அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...!
Assalaamu Alaikkum Va Rahmatthullaahi Va Barakkaatthahu In All My Dears Brothers And Sisters ..
26:176 ஷுஐப் அவர்களிடம்; "நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?" எனக் கூறியபோது
26:176 When Shu'ayb said to them, "Will you not fear Allah ?
26:177 "நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்
26:177 .Indeed, I am to you a trustworthy messenger.
26:178 "ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.
26:178 So fear Allah and obey me.
26:179 "மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
26:179 And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
26:180 "அளவையை நிறைவாக அளவுங்கள்; (அளவையைக்) குறைப்பவர்களாக இராதீர்கள்.
26:180 Give full measure and do not be of those who cause loss.
26:181 "நேரான தாராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள்.
26:181 And weigh with an even balance.
26:182 "மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள் - மேலும், நீங்கள் பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள்.
26:182 And do not deprive people of their due and do not commit abuse on earth, spreading corruption.
26:183 "அன்றியும், உங்களையும், உங்களுக்கு முன்னாலிருந்த படைப்புகளையும் படைத்த அவனுக்கே அஞ்சங்கள்" (எனக் கூறினார்.)
26:183 And fear He who created you and the former creation."
26:184 அவர்கள் சொன்னார்கள்; "நிச்சயமாக நீர் மிகுதம் சூனியம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்.
26:184 They said, "You are only of those affected by magic.
26:185 "நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி (வேறு) இல்லை உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே நிச்சயமாக நாங்கள் எண்ணுகிறோம்.
26:185 You are but a man like ourselves, and indeed, we think you are among the liars.
26:186 "எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால், வானத்திலிருந்து ஒரு துண்டை எங்கள் மீது விழும்படிச் செய்யும்."
26:186 So cause to fall upon us fragments of the sky, if you should be of the truthful."
26:187 "நீங்கள் செய்து கொண்டிருப்பதை என் இறைவன் நன்கறிவான்" என்று அவர் கூறினார்.
26:187 He said, "My Lord is most knowing of what you do."
26:188 பின்னரும், அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர் ஆகவே, (அடர்ந்திருண்ட) மேகத்துடைய நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது நிச்சயமாக அது கடினமான நாளின் வேதனையாகவே இருந்தது.
26:188 And they denied him, so the punishment of the day of the black cloud seized them. Indeed, it was the punishment of a terrible day.
26:189 நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:189 Indeed in that is a sign, but most of them were not to be believers.
26:190 மேலும், நிச்சயமாக உம் இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
26:190 And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
No comments:
Post a Comment