம் எழும்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கடற்கரைக்கு அருகில் கடல் பூகம்பங்கள் நிகழ்ந்தால் சுனாமி அலைகள் சுமார் 10 நிமிடம் கரையைத் தாக்கும் அபாயம் உள்ளது.


கடலின் ஆழத்திலும் பிரமாண்ட மான அலைகள் உள்ளன. அந்த அலைகள், தரையிலிருந்து விமானம் கிளம்புவது போல் சீறிக் கிளம்புவதால் தான் பனை மர உயரத்திற்கு அது மேல் நோக்கி வர முடிகின்றது என்று கண்டுபிடித்தனர்.

ஆழ் கடலுக்கு உள்ளேயும் பேரலை கள் உள்ளன என்ற இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது மேலும் நிரூபணமாகின்றது

Sunday, August 19, 2012

Monday, August 13, 2012

இன்றைய சமூக சீர்கேடு

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்துக்கு
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்



தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.இதற்கான முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க வேண்டி இருக்கிறது பெற்றோரை மட்டும் நாங்கள் குற்றவாளிகளக்கி விட முடியாது சமூக பொறுப்புள்ள எங்கள் மீதும் கடமை.இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணங்களையும், அதிலிருந்து நம் குடும்பத்தார்களை , சமூகத்தை காப்பாற்றும் வழி வகைகளையும் பார்ப்போம்.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்,
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

3. மொபைல் ஃபோனில் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன SMS வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

5. மார்க்கத்தை போதிக்காமல்,  படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவறுவதற்கு இடமளிப்பது 

6.வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம்வைப்பது அல்லது அவர்கள் இஷ்டப்படி உரிய கண்கானிப்பின்றிவாழ அனுமதிப்பது.

7. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக புடவை கடை, நகைக்கடை என கடைத்தெருவுக்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்,
திருக்குர்ஆனில்அல்லாஹ் கூறுகின்றான்:

''இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்''. (அல்குர்ஆண்: 24:37)

''நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியாடவருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆண் 33:32)

1. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

2. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.

4. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.

5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

6. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க வேண்டாம்.

7.தெரியாத அல்லது அறிமுகமற்ற எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள்.

ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்பத்தினர்  பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும்,பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்கதீர்கள்,அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள்என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.

13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் - இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும். எமது யுவதிகள் இன்று ப்ர்தாவுடைய விடயத்தில் கவலையின்றி அல்லாஹ்வுடைய கட்டளையை நிறைவேறுவதில் பாராமுகமாக பொடுபோக்காக இருக்கின்றார்கள். 
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்;தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்;

தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது;
இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;

மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள்,அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள்,அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;

மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றிப் பெறும் பொருட்டு,நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்'. (அல்குர்ஆன் 24: 31)


இன்று எமது யுவதிகள் அணிகின்ற abaya வினை பார்க்கின்றபோது கண்மணி நாயகம் ஸ்ஹல்லஹ்ஹ் அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறைக்கு உட்பட்டு அணிபவர்களாக இருகின்றர்களா அல்லது இன்றைய நாகரிகத்தை பிரதிபலிகின்ர ஆடைகளை அணிகின்றர்களா என்று நான் சிந்தித்து பார்க்கவேண்டிய கடமை இருக்கிறது. எமது பெண்கள் அணிகிற ஆடை இறுக்கமான தமது அங்கங்கள் வெளித் தெரியக்கூடிய வாறு உள்ளதை நாம் காண்கின்றோம். இதற்கு  காரணம் நாங்களே எமது பெண்பிள்ளைகள் சிறு வயதில் இருந்தே அவர்களை இஸ்லாமிய ஆடை பற்றிய உணர்வை அவர்களுக்கு ஊட்டுவது  எம்  அனைவர் மீதும் கடமையாகும் .

 கண்மணி நாயகம் ஸ்ஹல்லஹ்ஹ் அலைஹிவஸல்லம் அவர்கள் இறுதிநாள் நெருங்கும் போது பெண்கள் ஆடை அணிந்தும் நிர்வாணிகளாக இருப்பார்கள் என்று கூறினார்கள். இதை நாம் இப்பொழுது கண்கூடாக காண்கிறோம் எனவே சகோதர்களே சகோதரிகளே சிந்தித்துப்பாருங்கள் இன்று எமது சமூகத்தின் நிலைப்பாட்டை இந்த நிலைமை மாற்றுவதற்கு ஒவ்வொருவரும் முயற்சி எடுக்கவேண்டும்.

அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை,
பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை கண்டு  ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.

இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.

பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அனைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்.

Sunday, August 12, 2012

கலீபா உமர் (ரலி)


அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாரகதுஹு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


கலீபா உமர் (ரலி) 



கலீபா உமர் (ரலி) அவர்கள், ஒரு நாள் இரவு நகர்வலம் வந்தார்கள். 
அப்பொழுது எங்கிருந்தோ வந்த இனிமையான குரல் அவர்களின் காதில் விழுந்தது. சற்று நெருங்கிய போது அது பெண் குரலாக கேட்டது. இனிய ராகத்தில் அவள் பாடிக் கொண்டிருந்தாள். கூர்ந்து கவனித்த பொழுது, அது ஒரு காதல் பாட்டு என்று தெரியவந்தது.

அந்த வீட்டருகே வந்து, ""யார் அங்கே?'' என்று அதட்டும் தொனியில் கேட்டார்கள். 
அவ்வளவு தான். பாட்டு நின்று அமைதியானது. பயத்தில் பேச்சு வரவில்லை.

""யார் அங்கே?'' என்று திரும்பவும் உமர் கேட்டார்கள். இப்போதும் பதில் வரவில்லை. கதவைத்தட்டினார்கள். நிசப்தமே நீடித்தது. உள்ளே ஏதோ நடக்கிறதோ என்ற சந்தேகம் வலுத்தது. எனவே சுவரேறி கூரையைப்பிய்த்துக் கொண்டு உள்ளே இறங்கினார்கள். உமரைக் கண்ட பயத்தில், ஒரு பெண்மணி அப்படியே உறைந்து போய் தலை குனிந்தவண்ணம் நின்று கொண்டிருந்தாள்.

""யார் நீ? ஏன் இப்படி தனியாகப் பாட்டுப்பாடிக் கொண்டிருக்கிறாய்? அதுவும் காதல் பாட்டு இந்த நடுநிசி நேரத்தில்?''

உமருடைய ஆட்சி நீதிக்குப் பேர் போனது. கருத்துச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த தைரியத்தில் அவள் , ""என்னை யாரென்று கேட்டு, என் மீது குற்றம் சுமத்தும் நீங்கள் இப்போது மூன்று குற்றம் செய்திருக்கிறீர்கள்,'' என்றாள்.

இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் அசந்து விட்டார்கள்.

""என் மீதே குற்றச்சாட்டா? என்ன குற்றம் செய்தேன்?'' என அவளிடம் தயவோடு கேட்டார்கள்.

""முதலாவது நான் ஒரு அன்னியப்பெண், நான் தனியாக இருக்கும் போது அன்னிய ஆடவராகிய நீங்கள் எப்படி உள்ளே வரலாம்

இரண்டாவது அல்லாஹ் கூறுகிறான். "வீட்டிற்குள் நேர்வழியாக வாருங்கள். பின்வாசல் வழியாக வருவது நன்மையல்ல' (குர்ஆன்2:189) என்று. 

ஆனால், நீங்கள் நேர்வழியாக வரவில்லை. 
அடுத்த வீட்டிற்குச் செல்லும் போது ஸலாம் சொல்லி முறையாக அனுமதி பெற்றே செல்ல வேண்டும். அனுமதி கிடைக்காவிட்டால் திரும்பிச் சென்றுவிட வேண்டும். "அனுமதியில்லாமல் உள்ளே நுழையாதீர்கள்' என்று குர்ஆனில் (24:27,28ல்) இறைவன் கூறுகிறான். 
நீங்கள் என் அனுமதியின்றி என் வீட்டினுள் பிரவேசித்துள்ளீர்கள். இதுமுறையா? திருக்குர்ஆனுக்கு விரோதமல்லவா?'' என்றாள்.

உமர் (ரலி) அவர்கள், தான் தவறு செய்திருக்கிறோம் என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டு, அங்கிருந்து உடனே வெளியேறிவிட்டார்கள். இதற்காக பெரிதும் வருந்தி, இரவு முழுவதும் நின்று வணங்கி, இறைவனிடத்திலே பாவ மன்னிப்பு தேடினார்கள்.

காலையில் அந்தப் பெண்ணை அழைத்து வரச்செய்து, ""சரியம்மா நான் செய்தது தான் தவறு. நீ ஏன் நடுநிசியில் பிற ஆடவரை சுண்டி இழுக்கும் வகையில் காதல் ரசம் சொட்ட கவிதை பாடினாய்?'' என்றார்.

அதற்கு அவள், ""கல்யாணமாகி மூன்று மாதத்தில் என் கணவர் என்னை பிரிந்து போருக்கு போய்விட்டார். நீங்கள் தான் அவரை ஒரு படைப்பிரிவோடு அனுப்பிவைத்தீர்கள். அவரது பிரிவின் ஏக்கத்தை என் கவிதையில் வடித்துக் கொண்டிருந்தேன்,'' என்றாள். 

இப்போது உமர் (ரலி) அவர்களுக்கு பொறி தட்டியது.

"ஒரு இளம் பெண்ணை விட்டும் அவளது கணவரை பிரித்த தவறும் நான் செய்திருக்கிறேனா, அப்படியானால் கற்பொழுக்கமுள்ள ஒரு இளம்பெண்ணால் எவ்வளவு காலம் தனது கணவரை பிரிந்திருக்க முடியும்' என்று பெண்களிடம் ஆலோசனை கேட்டார்கள். மூன்று மாதம் வரை இருக்கலாம் என்று அவர்கள் சொன்ன அபிப்ராயப்படி ஒரு அரசாணை பிறப்பித்தார்கள்.

மார்க்கம் கூறுவதற்கு எந்தளவுக்கு ஆட்சியாளர்கள் மரியாதை தந்துள்ளார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். 

Saturday, August 11, 2012

பெர்முடா முக்கோணம்.



அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாரகதுஹு
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்



இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது “சாத்தானின் முக்கோணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது. சில ஆய்வாளர்கள் இந்த முக்கோணப் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள்.


÷”பிளைட்-19′ என்பது குண்டு வீசும் விமானங்களுக்குப் பயிற்சியளிக்கும் விமானமாகும். இது, அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமானது. இந்த விமானம் 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, ஒரு பயிற்சியில் பங்குகொண்டது. அதன் பிறகு, அட்லாண்டிக் கடலின்மீது பறந்துகொண்டிருந்தது. அது மர்மமான முறையில் திடீரென்று பெர்முடா பகுதியில் மறைந்துபோனது. இந்த நிகழ்வைப் பற்றி கடற்படை அதிகாரிகள் ஒரு அறிக்கை அளித்தார்கள். அந்த அறிக்கையில் உள்ள விவரம் இதுதான்:
÷”"விமானம் தன் கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போவதற்குச் சற்று முன்பு, விமானத்தின் திசை காட்டி இயற்கைக்கு மீறிய அளவுகளைக் காட்டியது. அனுபவம் வாய்ந்த விமானி லெப்டினென்ட் சார்லஸ் கரோல் டெய்லரின் மேற்பார்வையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு ஒரு புரியாத புதிராக உள்ளது.”
÷இதைவிட மர்மமான இன்னொரு நிகழ்ச்சி உண்டு. ஒரு கப்பல் காணாமல் போய்விட்டது. அந்தக் கப்பலை மீட்பதற்காக கடற்படை விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த மீட்பு விமானத்தில் மொத்தம் 13 பேர் பயணம் செய்தார்கள். வட அட்லாண்டிக் கடலில் பறந்துகொண்டிருந்தது இந்த விமானம். சில மணிநேரத்திற்குப் பிறகு இந்த விமானத்திலிருந்து எந்தத் தகவலும் இல்லை. அப்படியே தொலைந்துபோய்விட்டது! இந்த சம்பவமும் பெர்முடா பகுதியில் நடந்தது.
÷1872-ஆம் ஆண்டு 282 டன் எடைகொண்ட “மேரி செலஸ்டி’ என்னும் கப்பலும், 1864-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி “மேரி செலஸ்டி’ என்று அதே பெயர்கொண்ட இன்னொரு துடுப்புக் கப்பலும் பெர்முடா முக்கோணப் பகுதியில் மறைந்துபோனதாக பழைய கால செய்தித் தாள்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
÷மேலும், இந்த பெர்முடா முக்கோணப் பகுதியில் 1918-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சம்பவம் நடந்தது. பார்படோஸ் தீவிலிருந்து கிளம்பியது “யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ்’ எனும் ஒரு பயணிக்கப்பல். அது எந்தச் சுவடும் இல்லாமல் தனது 309 ஊழியர்களுடன் தொலைந்து போனது.
÷”ஆரான் பர்’ என்பவர் முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி. இவரது மகள் “தியோடோசியா பர் அல்ஸ்பான்’, தெற்கு கரோலினாவிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு “பேட்ரியாட்’ எனும் கப்பலில் பயணம் செய்தார். பின்பு, அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. பெர்முடா முக்கோணத்தில் 1812-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி நடந்த சம்பவம் இது.


÷முக்கோண எல்லைக்கு உட்பட்ட பகுதிதான் போர்டோரிகோ. இங்குள்ள சான்ஜூ நகரின் வான் பகுதியிலிருந்து ஒரு விமானம் பறந்தது. இந்த விமானத்தின் பெயர் “டக்லஸ் பிசி-3.’ மியாமி நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் திடீரென்று மறைந்துபோனது. அதில் 32 பேர் பயணம் செய்தார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இது நடந்தது 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி.

÷அசோர்ஸிலிருந்து பெர்முடா செல்லும் பயணிகள் விமானம் 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காணாமல் போனது. 1949 ஜனவரி 17-இல் ஜமைக்காவிலிருந்து, கிங்ஸ்டனுக்குப் பறந்து சென்ற இன்னொரு விமானத்தைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. இந்த இரண்டு விமானங்களும் தென் அமெரிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸýக்குச் சொந்தமான ஒரே ரக விமானங்கள். இதுவும் பெர்முடா முக்கோணத்தில் நடந்தது.



÷இன்னும் ஒரு பெர்முடா தகவல். முன்பு கந்தகம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது “எஸ் எஸ் மரைன் சல்பர் குயின்’ எனும் கப்பல். இது, பிறகு 1963 பிப்ரவரி 4-ஆம் தேதி எண்ணெய் ஏற்றிக்கொண்டு புளோரிடா வழியாக சென்றுகொண்டிருந்தது. அதில் 39 பயணிகள் இருந்தார்கள். அந்தக் கப்பலிலிருந்து பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் கப்பல் “காண முடியாத இடத்திற்குச் சென்றுவிட்டது’ என்ற தகவலை மட்டும் பத்திரிகைகளில் காணமுடிந்தது.


÷மேலும், ஒரு வியப்பான சம்பவம் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடந்தது. இது நடந்தது 1921-இல். “ரய் ஃபுகு மரு’ எனும் ஜப்பானியக் கப்பல் எந்தத் தடயமும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக மூழ்கிவிட்டது. அப்போது கப்பலிலிருந்து,”"கத்திக் கூம்புபோல அபாயம் தெரிகிறது…! விரைந்து உதவிக்கு வாருங்கள்…”எனும் வார்த்தைகள் அபாய அறிவிப்பாக அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கத்திக் கூம்பு எனும் வார்த்தை எதைக் குறிக்கிறது என்று இன்றுவரை அறியப்படவில்லை.
÷மேற்கண்ட அனைத்து மர்மச் சம்பவங்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் நடந்திருந்தாலும், ஏன் இப்படி நடக்கின்றன? என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை.


÷1962-இல் “பிளைட்-19′ தொலைந்துபோன நிகழ்ச்சி குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற இதழ் ஒன்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. விமான ஓட்டி,”"நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை…” என்று தகவல் அனுப்பியதாக , அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. மேலும், வின்சென்ட் காடிஸ் என்பவர் “அர்கோசி’ எனும் இதழில் எழுதும்போது, இந்த விமானம் தொலைந்ததற்கு மாயச் சக்திகளே காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், கடற்படை விசாரணைக் குழு அதிகாரிகள்,”"விமானம் செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது” எனும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர். இந்தச் சமயத்தில் பெர்முடா முக்கோணம் குறித்த திடுக்கிட வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள் உலக நாடுகளெங்கும் பத்திரிகைகளில் பிரசுரமாயின...

புரூஸ் ஹெனன் என்ற விமானி சொன்ன தகவல்கள்..

சில வருங்கள் கழித்து புரூஸ் ஹெனன் என்ற விமானி சொன்ன தகவல்கள் பெர்முடா பற்றிய ஆச்சர்யத்தை மேலும் அதிகமாக்கியது,.... புரூஸ் மியாமியிலுருந்து பஹாமா வழியாக பூர்டோ ரிகா சென்று கொண்டு இருந்தார், அப்போது தீடிரென்று அவரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, ஒரு பெரும்புயலுக்கான அறிகுறிபோல் அது தோன்றியது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றி கொண்டே இருந்தது, நிச்சயமாக அவரால் சரியான திசையை கண்டறிய முடியாது, இருப்பினும் அவரது 15 வருட விமானம் ஓட்டும் அனுபவம் அவரை விடாமல் தப்பிக்க முயற்சிக்க வைத்தது, தொலைவில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியை கண்டார், அதில் தெரிந்த ஒளி தப்பிக்க ஒரு நம்பிக்கையை அவருக்கு அளித்தது.

வேகமாக அந்த குகைக்குள் நுழைந்த மறுநொடி அவரது விமானத்துக்கு பின் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது, அவருக்கு முன் கரிய நிற கோடுகள் வளையமாக நிறைய தோன்றின! கிட்டதட்ட 16 கிலோமீட்டர் தூரம் அந்த குகையை கடக்க அவர் பயணித்தாக கூறிகிறார், ஆனால் அதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள் தான், அவரது விமானம் அதை கடக்க பொதுவாக எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது மூன்று நிமிடங்கள், அது மட்டுமல்ல அங்கிருந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தது, மேகங்கள் சாதாரணமாக இல்லாமல் மஞ்சள் மற்றும் சாம்பல் வண்ணத்தில் காணப்பட்டது, பஹாமா அடைய அவர் கடந்த தூரம் 160 கிலோமீட்டர் ஆனால் அதற்கான நேரம் வெறும் மூன்று நிமிடங்கள், ஏறத்தாழ மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருக்கிறார் ஆனால் அவரது விமானத்தின் அதிகபட்ச வேகமே 300 கீலோமீட்டர்கள் தான் மணிக்கு!

÷இந்த மர்ம நிகழ்ச்சிகளுக்கு மேலும் திகிலூட்டும் விதமாக,”நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்’ எனும் கட்டுரையும், “கண்ணுக்குத் தெரியாத வெளிகள்’ மற்றும் “சாத்தானின் முக்கோணத்தில்’ எனும் புத்தகங்களும் வெளிவந்தன. இந்த வெளியீடுகளில், “வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த மாய சக்திகள் கப்பல்களையும், விமானங்களையும் பிடித்துச் சென்றிருக்கலாம். அதில் இருந்த மனிதர்களை அந்த மாய சக்திகள் என்ன செய்தன என்று கடவுளுக்குத்தான் தெரியும்’ என்று எழுதப்பட்டிருந்தன.
÷கரீபியன் தீவு மக்களும்,முக்கோணப் பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள் அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச் சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள்.
÷இந்த மர்மங்களுக்கு மாயச் சக்திகள்தான் காரணம் என்பதைப் பொய்யாக்கும் வகையில், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு நூலகர் டேவிட் குசெ என்பவர், “தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்ட்ரி சால்வ்டு’ என்ற நூலை வெளியிட்டார். அவர், அந்த நூலில் பெர்முடா பகுதியில் நடைபெறும் தொலைதல்களுக்கு மனிதத் தவறுகள்தான் காரணம் என்று எழுதினார். மேலும், சூறாவளித்தாக்குதல், கடலுக்கு அடியில் ஓடும் வளைகுடா நீரோடைகள், மிகப் பெரிய முரட்டு அலைகள், கடற்கொள்ளையர்களின் செயல்கள் ஆகியவையும் காரணங்கள் என்று உறுதியாகக் கூறினார். அதற்கான தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார். சில எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும், இது மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் வேலை என்று கதைவிடுவதற்கு வியாபார நோக்கமே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
÷சில ஆய்வாளர்கள், “”பெர்முடா முக்கோணப் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமங்களாகச் சேகரமாகியிருக்கின்றன. இந்த மீத்தேன் ஹைட்ரேட் நீர் அடர்த்தியைக் குறைத்து பெரிய நீர்க் குமிழ்களை உருவாக்கி கப்பல்களை மூழ்கடித்துவிடுகின்றன” என்று தெரிவிக்கின்றனர். மேலும் சில ஆய்வாளர்கள்,”"திடீர் மீத்தேன் வெடிப்புகள் சேற்று எரிமலைகளை உருவாக்கி கப்பல்களை மிதக்க முடியாமல் மூழ்கடித்துவிடுகின்றன” என்ற தகவல்களை வெளியிட்டனர்.


÷ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நிலவியல் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில்,”"உலகம் முழுதும் கடலுக்கடியிலான ஹைட்ரேட்டுகள் பெருமளவில் இருக்கின்றன. குறிப்பாக, தென்கிழக்கு அமெரிக்கக் கடற்கரையை ஒட்டிய “ப்ளேக்ரிட்ஜ்’ பகுதியில் இச்சேகரங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. இருப்பினும், அக் கடற்பகுதியில் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடப்பதைப்போன்ற எந்த நிகழ்வுகளும்
நடப்பதில்லை. பெர்முடா முக்கோணப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமம் மிகக் குறைவு. எனவே, மர்மச் சம்பவங்களுக்கு ஹைட்ரேட்டுகள்தான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது” என்று தெரிவித்திருந்தது.
அமெரிக்கா மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் கூட்டாக பெர்முடா முக்கோண மர்மம் பற்றி ஆராய, நவீன கருவிகளுடன் சென்றனர். இந்த ஆரய்ச்சி குழுவில் இருந்த 16 பேர் ஏதோ ஒரு விசையால் செலுத்தப்பட்டவர்கள் போல் திடீரென்று மூழ்கி போயினர். எப்படி மூழ்கினர் என்று மற்றவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.



பல ஆய்வுகளின் படி இதுவரை சுமார் 40 கப்பல்களும் , 20 விமானங்களும், சிறு சிறு மரக்கலகளும் இதுவரை பெர்முடா முக்கோணம் பகுதிகளில் கானாமல் போனதாக தெரியவருகிறது,
இந்த மாய மர்மங்களுக்கு பலர் பல வித விளக்கம் அளித்துள்ளனர்.  இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாகக் கூறமுடியாத நிலையே உள்ளது.
காரணங்கள்

பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக இவ் முக்கோண வலயத்தில் ஏற்படுகின்ற விபத்துக்கள்,மர்மமான சம்பவங்களுக்கு பல காரணங்களும் விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன.அவற்றின் நம்பகத்தன்மை என்பது இன்றளவும் சந்தேகத்துக்குரியது.
கொலம்பஸ் தம் கடல் பயணத்தின் போது இவ் வலயத்தில் பல வழமைக்கு மாறான நிகழ்வுகளும் சம்பவங்களும் இடம் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.ஊகங்கள்,ஆய்வுகளின் முடிவுகள்,ஆய்வாளர்களின் கருத்துக்கள் என்பவற்றினை அடிப்படையாக கொண்டு,இப் பகுதியில் நிகழும் சம்பவங்களுக்கான காரணிகள் விஞ்ஞான பூர்வமாகவும்,அனுபவ பூரவமாகவும்,அமானுஷ்யங்களுடன் தொடர்புபடுத்தியும் முன் வைக்கப்படுகின்றன.அத்தகைய காரணிகள் சிலவற்றை பார்ப்போம்.


நாட்டுப்புற கதைகளில் கூறப்படும் காரணங்கள்

1000 ஆண்டுகளுக்கு முன்பு போனீசிய,கார்தகீனியர் ஆகியோர் சார்கோ கடலைக் கடந்து செல்ல முடிந்த காலத்திலேயே அந்தக் கடலைப் பற்றியும்,பெர்முடா முக்கோணம் பற்றிய கதைகளும் தொடங்கிவிட்டன.
பழங் கதைகளின் படி அப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆதி வாசிகள் சிறந்த ஆற்றல் வாய்ந்தவர்களாக காணப்பட்டனர்.அவர்களது இயந்திரங்கள் கடலில் மறைந்துள்ளன.அவற்றின் சக்திகளால் அவர்கள் கப்பல்களையும் விமானங்களையும் கடலுக்கடியில் கொண்டுசெல்கின்றனர் என்கின்றனர்.இது வெறும் கற்பனையே.
இதனை ஒத்த கருத்து ஒன்றினை ஆய்வாளர் "Edgarcaye " கூறுகின்றார்.இன்னும் சிலர் கடலில் வாழ்கின்ற கொடிய விலங்குகளின் செயல் தான் இத்தகைய சம்பவங்களுக்கு காரணம் என்று கூறுகின்றனர்.
மேலும் வானிலிருந்து பூமியை நோக்கியை விழும் நெருப்பு கோளங்கள் வெடிப்பதால் கப்பல்கள் தாக்கப்படுகின்றது என்றும்,பெரிய கயிறு ஒன்றின் மூலமாக் கப்பல்கள் விமானகள் ஆகியவை வேறு ஒரு கடல் பரப்பிற்கு கொண்டுசெல்லப்படுகின்றது என இன்னொரு காரணமும் நாட்டுப்புறங்களில் கூறப்படுகிறது.

வேற்றுலகவாசிகளின் செயல்

பல ஆய்வாளர்கள் இத்தகைய விபத்துகள் சம்பவங்கள் வேற்றுக்கிரகவாசிகளின் செயலாக இருக்கலாம் என்கின்றனர்.அதாவது எம்மைவிட அறிவியலில் சிறந்த உயிரினங்கள் மனிதனை அறிவியலையும் அதனால் தனக்கு ஏற்படும் பாதிப்புக்களையும் அறிந்து கொள்ள இத்தகைய செயல்களை மேட்கொள்ளலாம் என்கின்றனர்.

ஐவான் சாண்டர்சன்,மேன்சன் வாலண்டின் போன்றோரின் கருத்தானது "அறிவில் சிறந்த உயிரினங்களின் செயலாக இது இருக்கலாம்" என்கின்றனர்.
பெர்முடா முக்கோணத்தை பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் அனைவரும் UFO (Unidentifiend Flying Object ) "அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் பற்றியும் ஆராய்ந்து வருகின்றனர்."இது பற்றி ஆய்வாளர்கள் பலர் இக் காரணங்களை தவறானது என்று முன் வைக்கின்றனர்.
தெற்கு புளோரிடா தொடக்கம் பஹாமா தீவுகள் உள்ள பகுதிகள் வரை UFO க்களின் நடமாட்டம் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது. இவ் வலயம் பெர்முடா முக்கோணத்தில் விமானங்கள்,கப்பல்கள் காணாமல் போகும் பிரதான இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீரோட்டங்களின் செல்வாக்கு

கடலின் ஆழத்தில் ஓடுகின்ற வெப்ப,குளிர் நீரோட்டங்களின் செல்வாக்கின் காரணமாக இத்தகைய நிகவுகள் இடம்பெறலாம் என கூறப்படுகின்றது. அதாவது உலகின் கிழக்கு கண்டப் பகுதிகளின் கடற்பரப்பில் வெப்ப நீரோட்டங்கள் தென்திசையிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கின்றன.அதே போல் குளிர் நீரோட்டங்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிக்கின்றன.இவ்விருவகை நீரோட்டங்களும் எதிர் எதிர் திசையில் சந்திக்கும் போது வெப்ப நிலை மாறல்,ஆழம் அதிகரிப்பு அமுக்க வேறுபாடுகள் என்பன ஏற்படுகின்றன.இத்தகைய ஒரு நிலையில் திசைகள் மாறுபாடும் ஏற்படுகின்றது.இவ் விளைவுகளின் காரணமாக காந்தபுலம் ஏற்படும்.இதனால் செய்தித் தொடர்பு பாதிக்கப்பட்டு அங்கு காந்த விசை பரவி அந்த பகுதியில் செல்லும் விமானங்களும் கப்பல்களும் பாதிப்படைகின்றன.

மீதேன் ஹைட்ரேட்டுக்களின்(Methane Hydrates ) தாக்கம்

ஆஸ்திரி கடல் ஆய்வுகளின் படி மீதேன் ஹைட்ரேட்டுக்கள் நீரின் அடர்த்தியை குறைப்பதினால் அவற்றினால் கப்பல்களை மூழ்கச் செய்ய முடியும் என்கின்றனர். கடலில் திடீரென ஏற்படும் திடீர் மீதேன் வெடிப்பு கப்பல் மிதக்கத் தேவையான மிதவைத் தன்மைகளை வழங்க முடியாது.ஆனால் அமெரிக்காவில் நிலவியல் துறை ஆய்வியல் படி முக்கோணப் பகுதியில் 15000 வருடங்களில் எரிவாயு ஹைட்ரேட்டுக்களின் வெளிடுகள் எதுவும் காணப்படவில்லை எனக் குறிப்பிடுகின்றனர். இதனால் இக் கருத்தும் ஏற்புடையது அல்ல.
கடலில் ஏற்படும் திடீர் காலநிலை மாற்றங்கள்

சிலர் கடலில் ஏற்படுகின்ற திடீர் வெப்ப அதிகரிப்பு,அமுக்கம் ,உயர அதிகரிப்பு என்பவற்றின் காரணமாக இவ் விபத்துக்கள் ஏற்படலாம் என்கின்றனர். ஆனால் வானிலை நிலைமைகள் சாதகமாக இருந்த போதும் கூட சில கப்பல்கள், விமானங்கள் காணாமல் போயுள்ளன.

கடற் கொள்ளை

பெர்முடா முக்கோணம் பற்றிய ஆரம்ப காலங்களில் முன்வைக்கப் பட்ட கருத்தே கடற் கொள்ளையர்களின் செயலாக இருக்கலாம் என்கின்றனர்.குறிப்பாக கரிபியன் கடற்பரப்பில் கடற் கொள்ளையர்களின் செயற்பாடு அதிகமாக காணப்பட்டது.1560 - 1760 வரை அது மிகவும் உச்ச நிலையில் காணப்பட்டது.எனினும் கப்பல்கள் கொள்ளை அடிக்கப்பட்டாலும் அவற்றின் எச்சங்களாவது கிடைக்கக்கூடியதாக இருக்கும்.ஆனால் அவ்வாறான எத்தகைய தடையங்களும் இதுவரை கிடைத்த ஆய்வுகளில் வெளிவரவில்லை.

கப்பல் மர்மமான முறையில் மூழ்குவது காரணம்...

கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது, பல வருட ஆராய்ச்சிக்கு பின் கடலுக்கடியில் இருக்கும் எரிமலையின் வெடிப்பின் காரணமாக ஏற்படும் பூகம்பமே அதற்கு காரணம் என அறியப்பட்டது, பூமி அதிர்வால் கடலில் ஏற்படும் அலைகள் சுனாமியை போன்று ராட்சசதனமாக இருக்கும், கவனிக்க இது கரை தொடவேண்டும் என்ற அவசியமில்லை, நடுகடலிலேயே அமைதியாகி விடலாம், அதனை
“ரோக் வேவ்ஸ்” என்று அழைக்கிறார்கள், 

ஒரு சிறிய அலைக்கு பின் வரும் பெரிய அலை அதனுடன் சேர்ந்து ராட்சசஅலையாக உருவாகி பெரிய கப்பலை கூட கவிழ்ந்துவிடும்!,... கப்பலிலிருந்து தளத்திற்கு எந்த செய்தியும் வராதது அவர்களுக்கு இன்னொரு ஆச்சர்யம்!





பெர்முடாமுக்கோணம் (சைத்தானின்முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது) வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில் உள்ள ஒரு பகுதி.அங்கு நிறைய வானூர்திகளும், கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மறைதல்களுக்கு அமானுட ஆற்றல் அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர்களின் செயல்திறன் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.

இந்த முக்கோணத்தின் எல்லைகளில், புளோரிடா நீரிணைப்பு, பஹாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகள் பகுதி மற்றும் அட்லாண்டிக் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை அடங்கும்; இன்னும் சிலர்  அதனுடன் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கின்றனர். புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் ஒர் இடம்; சான் ஜுவான், பூர்டோ ரிகோ; மற்றும் பெர்முடாவின் மத்திய-அட்லாண்டிக் தீவு ஆகியவை தான் பல பிரபலமான எழுத்துப் படைப்புகளில் முக்கோண எல்லைகளாக குறிப்பிடப்படுகின்றன. விபத்துகளில் அநேகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா நீர்ச்சந்தியைச் சுற்றிய தெற்கு எல்லைப்பகுதியில் தான் குவியம் கொண்டுள்ளது.
இந்தப் பகுதி உலகின் மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து பகுதியாக இருக்கிறது. இதன் வழியாக அமெரிக்கா,ஐரோப்பா, மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினந்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன. சொகுசுக் கப்பல்கள் நிறைய உள்ளன. பொழுதுபொக்கு வானூர்திகள் எப்போதும் புளோரிடாவுக்கும் தீவுகளுக்கும் இடையில் போகவும் வரவுமாய் உள்ளன. வடக்கிலிருக்கும் இடங்களில் இருந்து, புளோரிடா, கரீபியன், மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு நிறைய வர்த்தக மற்றும் தனியார் வானூர்திகள் செல்கின்றன.

நிறைய நிகழ்வுகள் துல்லியமற்ற விளக்கங்களாக இருந்திருக்கின்றன அல்லது பின்வந்த ஆசிரியரால் சேர்த்துக்கட்டி எழுதப்பட்டனவாக இருக்கின்றன என்பதற்குக் குறிப்பிடத்தக்க ஆவணச் சான்றுகள் உள்ளன. அத்துடன் இந்தக் காணாமல் போன நிகழ்வுகளின் எண்ணிக்கையும் இயல்பும் கடலின் வேறு எந்தப் பகுதிக்கும் ஒத்ததாகவே இருக்கிறது.குறிப்பிடத்தக்க அளவில் புலனாய்வு செய்தும் விளக்க முடியாதிருக்கும் பின்வரும் நிகழ்வுகள் இருக்கவே செய்கின்றன என்பதை நிறைய அதிகாரப்பூர்வ தகவல்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன‌..
http://en.wikipedia.org/wiki/Bermuda_Triangle

லைலதுல் கத்ரின் சிறப்புகள்


அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாரகதுஹு
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்



ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்…

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறைவரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1-5)

முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத் துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி (35)

லைலத்துல் கத்ரு எந்த நாள்?

லைலத்துல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந் தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற் காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்க ளில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெறமுயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)

நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவுதான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.

ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுக ளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இர வான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்த வராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல்: அஹ்மத் (20700)

மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

லைலதுல் கத்ர் 27வது இரவா?

லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுக ளில் ஒன்றாகத்தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவுதான் என்று முடிவு செய்து பெரிய விழா வாகக் கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.

லைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆவியா (ரலி),
நூல்: அபூதாவூத் (1178)

இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர் இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.

இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர் இரவு என்பது நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப் பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின் ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளை யிட்டுள்ளார்கள். மேலும் 27 என்று குறிப்பிட்டுள்ளதுபோல் 23 என்றும் வந்துள்ளது. அவற்றைப் பாருங்கள்.

ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி),
நூல்: அஹ்மத் (15466)

இதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.

ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில், இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 2021

இதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.

லைலதுல் கத்ரு இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங் கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 2022

இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவான விடையை கூறியுள்ளார்கள்.
இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், நபியவர்கள் கேட்கப்படும் கேள்விக ளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா?’ என்று கேட்கும்போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள்” என்று கூறுகிறார்கள்.
திர்மிதீ : 722

அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 23வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.

இஃதிகாஃபின் சட்டங்கள்

இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்’ என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.

ரமலானில் இஃதிகாப் எதற்காக?

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண் ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத்தான் ரமளானின் கடைசி பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ரமலான் முதல் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார் கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) வந்து நீங்கள் தேடக் கூடியது (லைத்துல் கத்ரு) உங்க ளுக்கு இனி வரும் (நாட்களில் உள்ளது)’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நாங்களும் அவர்க ளுடன் இஃதிகாப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) வந்து, நீங்கள் தேடக் கூடியது உங்களுக்கு இனி வரும் (நாட்களில் உள்ளது)’ என்றார்கள். ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு செய்ய எழுந்தார்கள். யார் நபியுடன் இஃதிகாப் இருந்தார்களோ அவர்கள் திரும்பிச் செல்லட்டும்! லைலத்துல் கத்ரு இரவு பற்றி எனக்குக் காட்டப் பட்டது. நான் மறக்கடிக்கப்பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாட்களில் ஒற்றையான நாளில் உள்ளது. நான் களிமண் மீதும் தண்ணீர் மீதும் ஸஜ்தாச் செய்வது போல் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி),
நூல்கள்: புகாரி (813), முஸ்லிம் (2168)

இஃதிகாபின் ஆரம்பம்

இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள்.
நூல்: முஸ்லிம் 2007

ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம் நாள் பஜ்ராக இருக்க முடியாது.

அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும். 20 ஆம் நாள் தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாக இருக்கும்.

இஃதிகாபின் முடிவு நேரம்

இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரி பில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம். ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம்.

அபூஸயீத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்)
நூல்: புகாரி 2018

நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப் இருக்கும்போது இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் போவார்கள் என்ற செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30 இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்பதை அறியலாம்.

பெருநாள் தொழுகை முடித்து விட்டுத்தான் வீடு திரும்ப வேண்டுமென சிலர் கூறினாலும் அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை.

பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா?

ஆயிஷா ரலி கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசி பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன். (சுருக்கம்)
நூல்: புகாரி 2033

இந்த ஹதீஸின் அடிப்படையில் சிலர் கூடாரம் அமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் வேறு சில ஹதீஸ்களை நாம் கவனிக்கும் போது இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் குறிப்பானது என்பதை விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா (ரலி)யின் கூடாரம், ஹஃப் ஸாவின் கூடாரம், ஸைனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண் டார்கள். இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?” என்று கேட்டு விட்டு இஃதிகாஃப் இருக்காமல் திரும்பி விட்டார்கள். ஷவ்வால் மாதம் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி (2034)

நீங்கள் நன்மைத்தான் நாடுகிறீர்களா?” என்ற கேள்வியும், நபி (ஸல்) அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டு கின்றது.

மேலும் பின்வரும் ஹதீஸை பார்த்தாலும் மற்றவர்கள் கூடாரம் அமைக்கக் கூடாது என்பதை விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்து விட்டுத் திரும்பியபோது நான்கு கூடாரங்களைக் கண்டு இவை என்ன? கேட்டார் கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது…
நூல் :புகாரி – 2041

நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளனர். இதை கவனத்தில் வைத்து மேற்கூறிய ஹதீஸை கவனியுங்கள். காலைத் தொழுகையை தொழுது விட்டு நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் பார்த்த கூடா ரங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு. ஒன்று நபி (ஸல்) அவர்களுக் குரியது, இரண்டாவது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்குரியது. மூன்றா வது அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குரியது. நான்காவது அன்னை ஸைனப் (ரலி) அவர்களுக்குரியது.

இஃதிகாப் இருப்பதற்குக் கூடாரங்கள் அவசியம் என்றிருந்தால் நபித் தோழர்களும் கூடராங்களை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைத்தி ருந்தால் நான்கிற்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இருந்ததோ மொத்தம் நான்கு கூடாரங்கள் மட்டுமே! எனவே நபித் தோழர்கள் கூடாரங்களை அமைக்கவில்லை என்பதையும் நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு கட்டளையிடவில்லை என்பதையும் நாம் அறியலாம். எனவே இஃதிகாபிற்கு கூடாரங்கள் தேவையில்லை.

இஃதிகாபில் பேண வேண்டிய ஒழுங்குகள்

பள்ளிவாசலில் இருக்கும்போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது.

பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்கா தீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
(அல்குர்ஆன் 2:187)

தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது

ஆயிஷா ரலி கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும்போது தமது தலையை வீட்டிலிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன். இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டி ற்குள் வர மாட்டார்கள். நூல்: புகாரி 2029

இதிலிருந்து தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்பதையும் அவசியத் தேவைக்காக வெளியே செல்லாம் என்பதை அறியலாம். தேவை ஏற்படும் போது பள்ளிவாசலில் அவசியமான பேச்சுக்களைப் பேசலாம்.

ஸபிய்யா (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசி பத்து நாட்களில் இஃதிகாப் இருக்கும்போது அவர்களிடம் நான் செல்வேன் சற்று நேரம் அவர்களு டன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள்.
(ஹதீஸின் சுருக்கம்)
நூல்: புகாரீ 2035

இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமலிருப்பதும் ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும் மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல் இருப்பதும், அணைக்காமல் இருப்பதும் அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் சுன்னதாகும். மேலும் நோன்பு இல்லாமல் இஃதிகாஃப் இல்லை. ஜுமுஆ நடக்கும் பள்ளியில் தவிர இஃதிகாப் கூடாது”
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: அபூதாவூத் (2115)

இந்த ஹதீஸில் இடம் பெறும் சுன்னத்தாகும்” என்ற வாசகம் யாருக்குரி யது என்பதிலும், இந்த வாசகத்தை அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்களா? என்பதிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமலிருப்பதும் ஜனாஸா வில் பங்கெடுக்காமல் இருப்பதும் மனைவியைத் தீண்டாமல் இருப்பதும் அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் சுன்னதாகும். ஜுமுஆ நடக்கும் பள்ளியில் தவிர இஃதிகாப் கூடாது” என்ற வாசகம் இந்தச் செய்தியில் இடம் பெறும் ஸுஹ்ரி என்ற அறிவிப்பாளருக்கு உரியது. இதை ஹதீஸின் வாசகமாக குறிப்பிட்டவர் யூகமாகக் குறிப்பிட்டு உள்ளார் என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: ஸுனன் தாரகுத்னீ, பாகம்: 2, பக்கம்: 201)

இதே செய்தியை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த வாசகத்தை நம்பகத் தன்மையுள்ள பெரும்பாலானவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அடுத்து வருபவர்களின் சொல்லாகவே குறிப்பிட்டுள்ளார்கள். யார் இதை ஹதீஸின் வாசகமாகக் குறிப்பிட்டு உள்ளார்களோ அவர்கள் யூகமாகவே கூறியுள்ளார்கள். நூல் : பைஹகீ 8377

இமாம் ஸுஹ்ரீ அவர்கள் ஹதீஸ்களை அறிவிக்கும் போது தனது கருத் தையும் ஹதீஸ் வாசகங்களுடன் (இது என் கருத்து என்று) தெளிவு படுத் தாமல் இணைக்கும் வழக்கம் உள்ளவர். எனவே இந்தச் செய்தியை அடிப்ப டையாகக் கொள்ள முடியாது. (அல்லாஹ் மிக அறிந்தவன்)

இதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது நோயாளியை சந்திப்பார்கள், ஜனாஸாவில் கலந்து கொள்வார்கள் என்றும் சில ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. அவையும் பலவீனமானவையே! புகாரியின் (2029) ஹதீஸின் அடிப்படையில் இஃதிகாஃப் இருப்பவர் அவசியமான தேவைகளைத் தவிர மற்ற எவைகளுக்கும் வெளியில் செல்லா மல் இருப்பது சிறந்தது.

Wednesday, August 8, 2012

கலீபா உமர் இப்னு கத்தப் (ரலி)




அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாரகதுஹு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


கலீபா உமர் இப்னு கத்தப்  (ரலி) 

பிற சமய மக்களின் வழிப்பாட்டு உரிமையை எவ்வாறு இஸ்லாம் பாதுகாத்துள்ளது என்பதை பறைச்சாற்றும் வகையில் 

" அல்லாஹ்வின் அடிமையும் மூமீன்களின் கலீபாவுமாகிய உமரிடமிருந்து: ஜெரூஸலம் நகரவாசிகளின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இந்த ஒப்பந்தம் பாதுகாப்பளிக்கிறது. 

அவர்களுடைய தேவாலயங்களும் சிலுவைகளும் பாதுகாக்கப்படும். 

இந்த ஒப்பந்தம் நகரின் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதாகும். அவர்களின் வணக்கத் தலங்களில் வழிபாடுகள் செய்ய எந்த தடையும் இல்லை. 

அவை முஸ்லிம்களின் அதிகாரத்துக்கு உட்படுத்தப்படவோ உடைக்கப் படவோ மாட்டாது. 

மக்கள் அனைவரும் தங்களது மார்க்கத்தை பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்படுகிறது. அவர்கள் எந்த விதமான பிரச்சினைகளுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள்......"

நகரின் வாசல்கள் திறக்கப்பட்டன. உமர் (ரலி) அவர்கள் நேராக மஸ்ஜிதுல் அக்ஸா (Temple of David)  ஐ நோக்கிச் சென்றார்கள். அங்கு David's Arch இன் கீழ் தொழுதார்கள். 

பின்னர் நகரின் மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயத்துக்குச் சென்றார்கள். அவர்கள் அங்கிருந்த வேளை ழுஹர் தொழுகைக்கான நேரம் வந்தது. "நீங்கள் இங்கேயே தொழுது கொள்ளலாம்" என்று தேவாலயத்தின் பிஷப் கூறினார். " இல்லை, இல்லை", உமர் (ரலி) சொன்னார்கள், 

" நான் இவ்விடத்தில் தொழுதால், இந்த இடத்தை உங்களிடமிருந்து கைப்பற்றுவதற்குக் காரணமாக ஒரு காலத்தில் இதை முன் வைக்க முடியும்". 

பின்னர் தேவாலயத்தின் படிக்கட்டுகளில் நின்று தொழுகையை நிறைவேற்றினார்கள். பின்னர் பிஷப்பிடம் ஒரு கடிதத்தையும் கையளித்தார்கள். அதன் வாசகங்கள் பின்வருமாறு இருந்தன. "இந்தப் படிக்கட்டுகள் அதான் சொல்லும் இடமாகவோ கூட்டுத் தொழுகை நடாத்தப்படும் இடமாகவோ எச்சந்தர்ப்பத்திலும் இருக்கக் கூடாது."

இஸ்லாம் கூறும் மதநல்லிணக்கம் 

சமத்துவம்;
நீதி நேர்மை என்ன என்பதை உலக ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய உமர் (ரலி) அவர்களின் செங்கோல் ஆட்சிக் காலத்தில் ஒரு யூதனுக்கும்,முஸ்லிமுக்கும் பிரச்சனை ஏற்பட இருவரும் நீதி தேடி கலீபா உமர் ரலி அவர்களிடம் வந்து முறையிடுகின்றனர்.

இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த கலீபா அவர்கள் யூதனின் பக்கம் நியாயம் இருப்பதை அறிந்து அவனுக்கு சாதகமாக தீர்ப்புக் கூறினார்கள் பிரதிவாதி முஸ்லிம் தன் இனத்தை சார்ந்தவர் அல்லது தன் மார்க்கத்தை சார்ந்தவர் என்பதற்காக அவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கவில்லை. இங்குதான் மதநல்லிணக்கம் உணர்த்தப்படுகின்றது.

சமநீதி;
கலீபா உமர் ரலி அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்த மற்றுமொரு நிகழ்ச்சி உங்களின் மனதைத் தொடும் என நினைக்கிறேன் ஹஜ்ஜுடைய காலத்தில் ஒரு சமயம் கலீபா உமர் ரலி தம்இருப்பிடம் அமர்ந்திருக்க அருகில் அம்ரு பின் ஆஸ் ரலி அவர்களும் அவரது மகன் அம்ரு என்பவரும் அமர்திருந்தனர் 

அச்சமயம் மிஸ்ரு நாட்டைச் சார்ந்த ஒரு மாற்று மதத்தவன் கலீபாவிடம் வந்து இதோ உங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கக் கூடிய அம்ரு என்னை அநீதமாக அடித்து விட்டார் அவரிடம் நான் உங்களைப் பற்றி கலீபாவிடம் முறையிடுவேன் எனக் கூறியபோது அவர் என்னிடம் தாரளமாகக் கூறிக்கொள் நான் சங்கை மிக்க கவர்னரின் மகனாவேன் எனவே கலீபா (மாற்று மத்ததவனான) உனக்கு எதிராக என்னை ஒன்றும் செய்துவிடமட்டார் எனக்கூறினார் 
இது பற்றி தங்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன் எனக்கூறி நின்றான்.

அதைக்கேட்டு கலீபா அவர்கள் கோபமுற்றவர்களாக அந்த மிஸ்ரு நாட்டவனிடம் சவுக்கைக் கொடுத்து கண்ணியமிக்க கவர்னரின் மகன் உன்னை அடித்ததைப் போன்று நீயும் அவரை அடித்து பழிதீர்த்துக்கொள்! எனக் கூறி நீதிக்கு முன் ஆட்சியாளர்,பொது மக்கள் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டியதோடு நீதிக்கு முன் சாதிமத வேறுபாடு இல்லை என்பதை உணர்த்தி மதநல்லிணக்கத்திற்கு ஓர் முன்னுதாரணம் கட்டினார்கள்.

Monday, August 6, 2012

கருகும் மியன்மாரும், காத்திருக்கும் இலங்கையும்.



அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாரகதுஹு
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்



உலக வரை படத்தில் ‘அன்பே அடிப்படை’ என்ற கொள்கையைக் கொண்ட பௌத்த தேசம் என அடையாளப்படுத்தப்பட்ட மியன்மார் (பர்மா),  இன்று நரமாமிச வேட்டையாடும் அரக்கத்தனத்திற்கு எடுத்துக் காட்டாய் திகழ்கிறது. மேற்கு மியன்மாரின் ராக்கோன் மாநிலத்தில் ஜீவிக்கும் ‘ரோஹிங்கியா முஸ்லிம்கள்’ பெரும்பான்மை இனமாகிய பௌத்தர்களால் முழுமையான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். காவி உடை தரித்த காடையர்களின் தலைமையில், இராணுவ – அரசியல் பின்புலத்துடன் கதறக்கதற வெட்டிச் சாய்த்தும், சுட்டெரித்தும், கற்பழித்தும் கொலை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் உயிர்களின் எண்ணிக்கை இற்றை வரை 30 000 ஆயிரத்தை அண்மித்துவிட்டது.

சமாதானப் புறாவாக உலகை வலம் வரும் ஜனநாயகவாதி ஆங்சான் சூகி, ஆன்மீக வாதியாக அடையாளப்படுத்தப்படும்  தலாய்லாமா மற்றும் மனித உரிமைக்காய் குரல் கொடுப்பவர்கள் என்று மார்தட்டும் மேற்குலக வல்லாதிக்க நாடுகள் உள்ளிட்ட எவரும் மியன்மார் கொலைக்களத்தை கண்டித்து இது வரை எதிர் நடவடிக்கைகள் எடுக்காமல் மௌனம் சாதித்தே வருகின்றனர். அமரிக்காவின் எலும்பை உண்டுவிட்டு வாலை ஆட்டித்திரியும் சர்வதேச முஸ்லிம் உம்மத்தின் உறுப்பு நாடுகளான அரபு தேசங்களோ எதுவுமே நடைபெறாதது போன்று சமூக பிரக்ஞையின்றி இருப்பது எமது உம்மத்தின் உணர்வுகள் கூட செத்துவிட்டன என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தினந்தோரும் குருதிச் சொட்டுக்களால் உறைந்து காணப்படும் மியன்மார் அட்டூழியத்தினை இலங்கை தேசத்தின் அரசியல் தலைமைகளாவது கண்டித்து அறிக்கை ஆர்ப்பாட்டங்கள் புரிந்தார்களா என்றால் அதனையும் எங்கும் காணமுடியவில்லை. தன்னினத்தவன் அட்டூழியம் புரிந்தாலும் அது அகிம்சை தான் என்ற இனவாத உணர்வு இன்று நம் மண்ணிலும் ஆழமாய் வேர்விட்டு வளர ஆரம்பித்துள்ளமை நம்மவர்களுக்கான அபாய சமிக்ஞையாகவே கருதவேண்டியுள்ளது.

கருகும் மியன்மாரின் தீப்பொறி இலங்கையையும் கருகச் செய்யுமோ என்று சிந்திக்க வேண்டிய தருணத்தில் இன்று இலங்கை முஸ்லிம்கள் உள்ளனர். தம்புள்ளை, குருனாகல, தெஹிவலை என்று ஆரம்பித்த முஸ்லிம் விரோதப் போக்கு இன்று பல்பாரிணாமம் பெற்று வியாபித்து வருவது கவலைக்கிடமானது, கண்டிக்கத்தக்கது. தம்பகம மஸ்ஜிதுல் அர்க்கம் ஜூம்ஆ பள்ளிவாசல் முற்றவெளியில் பிரித் ஓதி தொழுகையை இடை நிறுத்துமாறு பிக்குமார்கள் நடாத்திய அராஜகம், கொழும்பு – 07 எம்.எச்.எம்.அஷ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலையும் அதனை அண்டிவாழும் குடும்பங்களையும் இடம்பெயரச் செய்து விட்டு அவ்விடத்தில் ரஷ்ய தூதுவராலயத்தின் 4 மாடி கட்டடத்தை நிர்மாணிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை, ராஜகிரிய கிரிடா மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் முஸ்லிம்கள் வழமைக்கு மாற்றமாக அதிகமாக வந்ததனை சாட்டாக வைத்து தொழுகையை தடுப்பதற்கு பிக்குமார்கள் ஒன்று திரண்டமை, கிண்ணியா பாலத்திற்கு அருகில் முஸ்லிம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வரவேற்பு கோபுர நிர்மாணப்பணிகளை இடைநிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளமை, திருகோணமலை மாவட்ட அநுராதபுர எல்லைக்கிராமமான ரொட்டவௌ பகுதியில் பரம்பரை பரம்பரையாக செய்து வரப்பட்ட சேனைப் பயிர்ச்செய்கை காணியும் விவசாயக் காணியும் வனவள அதிகாரிகளினால் பரிமுதல் செய்யப்பட்டு வருகின்றமை, மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மீனவர்களுக்குரிய கோந்தப்பிட்டி துறியனையை விடத்தல் தீவு கிறிஸ்தவ மீனவர்களுக்குரியதாக நீதிபதியினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை, மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் நொச்சிக்குளத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போது அவர்களுக்கெதிராய் ஆர்ப்பாட்டம் செய்தமை, சன்னாரி பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போது அவர்களது காணிகளை கொடுக்காததோடு வேறு இடத்திலும் காணிகளை வழங்கக் கூடாது என்று மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியமை, புதுக்குடியிருப்புக்கும் எருக்கலம்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் 200 முஸ்லிம்களுக்கு சொந்தமான 1500 ஏக்கர் காணியினை தனியொரு தமிழருக்கு வழங்கியமை, எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போல் ‘தம்புள்ளை புனித புமி பிரச்சினைக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தீர்வு கிடைக்காவிட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும்’ என்று அஸ்கிரிய மகாநாயக்க உடுகம ஸ்ரீபுத்தரக்கித்த தேரர் விடுத்துள்ள மிரட்டல், ‘இன்று எமக்குள்ள பிரச்சினை தமிழ் பயங்கரவாதமல்ல! இஸ்லாமிய தீவிரவாதமே! இதற்காக ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டும்’ என்று இனவாதத்தை கக்கியவண்ணம் களமிறங்கியுள்ள பௌத்த செயல் முன்னணியின் சூடு பரக்கும் அறிக்கை, தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கெதிராய் கிளர்ந்தெழச் செய்யும் விதத்தில் ‘கல்முனைக்குச் செல்லும் தமிழ் பெண்கள் முஸ்லிம் வியாபாhpகளிடம் இலவசமாக பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள்… முஸ்லிம்கள் தன்னினப் பெண்களை அடக்குமுறையில் வைத்து விட்டு எமது தமிழ் பெண்கள் மீது சுகம் கொள்கின்றார்கள்’ என்ற வரிகளுடன் மட்டக்களப்பில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் உள்ளிட்ட அண்மைய முன்னெடுப்புகள் யாவும் இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைத்து போpன மற்றும் தமிழ் கிறிஸ்தவ இனவாதிகள் தொடுக்கும் இனவாத தாக்குதலாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

எரியும் மியன்மார் தீச்சுவாலையின் பின்புலத்தில் இருந்து கொண்டு இலங்கை முஸ்லிம்களையும் அவர்களின் இருப்பையும் சேர்த்து கருகச்செய்வதற்கான காய் நகர்த்தல்களாகவே மேற்படி நிகழ்வுகளை எம்மால் நோக்க முடிகிறது. பதவிகளை தக்க வைப்பதற்காய் போராடி சிதறிய செங்கற்கள் துகள்களாய் நாட்புறமும் சிதறிக் காணப்படும் வங்குரோத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளை நம்பி நம் சமுதாயத்தின் இருப்பை ஸ்தீரப்படுத்த நினைப்பது வெறும் பகற்கனவாகவே அமைய முடியும்.

அல்லாஹ்வின் அச்சத்தை உள்ளத்தில் இருத்தி, கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று, சமுதாய அக்கறையுடன் களத்தில் இறங்கும் மாற்று சக்திகள் குறித்து முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறாh;கள். சிந்திக்குமா நம் சமுதாயம்???

ஜசக்கல்லாஹ்கைர
ஆசிரியர் ரிஸ்மின்

Thursday, August 2, 2012

உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)


அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாரகதுஹு
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) வரலாற்றில் இஸ்லாமிய அறிஞர்களால் ஐந்தாம் கலீஃபா என்று வர்ணிக்கப்பட்டவர்கள்.நீதிமிக்க நான்கு  கலீஃபாக்களின் ஆட்சிக்கு பிறகு சீரழிந்து போன அரசியலை திருத்தி இஸ்லாமிய ஆட்சிமுறையை மீண்டும் அறிமுகப்படுத்தி அதன் பலன்களை மக்களுக்கு வழங்கி சுவைக்க செய்தவர். அரச குடும்பத்தில் பிறந்த இவரது இளமைப் பருவத்தில் இவரது தந்தை எகிப்தின் மிக முக்கிய மாநிலம் ஒன்றின் ஆளுநராக பதவி வகித்தார்.உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) தகுந்த வயதை அடைந்தபோது, உமையாக்களின் கீழ் அவரும் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அக்காலத்தில் ஆட்சியில் இருந்த அரச பரம்பரையினர் கொடுத்திருந்த பெருந்தோட்டங்களில் பெரும்பகுதி அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சொந்தமாக இருந்தது.உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களுக்கு மட்டும் கிடைத்த சொத்துக்களிலிருந்து ஆண்டுதோறும் ஐம்பதினாயிரம் அஷ்ரஃபிகள் வருமானம் கிடைத்தாக ஒரு மதீப்பீடு கூறுகிறது.எனவே அவர் ராஜபோகத்தில் மூழ்கியிருந்தது இயல்பானதே.அவரது உணவும் உடைகளும் வாகனங்களும் பழக்கவழக்கங்களும் ஒர் அரச குமாரனின் உணவு, உடைகளையும் பழக்க வழக்கங்களையும் ஒத்திருந்தன.

இத்தகைய அவரது வாழ்க்கை நிலைமைகள் அவர் பிற்காலத்தில் மேற்கொள்ளவிருந்த பெரும்பணிகளை எவ்வகையிலும் குறிப்பால் உணர்த்தக் கூடியவைகளாக அமையவில்லை. ஆனால் அவரது தயார் ‘உமர் (ரலி)’ அவர்களின் பேத்தியாவார். ‘முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்து ஐம்பதாண்டுகள் பூர்த்தியாவதற்குள்,உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) பிறந்தார்கள்.அவர் பிறந்த காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஸஹாபாக்கள்-உற்ற தோழர்களில் பெரும்பாலோரும் அவர்களைப் பின்பற்றிய தாபீஈன்களும் உயிர்வாழ்ந்திருந்தனர்.

அவரது கல்வி ஹதீஸ்,பிக்ஹுக் கலைப் பயிற்சியோடு தொடங்கியது விரைவிலேயே அவர் முதல்தர முஹத்திஸாகவும் (புரட்சியாளர்) பிக்ஹு கலைவல்லுநராகவும் திகழ்ந்தார்.எனவே,எனவே இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களது காலத்திலும் நேர்வழி நடந்த கலீஃபாக்களின் காலத்திலும் சமூக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்தவை எவை என்றும்,கிலாஃபத்துக்குப் பின்னர் முடியாட்சி தோன்றிய பின் ஏற்பட்ட மாற்றங்கள் எவை என்றும் அறிவுரீதியாகப் புரிந்துக் கொள்வது அவருக்குச் சிரமமாக இருக்கவில்லை.

இஸ்லாத்துக்கு முரணான மாற்றங்களை அவரது நெருங்கிய மூதாதையரே கொண்டுவந்திருந்தமையால்,நடைமுறையில் அவர் பல மூட்டுக்கட்டைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.இம்மாற்றங்களின் விளைவாக அவரது உற்றார் உறவினர்களுக்கு மட்டுமின்றி,அவருக்கும் அவரது குழந்தைகளுக்கும் பல பயன்களும் சலுகைகளும் கிடைத்திருந்தன.இவ்வாறான சூழ்நிலையில் அவரது குடும்பப் பெருமை, சொந்தநலன்கள்,அவரது குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வு ஆகியவை காரணமாக,அவர் தம் மனச்சான்றையும் அறிவையும் உலகாயதப் பயன்களுக்காக அர்ப்பணித்து,உண்மை,நீதி,அறம் ஆகிய பண்புகளைப் பொருட்படுத்தாமல் ஃபிர்அவ்னைப் போல ஆட்சி செலுத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் 37 வயதை எட்டிய நிலையில்,எதிர்பாராத விதமாக அரியணை கிட்டியபோது,தமது தலையில் சுமத்தப்பட்ட பெரும் பொறுப்பினை உணர்ந்தார்.எதிர்பாராத இந்நிகழ்ச்சி அவருள் ஒரு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்திற்று.நீண்டகாலம் ஆழ்ந்து சிந்தித்து அனைத்தையும் திட்டமிட்டு இஸ்லாமிய வழியை ஏற்றுக் கொண்டவர் போல அவர் எவ்வித சிரமமும் இன்றி ஜாஹிலிய்யத் (அறியாமைக் காலம்) காட்டிய வழிக்கெதிராக இஸ்லாமிய வழியை எளிதில் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

அரியணையை (ஆட்சிப் பொறுப்பை) அவர் பாரம்பரியச் சொத்தாகப் பெற்றாலும், மக்களின் உறுதிமொழியை பெறுமுன் அவர்,மக்கள் தம் விரும்பிய ஒருவரைத் தங்கள் கஃலீபாவாகத் தேர்வு செய்து கொள்வதற்கு அவர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் உண்டு என்று தெள்ளத் தெளிவாகப் பிரகடனம் செய்தார்.ஆனால்,மக்கள் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களையே தம் தலைவராகத் தேர்ந்தெடுக்க விரும்பினர். ஆதலால் அவர் இஸ்லாமிய கிலாஃபத்தின் (மக்கள் பிரதிநிதித்துவ) பெரும் பொறுப்புகளை ஏற்க வேண்டியதாயிற்று. அவர் ஆட்சிபீடத்தில் அமர்ந்த உடனேயே போலியாட்சி அகம்பெருமையையும் மன்னராட்சி எதேச்சாதிகார மனேபாவத்தையும் அரசவைப் படாடோபங்களையும் அதிகாரத்தின் மற்றெல்லா வெளிப்படைக் காட்சிகளையும் நீக்கிவிட்டு,ஆரம்ப கால கலீஃபாக்கள் நடத்திய எளிய வாழ்க்கையை மேற்கொள்ள உறுதிபூண்டார்.

அடுத்து அவர், அரச குடும்பத்தினர் அனுபவித்து வந்த சலுகைகள்,சிறப்புரிமைகள் மீது கவனம் செலுத்தி,அவர்களை சாதாரண முஸ்லிம்களின் மட்டத்துக்குக் கொண்டு வந்தார்.அவர்,தமக்குச் சொந்தமான தோட்டங்கள் உட்பட அரச குடும்பங்களுக்குச் சொந்தமான தோட்டந் துரவுகள் அனைத்தையும் அரசுக் கருவூலத்தில் சேர்த்துவிட்டார். சட்டவிரோதமாகக் கைப்பற்றப்பட்ட அசையும்,அசையா சொத்துக்கள் யாவற்றையும் அவற்றின் உரிமையாளர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

இதன் விளைவாக அவரது சொந்த வருமானம் பெரிதும் பாதிப்புற்றது. ஆண்டுதோறும் அவர் பெற்று வந்த 50,000 அஷ்ரஃபிகள் 200 ஆகக் குறைந்தன. அதுவுமின்றி அரசுக் கருவூலத்திலிருந்து தமக்கோ தம் குடுமபத்துக்கோ ஓரு காசு செலவிடுவதையும் அவர் சட்டவிரோதமாகவே கருதினார்.கலீஃபாவாக (மக்கள் பிரதிநிதியாக) தாம் ஆற்றிய சேவைக்கு எவ்வித ஊதியத்தையும் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். சுருங்கச் சொன்னால் இப்பொழுது அவரது வழ்க்கையே முழுமையாக மாற்றமடைந்து விட்டது.கிலாஃபத்தை ஏற்குமுன் அவர் ஒர் அரசகுமாரனைப் போல வாழ்ந்தார்.ஆனால் அதன் பின்னர் அவர் முற்றிலும் மாறி ஒரு சராசரி மனிதர் ஆனார்.

குடும்பத்தையும் குடும்ப அலுவல்களையும் ஒழுங்குபடுத்திய பின்னர்,அவர் ஆட்சிமுறையில் சீர்திருத்தம் செய்தார் நீதியற்ற ஆளுநர்களை அகற்றிவிட்டு நேர்மையானவர்களை ஆளுநர்களாக நியமிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். மக்களின் வாழ்க்கை,சொத்து,கண்ணியம் ஆகியவற்றின் மீது வரையறையில்லாத அதிகாரம் செலுத்தி வந்த அரசாங்க அதிகாரிகளைக் கடுமையாக எச்சரித்து,நீதி நியாயப்படி நடக்கச் செய்து,சட்டமுறை சார்ந்த ஆட்சியை நிலைநாட்டினார்.வரிவிதிப்பு தொடர்பான கொள்கையை முற்றாக மாற்றி அமைத்து சட்ட முரணான வரிகளை ஒழித்துக்கட்டியதுடன் உமையாக்கள் மதுபான வடிசாலைகள் மீது விதித்திருந்த வரிகளையும் ஒழித்துவிட்டார்.ஸகாத் சேகரிக்கும் முறையையும் அவர் சீராக்கி திருத்தியமைத்து, பொது வேலைகளுக்குப் பயன்படத்தக்கதாக அரசுக் கருவூலத்தைத் திறந்துவிட்டார்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதிகளுக்காக அவர்களுக்கு இழப்பீடு கொடுத்து மேலும் அநீதி நிகழா வண்ணம் நிலைமையைச் சீராக்கினார்; சட்டமுரணாக கைப்பற்றப்பட்டிருந்த அவர்களது வணக்கத் தலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைத்தார்; அவர்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவித்தார்.ஷரியத் சட்டப்படி அவர்களுக்குரிய உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் வழ்ங்கினார்.

பொது மக்களுக்கு கல்வி அறிவூட்டுவதற்காகப் பரந்த அளவிலான ஏற்பாடுகளைச் செய்து,நுண்ணறிவாளர்கள் குர்ஆன்,ஹதீஸ் மீதும் பிக்ஹு சட்டத்துறை மீதும் கவனம் செலுத்துமாறு செய்தார்.இதன் வாயிலாக வலிமைமிக்கதொரு அறிவியல் இயக்கம் தோன்றச் செய்தார்.இதன் விளைவாக பிற்காலத்தில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்,இமாம் ஷாபி  ஈ(ரஹ்)அவர்கள், இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் போன்ற பேரறிஞர்கள் தோன்றினர்.

இவ்வாறாக அல்குர்ஆனில் பின்வருமாறு கூறப்பட்டுள்ள இஸ்லாமிய ஆட்சியின் நோக்கத்தை அவர் நிறைவேற்றினார்.
   الَّذِينَ إِن مَّكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ ۗ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ 
அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது. 
(அல் குர்ஆன் 22:41)

அக்காலத்தில் ரோம ராஜ்யமே,முஸ்லிம்களுக்கு எதிரான பலம்வாய்ந்த அரசாக இருந்தது.அந்த நாட்டிற்கும் இஸ்லாத்துக்கும் இடையே ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக நிலவிய அரசியல் தகராறு இன்னும் தீரவில்லை. ஆனால் ரோம இராஜ்ஜியம் கூட உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் உயர்ந்த ஒழுக்க சீலத்தினால் கவரப்பட்டது. கலீஃபா அவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்தபொழுது ரோமச் சக்கரவர்த்தி பின்வருமாறு கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது:

“துறவி ஒருவர் உலக இன்பங்களைத் துறந்து ஏகாந்தமான ஒரிடத்தில் தியானத்தில் ஈடுபட்டு இருந்தால் நான் கிஞ்சிற்றும் ஆச்சரியப்பட மாட்டேன். ஆனால் இந்த மனிதனின் காலடியில் ஒரு மாபெரும் பேரரசே இருக்க அவர் அதனை ஒதுக்கி விட்டு ஒரு பக்கீரின் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது”

இரண்டரை ஆண்டுகாலமாக பாடுபட்டு அறியாமைக் கால ஆட்சிமுறையாக மாறிப்போன அரசியல் வாழ்கையின் பல்வேறு துறைகளையும் புரட்சிகரமாக மாற்றியமைத்தார். விரைவிலேயே உமையாக்கள்,இவ்விறைபக்தி மிக்க மனிதருக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினர். இஸ்லாத்தின் வாழ்க்கை எழுச்சியில் அவர்கள் தமது சுகபோக வாழ்வின் சரிவை,மரணத்தைக் கண்டனர். ஆதலால் அதன் மறுமலர்ச்சிப் பணியினை அவர்களால் சகிக்க முடியவில்லை. இறுதியில் கலீஃபாவுக்கு எதிராக அவர்கள் சதி செய்தனர். 39 வயதே ஆன இளைய கலீஃபாவை நஞ்சூட்டிக் கொன்றனர்.