அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகதுஹு
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.
பகுத்தறிவாதம் பேசும் சில அன்பர்கள் மூடநம்பிக்கையை வேரறுப்பதாக எண்ணி தங்களுடைய சிந்தனைதான் சரியென நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களின் சாரம்சங்கள்...
1. புராக் விமானத்தில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணம் செய்த நிகழ்ச்சிக்கு அறிவியல் ரீதியான நிரூபணங்கள் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்?
2. 1400 ஆண்டுகளுக்கு முன் விமானம் கண்டு பிடிக்கப்படாத காலத்தில் மேற்கூறிய புராக் விமானம் எந்த ஆற்றலின் உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது?
எனவே இறை ஆற்றலினால்தான் இச்சம்பவம் நடந்ததாகக் கதை அளக்க முடியுமே தவிர அதில் அறிவியல் உண்மை இருப்பதாக ஒரு போதும் இவர்களால் நிரூபித்துக் காட்ட முடியாது என்பது அவர்களின் வாதம்.
ஒரு சிறிய உதாரணம் இவர்களை 1905 ஆம் ஆண்டிற்கு கூட்டிச் செல்வோம். அப்போது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்கிற 25 வயது விஞ்ஞானி ஒரு பிரம்மாண்டமான சிந்தனையை தத்துவமாக நுழைத்து மொத்த விஞ்ஞானிகளையும் கலக்கி விட்டார். அவர் ஆய்வு செய்தது ஒளியைப்பற்றி மேற்சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களுக்கும் ஒளியைப்பற்றிய விபரம் தெரிந்தால் பகுத்தறிவாதிகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் இவர்கள் மட்டுமல்ல இனி எவரும் இது மாதிரி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி பேச மாட்டார்கள்.
உதாரணமாக இந்த நிகழ்வை பார்போம். பஸ் நிலையத்தில் நிற்கும் போது உங்களை ஒரு பஸ் கடந்து போகிறது. பஸ்சிற்குள் ஒரு சிறுவன் பந்தை எறிந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். பஸ் போகும் திசையில் 20 அடி தூரத்திற்கு பந்தை எறிகிறான். அந்த ஒரு செக்கனில் பஸ் 20 அடி நகர்கிறது. பந்தின் வேகம் என்ன? பையனுக்கு செக்கனுக்கு பத்து அடி வேகம். ஆனால் வெளியிலிருந்து பார்க்கும் உங்களுக்கு நாற்பது அடி (20 + 20 = 40 அடி) இவற்றில் எது உண்மை? இரண்டுமே உண்மைதான். வேகம் என்பது பார்ப்பவர்களைப் பொறுத்திருக்கிறது. புரியும் என்ற நம்பிக்கையில் தொடருகின்றேன். கொஞ்சம் கவனமாக கவனியுங்கள். அடுத்து நம் பூமியும் ஒருவகையில் பஸ்தான். சூரியனைச் சுற்றிவரும் பஸ். என்ன வேகம்? ஒரு செக்கனுக்கு சுமார் 18 மைல். பூமி தன்னைத்தானே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ.) வேகத்தில் சுழல்கிறது சரி ஒளியின் வேகம் ? மிகவும் அதிகம். ஒரு செகண்டுக்கு 1,86,282 மைல்கள் நிருபிக்கபட்டது . (வெற்றிடத்தில் ஒளி வேகம் விநாடிக்கு 299,792,458 மீட்டர்களாகும். இதனை 2.99*108ms−1 அல்லது 3*108ms−1 (வெற்றிடத்தில் மட்டும்) என்றும் கூறலாம். ஒளியின் வேகம் ஒரு மாறிலி (constant) ஆகும்.)
பஸ்சில் எறிந்த பந்துக்கு நேர்வது போல் பூமியில் எறியப்பட்ட ஒளிக்கதிருக்கு நேருமா? அதாவது பூமி சுற்றிக் கொண்டு போகும் திசையிலும், அதன் எதிர்திசையிலும் ஒளியின் வேகம் மாறவேண்டாமா? அதாவது பூமி சுற்றிக்கொண்டு போகும் திசையில் (186282+18 மைல்) ( 299792.458 + 30 கி.மீ.) ம் எதிர்திசையில் (186282+18 மைல்) ( 299792.458 + 30 கி.மீ.) ம் இருக்க வேண்டுமே! அப்படித்தான் தோன்றுகிறது பார்ப்போம்.
'மைக்கல்சன்' என்கிற விஞ்ஞானி 1887-ல் ஒளியின் வேகத்தை நுட்பமாகக் கணக்கிட்டுப் பரிசோதனை செய்தார். பூமி சுற்றும் திசை, எதிர்திசை, ஏன் எல்லாத் திசைகளிலும் ஒளியின் வேகத்தை அளந்து பார்த்தார். எந்த திசையிலும் ஒளியின் வேகம் மாறவில்லை! அதே 186282 மைல் 299,792,458 மீட்டர்- ஒரு நொடிக்குப் பயணமாகிறது.
விஞ்ஞானி ஐன்ஸ்டைனும் தன் ஆய்வின் முடிவில் ஒளியின் வேகம் மாறாமல் இருப்பது பரிசோதிக்கப்பட்ட நிஜம். அதற்கு சரியான ஒளியின் வேகம் எதிர்பாராத விநோதமான சித்தாந்தங்களை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார்.
ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டின் படி ஒளியின் திசைவேகம் தான் இப்பிரபஞ்சத்தின் வேக எல்லையாகும்.ஒளி என்பது போட்டான் (photons) எனும் நிறை இல்லாத ஒரு துகள் ஆகும்.இத்துகள்கள் புவியீர்ப்பு விசைக்கு கட்டுப்படாததால் ஒளியின் திசைவேகம் தான் இப்பிரபஞ்சத்தின் வேக எல்லை என ஐன்ஸ்டின் கூறியுள்ளார். ஒளியின் திசைவேகத்தை விட அதிக திசைவேகத்திற்கு எந்த ஒரு பொருளையும் முடுக்குவிக்க இயலாது.
ஒளியின் வேகத்தை ஐன்ஸ்டின் தனது சார்பியல் கோட்பாட்டின் மூலமே விளக்கினார்.
E=mc2
இதில் c என்பதே வெற்றிடத்தில் செல்லும் ஒளியின் வேகம் என ஐன்ஸ்டின் கூறினார்.
மறுபடியும் பஸ். நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நகர்வதால் உங்களில் சிறுமாறுதல்கள் நிகழ்ந்தாக வேண்டும் என்றார் ஐன்ஸ்டைன் என்ன மாறுதல்கள்?
இலகுவான புரியலாம் . பஸ் போகும் திசையில் நீங்கள் செல்லும் போது கொஞ்சம் சுருங்குகிறீர்கள். அதே சமயம் உங்கள் எடை கொஞ்சம் கூடுதலாகிறது! உங்கள் கடிகாரம் கொஞ்சம் மெதுவாக ஓடுகிறது என்றார். அப்போது தான் ஒளியின் வேகம் மாறாமல் இருப்பதை விளக்க முடியும்?
ஒரே ஒரு விஷயம் பூமியில் கிடைக்கக் கூடிய நேரங்களில் இந்த எடை கூடுவது, முகம் சப்பட்டையாவது, கடிகாரம் மெதுவாக ஓடுவது எல்லாம் மிகக் மிகக் குறைவாக அளவிடக் கூட முடியாத படி அவ்வளவு நுட்பமாக இருக்கும். எப்போது அளவிட முடியும்? கொஞ்சம் அதிவேகத்தில் பஸ் போனால்! உதாரணத்துக்கு ஒரு செக்கனுக்கு 2,60,000 கி.மீ வேகத்தில் போனால் அப்போது என்ன ஆகும்? ஆறடி மனிதன் மூன்றடியாக சுருங்கிவிடுவான். அவன் நூறு கிலோ எடை இருநூறு கிலோவாகி விடும். இரண்டு வருஷம் ஒரு வருஷமாகி விடும். இதுதான் ஐன்ஸ்டைனின் சிறப்பு சார்பியல் தத்துவம்.
ஐன்ஸ்டைன் 1905 இல் தன்னுடைய சிறப்பு சார்பியல் கொள்கையை விளக்கும் இரண்டு கட்டுரைகளை எழுதினார். அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் சுருக்கமாக கீழே இருக்கின்றன.
1. ஒளியின் மாறாவேகம் - ஒரு வெற்று ஊடகத்தில் ஒளியின் வேகம் அது வெளிப்பட்ட இடம் நிலையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே அளவாகத்தான் இருக்கும்.
2. சார்பு கருத்து - இரண்டு பொருட்கள் ஒரே வேகத்தில் இயங்கும் போது ஒன்றில் ஏற்படும் மாற்றத்திற்கான இயல்பியல் விதிகள் இன்னோரு பொருளிலும் அதே மாற்றத்தை கொண்டுவரும். அதாவது பார்ப்பவருடைய பார்வையை பொருத்து இயற்பியல் விதிகள் மாறு படாது.
இந்த சிறப்பு சார்பியல் கொள்கை இன்னும் சில கருத்துக்களை முன் வைத்தது.
1. ஒளியின் வேகத்தை விட எந்த பொருளும் போக முடியாது.
2. அதிக வேகத்தில் சென்றால் நேரம் வழக்கத்தை விட மெதுவாக செல்லும்
வேகத்தால் ஏற்படும் இந்தச் சுருக்கங்களை லோரன்ஸியன் கண்டராக்ஷன் என்பார்கள் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறதல்லவா? ஏன்? இதெல்லாம் நம் அன்றாட அனுபவங்களும், பகுத்தறிவுக்குப் புறம்பாக இருக்கிறது என்று பகுத்தறிவாளர்கள் நினைக்கலாம். ஆனால் ஐன்ஸ்டைன் சொன்னது ஏதோ குருட்டுபோக்குச் சிந்தனையல்ல. பரிசோதனைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டது. இது தான் அவருடைய மேதைமைக்கு சாட்சி.
விஞ்ஞானி ஐன்ஸ்டைன் சொல்லும் மாறுதல்களை உணர மிகமிக வேகம் தேவைப்படும் ஒளியின் வேகத்துக்கு மிக அருகில் சென்றால் தான் இதெல்லாம் அளவிட முடியும். அன்றாட வேகங்களில் நல்ல வேளை இந்த விளைவுகளை உணரவே முடியாது.
ஒளியின் வேகத்தின் அருகில் செல்லக் கூடியவை அணுக்கருக்கள் இருக்கும் துகள்கள் (போட்டான்(photons), நியூட்ரான்(Neutron), எலக்ட்ரான்(Electron) என்று கேள்விப்பட்டிருப்பீர்களே) இந்த வகைத்துகள்களில் ஒன்றான 'பைபோசான்' என்ற ஒரு துகளை அதிக வேகத்திற்கு உள்ளாக்கிய பரிசோதனை செய்தபோது ஐன்ஸ்டைன் சொன்னது போல் அதன் எடை கூடியது! அதன் வாழ்நாள் அதிகமானது! விஞ்ஞான உலகம் ஸ்தம்பித்தது! நோபல் பரிசு ஐன்ஸ்டைனைத் தேடி வந்து சேர்ந்து கொண்டது.
மேற்கண்ட ஆய்வில் ஒளியின் வேகத்தில் பயணிக்க செய்பவருக்கு என்ன நேர்கிறது? என்பதைப் பார்ப்போம். ஒளி வேகத்தில் இயங்கக்கூடிய வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு 'காலம்' என்பது இயங்குவதில்லை. இது தான் அறிவியல் உண்மை. ஆனால் ஒளிவேக வாகனத்தில் பயணம் செய்யக் கூடியவரை வழியனுப்ப வந்தவர்களுக்கு அனந்த கோடி வருஷங்கள் ஆகி இருக்கும்!
அதாவது ஒருவர் ஓரிடத்திலிருந்து ஒளி வேக ஊர்தியில் ஒரு நாள் பயணம் (ஒரே ஒரு நாள்) பயணம் புறப்படுகிற நபர்; அவருக்கு வயது 45 அவரை வழியனுப்ப வந்த அவரது மனைவி வயது 40 மகன் இவர்கள் வழியனுப்ப இவர் விண்வெளி பயணம் மேற்கொள்கிறார். இவர் பயணிப்பது ஒளி வேக ஊர்தி நொடிக்கு 1,86,282 மைல் வேகம் ஒரே ஒரு நாள் பயணத்தை முடித்துவிட்டு அதே இடத்திற்கு திரும்புகிறார். இப்போதும் அதே அவர் குடும்பத்தார் வரவேற்க வந்துள்ளனர். அந்த நபர் வரவேற்கப்படுகிறார். ஊடகங்கள் பேட்டி எடுகின்றார்கள். குறித்த நபரிடம் ; நீங்கள் எத்தனை வருடம் விண்வெளியில் ஒளிவேக வாகனத்தில் பயணித்தீர்கள்?
'எத்தனை வருடங்களா...? ஒரே ஒரு நாள்...!'
'உங்கள் வயது என்ன ?'
45 வயதும் ஒரு நாள் மட்டுமே! என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவர் கேட்கிறார்... 'யார் அந்த பாட்டியம்மா..?' ?எங்கோ பார்த்த நினைவில் இருக்கும் நபராக தெரிகிறார் ?
அவர் உங்கள் மனைவி தான்!!!'
இது காலத்தின் விபரீத விளையாட்டு இது விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்ட உண்மை. பொய் அல்ல. பித்தலாட்டம் அல்ல உண்மை! அதுவும் தெளிவான உண்மை!! ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது காலம் என்பது இயங்குவது இல்லை என்பது நிரூபணமாகிறது.
சரி விஷயத்திற்கு வருவோம். இறைவன் ஒவ்வொரு படைப்பையும் ஒவ்வொரு பொருளைக் கொண்டு படைத்திருக்கிறான். மனிதனை படைக்க மண்ணைப் பயன்படுத்தியுள்ளான். ஜின்களைப் படைக்க நெருப்பை பயன்படுத்தியுள்ளான். வானவர்களை ஒளியால் படைக்த இறைவன் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களையும் ஒளியால் படைத்துள்ளான். 'புராக் என்ற வாகனம் தன் பார்வை எட்டிய தூரத்தில் அது தன் குளம்பை எடுத்து வைக்கின்றது.' (நூல் முஸ்லிம் 234) எவ்வளவு பெரிய உண்மை.
ஒளியினால் அந்த புராக் வாகனம் படைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் தேவை? புராக் என்கிற வாகனத்தை ஓட்டி வந்தவர் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) என்கிற வானவர். அவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைக்க வந்துள்ளார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய நூரிலிருந்து (ஒளியிலிருந்து) வெளியானவர்கள் ஒரு சமயம் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் தன் ஊசியில் நூல் கோர்ப்பதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் பக்கம் வர அவர்களின் வெளிச்சத்தில் நூலை கோர்த்ததாக ஹதீஸ் காணக் கிடைக்கிறது.
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிழல் பூமியில் விழாது காரணம் ஒளிக்கு ஏது நிழல் இதுவும் ஹதீஸ்களில் உள்ளது.மேலும் விண்ணுலகில் பயணிக்கும் போது ஆறடி மனிதன் மூன்றடியாக குறைவதாக கண்டோம். அந்த வேகத்தில் பயணிக்கும் போது பயணிப்பவரின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 தடவை துடிப்பது சாத்தியமாகாது என்பதை பார்க்கும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விண்வெளியில் பயணிப்பதற்கு சாதகமாக இருப்பதற்கு வேண்டி வானவர் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களால் இதயத்தில் தக்க மாற்றம் செய்யப்பட்டதையும் ஹதீஸ்களில் காணமுடிகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விண்வெளி பயணம் இரவு இஷா தொழுகைக்குப்பிறகு இரவில் படுத்திருக்கும்போது அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்த விண்வெளிப் பணயத்தைப்பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லும் போது 'எனது பயணம் இரவுப்படுக்கையின் சூடு ஆறுவதற்குள் நடந்து முடிந்தது' என்கிறார்கள். ஒரு நாள் பயணமாக இருந்திருந்தால் பூமியில் அனந்த கோடி வருஷங்கள் ஆகியிருக்கும். எனவே அவர்களின் விண்வெளிப்பயணம் ஒரு சில நிமிடப்பொழுதில் நடந்து முடிந்திருக்கிறது. பகுத்தறிவாத நண்பர், விண்வெளி பயணம் முடித்துவிட்டு மீடியாக்களிடம் பேட்டி கொடுக்கும்போது என் விண்வெளிப்பயணம் ஒரே ஒரு நாள் மட்டும்தான் என்கிறார். ஆனால் பூமியில் பலவருடங்கள் உருண்டோடியுள்ளது.
இதே நிலை நாளை மறுமையில் விசாரணைக்காலம் நடைபெறும் நாளில், குற்றவாளிகள் தாங்கள் இப்பூவுலகில் ஒரு நாழிகையைத் தவிர அதிக நாட்கள் தங்கி இருக்கவில்லை என்று சத்தியம் செய்வார்கள். இவ்வாறே இவ்வுலகத்திலும் அவர்கள் பொய்யையே பிதற்றிக் கொண்டிருந்ததாக குர்ஆனில் அல்லாஹ் (30.55) கூறுகிறான். காரணம், (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும். (குர்ஆன் 22:47) அல்லது பூமியின் ஆயிரம் வருடங்களுக்கு சமமாகவோ (70.4-7) கூட இருக்கலாம். இதுதான் அந்த மனிதர்களின் குழப்பத்திற்கு காரணம்.
இந்த விஞ்ஞான உண்மையை குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறுகிறது. எனவே முஸ்லிம்கள் குறிப்பிடும் இறைவனும் திருகுர்ஆனும் கற்பனையோ கட்டுக்கதையோ அல்ல. இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விண்வெளிப் பயணம் தான் இன்றைய விண்வெளிப் பயணங்களின் முன்மாதிரிப் பயணமாக இருந்தது என்பது உறுதி.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிஹ்ராஜ் எனும் விண்ணுலகப் பயணத்திற்கு இந்த அறிவியல் நிரூபணம் போதும் என நினைக்கிறேன்.
No comments:
Post a Comment