அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகதுஹு
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அழிக்கப்பட்ட சமூதாயமும் படிப்பினை பெற வேண்டிய எமது சமூகமும்
பகுதி 2
பகுதி 1 ஐ வாசிக்க
பகுதி 2
பகுதி 1 ஐ வாசிக்க
அடுத்து வந்தார்கள் நபி ஹூத் அலைகிவஸ்ஸலாம். அவர்களுடைய கூட்டம் தான் ஆது சமூதாயம். மிகவும் பயங்கரமானவர்கள் "மண்அசத்து மின்னாகூவா" எங்களை விட பலசாலி இந்த உலகத்தில் யாராவது இருகின்றர்களா ??? ஒரு மனிதனுடைய சராசரி உயரம் 120 அடி பாலைவனமணலிலே காலடி எடுத்து வைத்தால் ஓரப்படை வெடிப்பு விழுந்துவிடும். பாறங்கல்லை தமது வெறும் கைகளால் குடைவார்கள். அல் குரான் சொல்கிறது ஒரு மனிதன் கல்லுமலைக்கு மேலாக ஏறி தனது காலை ஓங்கி உதைத்தான் என்று சொன்னால் பயிறு செய்வதற்கு செப்பனிடப்பட்ட வயல் நிலத்தில் காலடி வைப்பது போன்று இருக்கும், எங்களைவிட பலசாலி யார் ? என்ற இறுமாப்பு அவர்களிடத்தில் இருந்தது. அல்லாஹ் அவர்களுக்கு அனுப்பிய சோதனை மழையை நிறுத்தினான் மூன்று வருட காலமாக அந்த சமூகத்திற்கு ஒரு துளி மழை கூட கிடைக்கவில்லை. அந்த ஊரில் எழுபது நபர்களை தெரிவு செய்து கஹ்பதுல்லாஹ்விற்கு அனுப்புகிறார்கள் மழையை வேண்டி துஆச் செய்யுமாறு மிகவும் படிபினையான சம்பவம் அந்த எழுபது நபர்களும் அல்லாஹ்விடம் கையேந்துகிறார்கள் துஆ கேட்கிறார்கள் அல்லாஹ்வை கொண்டு ஈமான் கொண்டிருந்தார்கள் ஆனால் அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான் இந்த நபியை தான் எங்களால் பின்பற்றமுடியாது என்று அடம்பிடிதார்கள். எங்களிடம் சிலபேர் இருகின்றார்கள் அல்லாஹ் இருக்கிறான் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் தொழுகின்றோம் ஆனால் இந்த கல்யாணத்தை தான் நபி சொன்ன மாதிரி செய்தமாதிரி செய்யுங்கள் என்றால் அது விருப்பமில்லை. இதே போன்று ஒரு தவறை தான் ஆது சமூகம் செய்தது. மழையை அல்லாஹ்விடம் கேட்பதற்கு கஹ்பதுல்லாஹ்வை நாடி வருகிறார்கள் என்றால் கஹ்பதுல்லாஹ் ஒரு புனித பூமி என்பது நபி இப்ராகீம் அலைகிவஸல்லாம் அவர்களுக்கு முன்னாலே தெரிந்திருந்தார்கள் என்றால் நாம் சிந்தனைக்கு எடுக்க வேண்டும் . அந்த எழுபது பேர் துஆ கேட்டு போகிறார்கள் ஊர் எல்லையை நெருங்குகிறார்கள் ஒரு கருமேகம் அவர்களை துரத்துகின்றது " எங்களுடைய துஆவுடைய சக்தி என்ன ? கேட்டுவிட்டு வரும்போதே எம்மை தொடர்ந்து கருமேகம் வருகின்றதே என்று குதூகலமாக வருகிறார்கள் ஊர் மக்கள் எல்லோரும் ஒரு பள்ளத்தாக்கில் ஒன்று சேருகிறார்கள். குளிர் காற்றோடு ஆரம்பிக்கிறது காற்று கொஞ்சம் கொஞ்சமாக வேகமா வீச ஆரம்பிக்கிறது அப்படியே ஆரம்பித்த காற்று ஏழு இரவுகள் எட்டு பகல்கள் முழுக்க வீசுகிறது. இது போன்ற ஒரு காற்றை இந்த உலகம் கண்டிராது அவ்வளவு பயங்கரமான காற்று ஐந்து நிமிடங்கள் வீசினாலே உலகம் சீரழிந்து விடும் தொடர்ச்சியாக ஏழு இரவுகலும் எட்டு பகல்களும் வீசியது என்ன செய்தார்கள் தெரியுமா அந்த காற்றுக்குத் தூக்கி விசபடாமல் இருப்பதற்காக தன்னுடைய உடம்பில் அரைவாசியை பாரங்கல்லுகுள் புதைத்து கொண்டார்கள். ஓங்கி உதைத்து கல்லை குழியாக்கி அந்த கல்லுகுள்ளே காலின் அரைவாசியையும் கையின் அரைவாசியையும் போட்டு கல்லுமலைகளை பிடித்தார்கள். அல்லாஹுத்தஆலா சொல்லுகின்றான் வேரோடு பிடிங்கி எறியப்பட்ட ஈச்சமரத்தை போன்று அந்த கல்லையும் கிளப்பிக்கொண்டு அவர்கள் சுழற்றி அடிக்கப்பட்ட அடி இருக்கின்றதே அந்த இடத்தில் வாழ்ந்த இலட்சகணக்கான மக்களில் ஒருவர் கூட மிஞ்சாமல் அத்தனை பேருடைய தலையும் கழண்டு முண்டமாக கிடந்தது வரலாற்று ஆசிரியர்கள் எழுதும் போது எழுதுகிறார்கள் எங்களை விட பலசாலி இந்த உலகத்தில் யாராவது இருக்கின்றார்களா ?? அதுவரைக்கும் உலகத்திற்கு தெரியாதாம் இந்த காற்றிற்கு இவ்வளவு சக்தி இருகிறதா என்று. பலத்தை பற்றி பேசியவர்களுக்கு கண்ணுக்கு விளங்காதா ஒரு அற்பமான காற்றை சூறாவளியாக ரூபம் எடுக்க செய்து அல்லாஹ் அவர்களை அழித்து நாசாமகினான். சிலபேர் இருக்கிறார்கள் செய்கின்ற பாவம் எல்லாம் செய்துவிட்டு வருடத்திற்கொருமுறை கஹ்பதுல்லஹ்விட்கு சென்று உம்ரா செய்துவிட்டு வந்தால் செய்த பாவமெல்லாம் கழிபட்டு போய்விடும் என்று நினைகின்றார்கள். அல்லாஹ் பாதுகாக்கவேண்டும் அதே மாதிரியான தவறைதான் ஆது சமூகமும் செய்தார்கள். கொடுக்கல் வாங்கலில் சுத்தம்கிடையாது, சொந்த மனைவிக்கு துரோகம் செய்வோர் எத்தனை பேர் என்னென்ன பாவங்கள் இருக்கின்றதோ அத்தனையும் செய்கிறார்கள். ரமழான் வந்தால் கடைசி பத்தை இஹ்திகபிற்காக செலவிட்டு துஆ கேட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைகிறார்கள் அல்லாஹ் பாதுகாக்கவேண்டும். ஆது கூட்டம் செய்த தவறு என்ன தெரியுமா ? " ஒவ்வொரு மலைமுகடுகளிலும் பிரமாண்டமான கோட்டைகளை கட்டுவதிலும் கோபுரங்களை கட்டுவதிலும் அதிகமான பணங்களையும் நேரத்தையும் செலவு செய்கிறீர்களா ? இந்த உலகத்தில் என்றென்றும் நிரந்தரமாக வாழவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருகின்றீகளா ? ஹூத் அலைகிவஸ்ஸலாம் அவர்களை பார்த்து அல்லாஹுதஆலா கேட்ட கேள்வியை அல் குரான் வசனமாக சொல்லுகிறான். அதே மாதிரி கோட்டைகளை கட்டுவதிலும் கோபுரங்களை கட்டுவதற்காகவும் எத்துனை பேர் ஹராதில் சம்பாதிக்கிறார்கள். ஐம்பது வருடம் தாண்டிவிட்டது போடுகின்ற அத்திவாரம் இருக்கின்றதே 150 வருடம் உறுதியானது யார் வாழ்வதற்காக ?? கட்டுவதில் பிரச்சினை கிடையாது அதற்காக எத்தனை தொழுகைகள் களாவாக்கப்படுகிறது. கட்டப்பட்ட வீட்டினுடைய குடிபுகும் விழாவிற்கு போகின்றவர்கள் எத்தனை நூறுபேர் எத்துனை தொழுகைகளை களாவக்குகிறார்கள். இந்த கட்டிடத்தை அளவுக்கதிகமாக கட்டியதால் தான் ஆது கூட்டம் அழித்து நாசமாக்கபட்டார்கள் என்று அல் குரான் சொல்லுகிறது.
சிந்தகவேண்டாமா சகோதர்களே நாம் என்ன செய்துகொண்டு இருக்கின்றோம் ? அல்லாஹ்வுடைய தண்டனைக்கு பயபடாமல் சர்வ சாதரணமாக இன்று இந்த பாவங்களை செய்துகொண்டு இருக்கின்றோம். அல்லாஹ் பாதுகாக்கவேண்டும் எம் அனைவரையும்.
அடுத்து வந்தார்கள் நபி ஸலிஹ் அலைகிவஸ்ஸலாம்
சிந்தகவேண்டாமா சகோதர்களே நாம் என்ன செய்துகொண்டு இருக்கின்றோம் ? அல்லாஹ்வுடைய தண்டனைக்கு பயபடாமல் சர்வ சாதரணமாக இன்று இந்த பாவங்களை செய்துகொண்டு இருக்கின்றோம். அல்லாஹ் பாதுகாக்கவேண்டும் எம் அனைவரையும்.
அடுத்து வந்தார்கள் நபி ஸலிஹ் அலைகிவஸ்ஸலாம்
இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிப்பில் நபி ஸலிஹ் அலைகிவஸ்ஸலாம் அவர்களுடைய கூட்டத்திற்கு வழங்கபட்டதண்டனையை பற்றி பார்போம்..
No comments:
Post a Comment